திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் பூசம், ஆயில்யம், மகம், பூரம்

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி - பூசம், ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்துக்கான பலன்களை வழங்குகிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூசம், ஆயில்யம், மகம், பூரம்

பூசம்

பூசம் முழுவதும் கடக ராசியில் அமைந்த நட்சத்திரம். இந்தப் பெயர்ச்சியில் குரு கடக ராசிக்கு 8-ல் மறைகிறார் என்றாலும், நீசபங்கம் பெறுகிறார். கடக ராசிக்கு 2, 4, 12 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூசம், ஆயில்யம், மகம், பூரம்

பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருக்கும் என்றாலும் வருமானத்துக்குக் குறை இருக்காது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது.

இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் பணப்புழக்கம் கணிசமாக உயரும். நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்கும் அரசாங்க வகைக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். அவற்றால் லாபம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் சுக ஸ்தானத்தைப் பார்க்கும் நிலை உள்ளதால், தாயாரின் ஆரோக்கியம் சீராகும்; அவருக்கான மருத்துவச் செலவுகள் குறையும்.

அலுவலகத்தில் பணிகளில் கவனம் தேவைப்படும். அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையாதபடி கவனமாக இருப்பது அவசியம். அவ்வப்போது சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

ஆயில்யம்

யில்யம் நட்சத்திரம் முழுவதும் கடக ராசியில் இடம்பெற்றிருப்பது. இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் கடக ராசிக்கு 2, 4, 12 ஆகிய வீடுகளைப் பார்க்க்கிறார். அதன் பலனாக பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட தீர்வுகளைக் காண்பீர்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவற்றால் சாதகமான பலன்கள் வாய்க்கும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூசம், ஆயில்யம், மகம், பூரம்

வீட்டில் கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயம் கிடைக்கும். அவ்வப்போது ஏற்படும் வேலைச்சுமையால் தூக்கம் குறையும். என்றாலும் பொறுமையுடன் சமாளிப்பீர்கள். தாய்வழிச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களின் படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் வருவ தற்கு வாய்ப்பிருக்கிறது. சகல காரியங்களிலும் எதிர்ப்புகள், தடைகள் குறையும்.

தாய்வழி உறவினர்கள் வகையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்கள் சிறிது முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத் தில் சக வியாபாரிகளால் ஆதாயம் கிடைக்கும். பற்று-வரவில் சுமுகமான போக்கைக் கடைப்பிடிக்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, முக்கிய முடிவுகளால் முன்னேற்றம் பெற வைப்பதாக அமையும்.

மகம்

ந்த நட்சத்திரத்தின் ஆதிக்க நாயகன், வேத - ஆகமங்களில் கரைகண்ட கேது கிரகம். இந்த நட்சத்திரத்துக்கு உரிய ராசி சூரியனின் சிம்ம ராசி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி நட்சத்திர மாலை, ‘தனத்தைத் தேட வல்லன், நினைத்தது முடிக்க வல்லன்...’ என்கிறது. மகம் முழுவதும் சிம்ம ராசியில் அமைந்த நட்சத்திரம்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூசம், ஆயில்யம், மகம், பூரம்

சிம்ம ராசிக்கு 7-ல் அமர்ந்து பலன் தரப் போகிறார் குரு. சிம்ம ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத் தில் வேலை கிடைக்கும். அவருக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். இளைய சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். பேச்சில் கனிவு பிறக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

உத்தியோகத்தில், புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.மேலதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். பதவிஉயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்து செய்யலாம். சில சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல் பட்டு, கூடுதல் லாபம் ஈட்டுவீர்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களுக்குப் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பூரம்

ந்த நட்சத்திரத்தின் அதிபதி பெண்ணாதிக்கம் உள்ள சுக்கிரன். ‘பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்’ என்றொரு வாக்கு இருக்கிறது. நட்சத்திர மாலை, ‘வாணிபஞ் செய்ய வல்லன், விரும்பியே கல்வி கற்கும், வெட்டெனப் பேச வல்லன்...’ என்கிறது. சிம்ம ராசியில் அமைந்த நட்சத்திரம் பூரம். சிம்ம ராசிக்கு 7-ல் அமர்ந்து பலன் தரப் போகிறார் குரு. ராசியையும், ராசிக்கு 3,11 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பூசம், ஆயில்யம், மகம், பூரம்

இதன் பலனாக இந்த நட்சத்திரக்காரர்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு, தடைகள் நீங்கி கல்யாணம் கூடிவரும்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சிலர் வீடு மாறும் வாய்ப்பு ஏற்படும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அலுவலகத்தில் பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களும் உதவுவார்கள். ஏற்றுமதி லாபம் தரும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு முன்னேற்றத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக அமையும்.