Published:Updated:

`லாபம் அதிகரிக்கும்’ - சிம்ம ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

சிம்ம ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், கலைஞர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22!

குருபகவான் ஆண்டுக்கொருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சாரம் செய்வார். இதையே குருப்பெயர்ச்சி என்கிறோம். 13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசி என்பது சிம்மத்துக்கு ஏழாம் இடம் . பொதுவாக ஏழாம் இடத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களையே கொடுக்கும். அந்த வகையில் இந்தப் பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்களை சிம்ம ராசிக்காரர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வோம்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

வியாபாரம் :

இதுவரை தொழிலில் நஷ்டம் இல்லை என்றாலும் லாபம் காணவிடாமல் இருந்த நிலை இப்போது மாறும். லாபம் அதிகரிக்கும். புதிய உற்சாகத்துடன் தொழில் செய்வீர்கள். உங்களின் அனுபவமும் உழைப்பும் அதற்கான பலனைக் கொடுக்கும். இந்தக் காலகட்டத்தில் தொழிலை விரிவுபடுத்தக் கேட்டிருந்த வங்கிக் கடனுதவிகள் கிடைக்கும். புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு சம்பந்தமான தொழில்கள் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். பங்குதாரர்கள் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். அரசாங்கத்திலிருந்து கிடைக்க வேண்டிய உரிமம் அனுமதி ஆகியன கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் : கடுமையான உழைப்பைச் செலுத்தியும் செய்யும் வேலையில் கெட்ட பெயர்தான் மிஞ்சியதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலகட்டம் மிகுந்த நற்பலன்களை வழங்க இருக்கிறது. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மேலதிகாரிகள் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். மேல் நாடுகளிலிருந்து வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பழையபடி அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்கள் : இதுவரை உங்களின் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காமல் வருந்திய கலைஞர்களுக்கு உரிய சந்தர்ப்பம் வாய்க்கும். பெரிய நிறுவனங்கள் உங்களுக்குரிய வாய்ப்புகளைக் கொடுக்கும். அரசின் கௌரவமும் விருதுகளும் கிடைக்க வாய்ப்புண்டு.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி வளமான வாழ்வுக்கு அடித்தளம் இடும் காலகட்டமாகவும் மன அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை திருவலிதாயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை வணங்குங்கள். புற்று நோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு