திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திர பலன்களை வழங்குகிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி

உத்திரம்

த்திரம் 1-ம் பாதம் (சிம்மம்) எனில், எதிலும் உங்கள் கை ஓங்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர், வங்கிக் கடன் உதவி கிடைத்துப் புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி

வாழ்க்கைத் துணைவர், உங்களுடைய புது முயற்சிகளுக்குப் பக்க பலமாக இருப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். முன்னேற்றம் தடைப்படாது.உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வியாபாரத்தில் விற்பனை எப்போதும்போல் நடைபெறும். சக வியாபாரிகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் 2, 3, 4-பாதங்கள் (கன்னி) எனில், குரு நீசபங்கம் பெற இருப்பதால் நல்லதே நடக்கும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சுயமுயற்சியால் முன்னேறுவீர்கள். சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். முன்கோபம் வேண்டாம். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உத்வேகமும் ஆதாயமும் தருவதாக அமையும்.

அஸ்தம்

ஸ்தம் முழுவதும் கன்னி ராசியில் அமையும் நட்சத்திரம். இந்தக் குருப்பெயர்ச்சியில் குரு பகவான் நீசபங்கம் பெறவுள்ளார். சகல விஷயங்களிலும் நன்மையே நடக்கும். குரு பார்வை பணவரவைத் தரும். குடும்பத்தில் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி உண்டாகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி

மகளுக்கு நல்ல மணமகன் அமைவார்; திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகைக் காரியங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறைந்து வருமானம் அதிகரிக்கும். தாமதப்பட்டு வந்த பதவி உயர்வு விரைவில் கிடைக்கும். புதிய சலுகை களும் வந்து சேரும். தற்போது வேலைபார்க்கும் இடத்திலேயே நற்செய்திகள் கிடைக்கும் என்பதால், புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். எனினும் மிகச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைத் திட்டமிட்டு செயல்படச் செய்து, அதன் மூலம் வெற்றிபெற வைப்பதாக அமையும்.

சித்திரை

சித்திரை 1, 2 பாதங்கள் (கன்னி) எனில், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சிலர் பூர்வீகச் சொத்தை விற்று விட்டு, புறநகர்ப் பகுதியில் குடியேறக் கூடும். உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் வாக்குத் தவற வாய்ப்புள்ளது; மாற்றுவழியையும் யோசித்து வைப்பது அவசியம்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி

இந்த நட்சத்திர அன்பர்களில் சிலருக்கு, கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்தும் வாய்ப்பு ஏற்படும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில், பணிச் சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.

சித்திரை 3, 4 -ம் பாதங்கள் (துலாம்) எனில், நீங்கள் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள்; இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புகழ், கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும். அலுவலகத்தில், பதவி- ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி, புகழையும் செல்வாக்கையும் பெற்றுத் தருவதாக அமையும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி புதிய பாதையைப் புலப்படுத்தும். உங்களின் துலாம் ராசியையும், அந்த ராசிக்கு 9, 11 ஆகிய வீடுகளையும் குரு பார்க்கவிருக்கிறார். ஆகவே, வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். கல்யாணம், காதணி அணிவித்தல் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி

கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். இதுவரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். சிலருக்கு, அவர்கள் விரும்பியபடியே இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்படக்கூடும்.வியாபார அபிவிருத்திக்கு பங்குதாரர்களின் உதவி கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு உண்டாகும். லாபமும் கூடுத லாகக் கிடைக்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உன்னத வாய்ப்புகளைத் தருவதாக அமையும்.