Published:Updated:

`வியாபாரம் மிளிரும்’ - துலா ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

துலாம் ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

குருபகவான் 13.11.2021 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மகரராசி என்பது துலாம் ராசிக்கு 4 - ம் இடம். நான்காம் இடத்தில் அமர்ந்து குருபகவான் உங்களுக்கு நன்மைகள் ஏதும் செய்யவில்லை. இப்போது அவர் உங்களின் பூர்வ புண்ணியஸ்தானம் எனப்படும் 5 - ம் வீட்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார். இது வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பெயர்ச்சி என்றே சொல்ல முடியும். இந்தப் பெயர்ச்சி, துலாம் ராசியைச் சேர்ந்த வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் என்பதைப் பார்ப்போம்.

குருபகவான்
குருபகவான்

வியாபாரிகள்: நாலாபக்கமும் இருந்துவந்த போட்டிகளால் முடங்கிப் போன தொழில் இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் சீராகும். உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். அந்த முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். முரண்டு பிடித்த பணியாளர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு முழுமையாக ஒத்துழைப்பு தருவார்கள். கணினி, உணவு, தரவு வகை வணிகங்களில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து இனி இணக்கமாக நடந்துகொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகச் சூழ்நிலை இனிமையாக மாறும். சக ஊழியர்களிடையே இருந்துவந்த போட்டி பொறாமைகள். நீங்கும். அனைவரும் உங்களோடு நட்பு பாராட்டுவார்கள். பணிச்சுமை மெள்ள மெள்ளக் குறையும். இதுவரை கடுகடுத்துவந்த மேலதிகாரிகள் உங்களோடு சமாதனத்தைக் கடைப்பிடிப்பார்கள். குறை சொல்ல மாட்டார்கள். தடைப்பட்ட பதவி உயர்வுகள் தேடிவரும். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்கள்: திறமையை வெளிப்படுத்தும் நேரமிது. திறமைக்கு ஏற்ப அரசு விருதுகள் தேடிவரும்.

மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்னைகளில் சிக்கி சிதறிக்கிடந்த உங்களைச் சீர்செய்வதுடன் மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருச்செந்தூரில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானைச் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு