Published:Updated:

`பதவி உயர்வு கிடைக்கும்’ - கடக ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்!
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்!

கடக ராசி வியாபாரிகள் உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்பராசியில் 13.4.2022 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது கடக ராசிகு எட்டாம் இடம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானமாகும். குருபகவான் எட்டில் மறைவது அத்தகைய நற்பலன்களைத் தராது என்று சொல்வார்கள். ஆனால் கும்பராசியில் சஞ்சரிக்கும் குருபகவானோ கடக ராசிக்கு தன் பார்வையாலும் நட்சத்திர சஞ்சாரத்தாலும் மிகுந்த நற்பலன்களையே வழங்குவார். கடக ராசியைச் சேர்ந்த வியாபாரிகள் உத்தியோகஸ்தர்கள் கலைஞர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் என்பதை இப்போது காண்போம்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

வியாபாரிகள் : தொழிலில் பற்றுவரவு சுமுகமாக நடக்கும். பலகாலமாக நிலுவையில் இருக்கும் பாக்கித் தொகையை இப்போது வசூல் செய்வீர்கள். புதிய இடத்துக்குக் கடை அல்லது வேலையிடத்தை மாற்றும் சந்தர்ப்பம் கனிந்துவரும். புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். புதிய லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். முரண்டு பிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பார். தொழிலில் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்த வேண்டியது அவசியம். இல்லை என்றால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்: பணி செய்யும் சூழல் உங்களுக்கு சாதகமாக மாறும். இதுவரை தடைப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியன கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார். தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமார். என்றாலும் பிற ஊழியர்கள் குறித்த வதந்தியைப் பிறரிடம் பேச வேண்டாம். யாராவது பேச வந்தாலும் கேட்க மறுத்துவிடுங்கள். புதிய வேலை தேடுபவர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம். உங்கள் தேவைகளைத் தற்போது பணி செய்யும் நிறுவனத்திடமே கேட்டுப் பெறலாம்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
ஆலங்குடி குருபகவான் கோயில்

கலைஞர்களே! இந்தக் காலகட்டத்தில் விமர்சனங்களைத் தாண்டி சாதித்துக் காட்டுவீர்கள். பழையபடி உங்கள் புகழ் வெளிப்படும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மறைந்திருக்கும் உங்களின் திறமையையும் அறிவையும் வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றிப்படிகளில் உங்களை ஏறச் செய்யும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

பரிகாரம்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரை வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். சகலமும் நன்மையாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு