Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: விருச்சிகம் - பணிச்சுமை அதிகரிக்கும்!

விருச்சிக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021- 22!

யாராக இருந்தாலும் தாட்சண்யம் பார்க்காமல் முகத்திற்கு நேராக உண்மையைச் சொல்லும் துணிவுடைய விருச்சிக ராசி அன்பர்களே!

13.11.21 அன்று குருபகவான் தங்களின் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்குச் செல்கிறார். மூன்றாம் இடத்திலிருந்தபோதும் குருபகவான் உங்கள் ராசிக்குப் பெரிய நன்மைகள் ஏதும் செய்யாமல் இருந்தார். ஆனால் உங்களுக்கு 11 ம் வீட்டைப் பார்த்து அதன் மூலம் உங்களை வெற்றிகரமாக இயங்க வைத்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த நிலை மாறுகிறது. குருபகவான் நான்காம் இடத்தில் அமர்ந்து பலன்தரும் காலகட்டத்தில் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம். அதே நேரம் குருபகவானின் நட்சத்திர சஞ்சாரமும் பார்வை பலமும் உங்களுக்கு அபரிமிதமான நன்மைகளைக் கொடுக்காவிட்டாலும் கெடுபலன்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்!
குருப்பெயர்ச்சி பலன்கள்!

பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். அதன் பொருட்டு அலைச்சலும் அதிகரிக்கும். சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதும் அவசியம். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு சிந்தித்து அனுபவஸ்தர்களுடன் கலந்து எடுப்பது நல்லது. தாயார் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அவரின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நீர், நெருப்பு, மின்சாரத்தைக் கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற சந்தேகம் ஈகோ பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவது எதிர்காலத்துக்கு நல்லது.

குருபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மிதுனத்தைப் பார்ப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். அந்நியர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அவர்களின் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். உயர் கல்வி - உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் மிகவும் கட்டுபாடு தேவை. அதிகமாகவே அல்லது நேரந்தவறியோ சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

குருவித்துறை குருபகவான்
குருவித்துறை குருபகவான்

தங்களின் ராசிக்கு பத்தாம் வீடான சிம்மத்தை குருபகவான் பார்ப்பதால் வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொல்லை தந்த பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டிய காலம் இது. எனவே எதற்கெடுத்தாலும் போலீஸ், கேஸ், கோர்ட் என்று செல்ல முயல வேண்டாம்.

உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான துலாத்தை குருபகவான் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்கு செலவிடுவீர்கள். தினமுமே யோகா, தியானம் செய்யும் நல்ல பழக்கங்களைப் பின்பற்றுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுவெளியில் பேசும்போது வரம்பு மீறி விமர்சனம் செய்ய வேண்டாம். எல்லோரையும் கொஞ்சம் அரவணைத்துப் போங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். இளமையாக உணர்வீர்கள். பேச்சில் தெளிவும் கம்பீரமும் அதிகரிக்கும். பயம் விலகும். குடும்பத்தின் வருமானம் கணிசமாக உயரும். குழந்தை இன்றித் தவிக்கும் தம்பதிக்கு இந்தக் காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி பலன் கொடுக்கும். சகோதர உறவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள்.

சதயநட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மனதில் துணிவும் நம்பிக்கையும் பிறக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பொது இடங்களில் உங்களுக்கான மரியாதை தவறாமல் கிடைக்கும். தந்தைவழிச் சொத்துகளை சரிசெய்வீர்கள். வேலை தேடும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அயல்நாடு செல்லும் முயற்சிகள் நல்லவிதமாக முடியும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது குருபகவானின் சொந்த நட்சத்திரமாகும். எனவே இந்தக்காலகட்டதில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியே கிட்டும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து உயர்கல்வி, உத்தியோகம் அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கூடி வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கொஞ்சம் அலைக்கழித்தாலும், இறுதியில் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தரும்.

பரிகாரத் தலம்: கருவூர்

வழிபட வேண்டிய தெய்வம்: பசுபதீஸ்வரர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு