Published:Updated:

`கவனம் அவசியம்’ - கன்னி ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

`கவனம் அவசியம்’ - கன்னி ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

குருபகவான் ஆண்டுக்கொருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சாரம் செய்வார். இதையே குருப்பெயர்ச்சி என்கிறோம். 13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசி என்பது கன்னிராசிக்கு ஆறாம் இடம் . பொதுவாக ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் நல்ல பலன்களை வழங்கமாட்டார் என்பது நம்பிக்கை. ஆனால் கன்னி ராசிக்கு அவர் தன் பார்வைகளால் சில நல்ல பலன்களை வாரி வழங்க இருக்கிறார். இதன் அடிப்படையில் கன்னி ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், கலைஞர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள்கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.

குருபகவான்
குருபகவான்

வியாபாரிகள் : தொழிலில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டிய நேரம். அதே வேளை பெரிய முதலீடுகளில் இறங்க வேண்டாம். பணியாள்களிடம் பெரிய ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. தேவையில்லாமல் தொந்தரவு கொடுப்பார்கள். போட்டிகள் அதிகரிக்கும். லாபம் குறைவாகவே வரும். வரவேண்டிய நிலுவையை வசூலிக்க ஒருமுறைக்கு இருமுறை அலைய வேண்டிவரும். என்றாலும் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டுப் புதிய தொழிலில் கால்பதிக்க வேண்டாம். கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

உத்தியோகஸ்தர்கள்: பணிச்சுமை வழக்கத்தை விட அதிகமாகும். ஆனால் அதற்கேற்ப நற்பெயரும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் பலன் தரும். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் உற்சாகமாகவே காணப்படுவார்கள்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்கள் : இதுவரை இழந்த புகழை மீண்டும் பெற முயலவேண்டிய காலகட்டம். யதார்த்தமான படைப்புகளின் மூலம் கவனம் பெறுவீர்கள். அரசு பாராட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் பல முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்குங்கள். வாய் பேச மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு