திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி - பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திர பலன்களை வழங்குகிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூராடம், உத்திராடம், 
திருவோணம், அவிட்டம்

பூராடம்

சுக்கிரனின் அம்சமாக வருவது பூராட நட்சத்திரம். `இதில் பிறந்தவர்கள் பலருக்கும் ஆலோசனை அளிப்பவர்கள், தாய்ப் பாசம் மிகுந்தவர்கள், பொய் சொல்லாதவர்கள், பயணத்தில் விருப்பம் கொண்டவர்கள்’ என்கிறது ஜாதக அலங்காரம். இது, முழுக்க தனுசு ராசியில் அமைந்த நட்சத்திரம். தனுசுவுக்கு 3-ல் அமர்ந்து பலன் தரப் போகிறார் குரு; 7,9,11 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூராடம், உத்திராடம், 
திருவோணம், அவிட்டம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். அதேநேரம், எல்லாவற் றையும் எல்லோரிடமும் பகிரவேண்டாம். சிலர், உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர்களாகவும், பார்க்காதபோது உங்களைப் பற்றி வேறு மாதிரியாகவும் பேசுவார்கள். ஆனாலும், நீங்கள் அனைவரையும் சரியாகக் கணித்து கவனமாக நடந்துகொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதைச் சிறிது காலத்துக்கு நிறுத்திக்கொள்வது நல்லது. இடைவெளி விட்டுப் பழகுவதால் நன்மை விளையும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசு வகைக் காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். சுற்றுலா தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில், நிர்வாகத்தின் பாராமுகம் சற்றுச் சோர்வை ஏற்படுத்தும். அதேநேரம் எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும். பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி, தன்னம்பிக்கையை அளித்து சாதிக்க வைப்பதாக அமையும்.

உத்திராடம்

ங்கள் ஜன்ம நட்சத்திரம் உத்திராடம் 1-ம் பாதம் (தனுசு) எனில், இந்தக் குருப்பெயர்ச்சி காலம் பல சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குடும்பத்தில் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். புது வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூராடம், உத்திராடம், 
திருவோணம், அவிட்டம்

உறவினர் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்; பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் சுமாராகவே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த தற்போது முயற்சி செய்யவேண்டாம்.

உத்திராடம் 2, 3, 4 - பாதங்கள் (மகரம்) எனில், நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாக மடைவீர்கள். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும். ஷேர் மார்க்கெட்டில் பணலாபத்துக்கு வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பரபரப்பாகச் செயல்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும்; பாராட்டும் சலுகைகளும் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். புதிய முதலீடு செய்வதற்கான கடனுதவி கிடைக்கும். மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி, தீராத பிரச்னைகளைத் தீர்க்க புதிய வழிகளைக் காட்டுவதாக அமையும்.

திருவோணம்

ற்பனைக் கிரகமான சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. திருமால் அவதரித்த நட்சத்திரம். திருவோணம் முழுவதும் மகர ராசியில் அமைந்தது. குருபகவான், இந்த ராசியை விட்டு விலகி, 2 –ல் அமர்ந்து நீசபங்கம் பெறப் போகிறார். ஆகவே, பல வகைகளிலும் அனுகூலப் பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூராடம், உத்திராடம், 
திருவோணம், அவிட்டம்

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

தடைப்பட்ட காரியங்கள் முடியும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். சமயோசித அறிவால் எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழிச் சொத்து கைக்கு வரும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டினாலும், உங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருப்பார்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் செய்வதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சகல வகைகளிலும் அனுகூலமான பலன்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.

அவிட்டம்

ங்கள் ஜன்ம நட்சத்திரம் அவிட்டம் 1, 2 பாதங்கள் (மகரம்) எனில், நிறைய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கும் தருணத்தில் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பங்குச் சந்தையில் பணம் வரும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க உதவி கிடைக்கும். வாழ்க்கை யின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்துச் சொந்தங்கள் மற்றும் பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூராடம், உத்திராடம், 
திருவோணம், அவிட்டம்

உத்தியோகத்தில், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்துகொள்வீர்கள். இரு மடங்கு லாபம் உண்டு.

அவிட்டம் 3, 4 பாதங்கள் (கும்பம்) எனில், ஜன்ம குருவாக அமர்ந்து பலன் தரப் போகிறார் குரு பகவான். ஆகவே, பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கும். உங்கள் நட்சத்திர பாதம் இடம்பெற்றுள்ள கும்ப ராசிக்கு 5, 7, 9 ஆகிய வீடுகளை குரு பார்க்கவுள்ளதால், இதுநாள் வரை உங்களை ஒதுக்கியவர்களே உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்கிடையே வீண்வாக்குவாதம் வேண்டாம். எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும். திடீர் யோகம், பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் கௌரவம் உயரும். உங்கள் ஆலோசனைக்கு நிர்வாகத்தினர் முக்கியத்துவம் தருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் பாதிப்பில்லாமல் தொடரும்; வியாபார நிமித்தம் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி, புதிய பொறுப்புகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.