Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: துலாம் - வாழ்க்கை வளமாகும்!

துலாம் ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22!

வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் துலாக்கோல்போல் நியாயத்தின் வழியில் நின்று செயல்படும் துலாராசி அன்பர்களே!

13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மகரராசி என்பது உங்களு நான்காம் இடம். நான்காம் இடத்தில் அமர்ந்த குருபகவான் உங்களுக்குக்கிடைக்க வேண்டிய சுகங்களையும் வசதிகளையும் தடுத்துவந்தார். தற்போது அவர் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5 - ம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார். இது வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பெயர்ச்சி என்றே சொல்ல முடியும். இதுவரை இருந்த தடைகளும் தாமதங்களும் விலகும்.

குருபகவான்
குருபகவான்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள், பிரச்னைகள், சண்டைகள் எல்லாம் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த சச்சரவுகள் நீங்கி இனி அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொது இடங்களில் உங்களுக்கு மரியாதை அமர்க்களப்படும்.

உங்கள் அணுகுமுறை மாற்றிக்கொள்வீர்கள். தனிப்பட்ட ரசனையும் அதிகரிக்கும். குலதெய்வத்துக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனைச் செய்து மன நிம்மதி பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும்.

குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீதே விழுவதால் உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும். அதேபோன்று 9 ம் இடமான மிதுனம் 11 ம் வீடான சிம்மம் ஆகியவற்றையும் குருபகவான் பார்க்கிறார். 9 ம் வீட்டை குரு பார்ப்பதால் தந்தையுடன் இருந்த கருத்து மோதல்கள் தீரும். உறவினர்களால் இனி ஆதாயம் உண்டாகும். பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

உங்களின் 11 ம் வீடான லாபஸ்தானத்தை குருபகவான் பார்வையிடுவதால் சகோதர உறவுகளுடன் இருந்த வருத்தங்கள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். நன்கு உறங்குவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் பதவி நிலைக்கும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணம் அதிகமாகவே வரும். பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். அனுபவம் பளிச்சிடும். சகலரின் அன்பையும் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் மட்டும் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ராகு பகவானுக்குரியது. எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உணவு விஷயங்களில் எப்போதும் கட்டுப்பாட்டோடு இருங்கள். செரிமானப் பிரச்னைகள் வந்துபோகும். அதேபோன்று குடும்பத்தில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தனது நட்சத்திரத்திலேயே சஞ்சாரம் செய்கிறார். இதனால் தேவையற்ற கவலைகள் அதிகரிக்கும். சிலர் தவறான பழக்கங்களுக்கு ஆட்படுவீர்கள். மதிப்பு மிக்க பொருள்களைக் கையாளும் போது கவனம் தேவை. அனைத்துப் பணிகளிலும் அலட்சியம் இல்லாமல் பணியாற்ற வேண்டும்.

திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன்

மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளில் சிக்கி சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரத் தலம்: திருச்செந்தூர்

வணங்க வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு