திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் விசாகம், அனுஷம், கேட்டை, மூலம்

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி - விசாகம், அனுஷம், கேட்டை, மூலம் நட்சத்திர பலன்களை வழங்குகிறார் ஜோதிடஶ்ரீமுருகப்ரியன்

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

விசாகம்

விசாகம் 1, 2, 3 பாதங்கள் (துலாம்) எனில், இந்தக் குருப்பெயர்ச்சி முதல் புதிய திருப்பம் உண்டாகும். அலைச்சல்கள் நீங்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மதிப்பார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள். நண்பர்களால் உதவி உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
விசாகம், அனுஷம், கேட்டை, மூலம்

பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். இல்லத்தில் திருமணம் கூடி வரும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாகச் செய்து பாராட்டு பெறுவீர் கள். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் நன்றாக யோசித்து இறங்கவும்.

விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) எனில், சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். மகான்கள், ஆன்மிகப் பெரியோர்களின் ஆசியும் அறிமுகமும் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காணும் வாய்ப்பு ஏற்படும். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். புதியவர்களால் பணவரவு உண்டு.

அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமை அவசியம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் எதுவும் வேண்டாம். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சமூகத்தில் அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.

அனுஷம்

னி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் அனுஷம். மகாலட்சுமி பிறந்த நட்சத்திரமான இதை, போர்க் கிரகமான செவ்வாயும் அமைதிக் கிரகமான சனியும் ஆள்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைச் சிறந்த குணசாலிகள் எனப் போற்றுகிறது ஜாதக அலங்காரம். அனுஷம் முழுவதும் விருச்சிகத்தில் அமைந்த நட்சத்திரம். விருச்சிக ராசிக்கு 4–ல் அமர்ந்து அருளப் போகும் குருவால், தடை - தாமதம் விலகும். எதிலும் வெல்லும் சாமர்த்தியம் உண்டாகும். பலம் - பலவீனத்தை உணர்ந்து நடந்துகொள்வீர்கள்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
விசாகம், அனுஷம், கேட்டை, மூலம்

கணவன் - மனைவிக்கிடையே மற்றவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களைக் குடும்பப் பெரியவர்கள் துணையுடன் சரிசெய்துகொள்வீர்கள். பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பக்குவம் உண்டாகும். உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அறிவுபூர்வமாகச் செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள். வெள்ளிப் பொருள்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும். பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆசியைப் பெறுவீர்கள்.

அலுவலகப் பணிகளில், பொறுமையும் நிதானமும் அவசியம். அதிகாரிகளிடம் படபடப்புடன் பேசுவதைத் தவிர்க்கவும். தடைப்பட்ட சலுகைகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் கனிந்து வரும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். புதிய முதலீடுகளைத் துணிந்து செய்வீர்கள். அதன் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. சக வியாபாரிகளுடன் கனிவாகப் பழகுவது அவசியம். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எதிர்பாராத திருப்பங்களையும் நன்மைகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

கேட்டை

புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது கேட்டை. இதில் பிறந்த நீங்கள், வருங்காலத்தை உணர்பவராகவும், தான-தருமங்கள் செய்பவராகவும், நட்பு வட்டம் அதிகமுள்ளவராகவும் விளங்குவீர்கள் என்கிறது, நட்சத்திர மாலை. கேட்டை முழுவதும் விருச்சிக ராசியில் அமைந்துள்ளது.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
விசாகம், அனுஷம், கேட்டை, மூலம்

விருச்சிக ராசிக்கு 4 – ல் குரு அமர்வதால், இந்த நட்சத்திர அன்பர்களுக்கு புதிய தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களை சரிபார்த்து வாங்குங்கள். சொத்து விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தை வாங்க பாருங்கள். ஒரு பக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தடைகள் நீங்கி திருமணம் கூடிவரும்.

உத்தியோகத்தில் வளர்ச்சி கிடைக்கும். சிலருக்குப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சம்பள பாக்கி கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். பங்குதாரர்களும் பணியாளர்களும் வியாபார வளர்ச்சிக்கு உற்சாகமாகச் செயல்படுவார்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உறவுகளால் உன்னதம் பெற வைப்பதாக அமையும்.

மூலம்

`இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், இல்லறக் கடமைகளை தவறாமல் செய்பவர், ஒழுக்க சீலர், தாய், தந்தையை வணங்குபவர்' என்று கூறுகிறது ஜாதக அலங்காரம். மூலம் நட்சத்திரம் முழுவதும் தனுசு ராசியில் அமைந்தது. தனுசு ராசிக்கு 3-ல் அமர்ந்து பலன் தரப் போகிறார் குரு. எதையும் திட்டமிட்டு செய்வது அவசியம்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
விசாகம், அனுஷம், கேட்டை, மூலம்

எந்த வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று போராடி முடிக்கவேண்டி வந்தாலும் நல்லபடியாகவே நடக்கும். இளைய சகோதரரின் வகையில் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். அவர்களால் நன்மையும் ஏற்படும். வறட்டு கௌரவத்துக்காக சேமிப்பைக் கரைத்துக்கொண்டிருக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

பால்யகால நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். கணவன் - மனைவிக்கு இடையே பிணக்குகள் நீங்கி, அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். முக்கிய விஷயங்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்; நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அதிகத் தொகை மற்றும் தங்க நகைகளைக் கவனமாகக் கையாள வும். எதிலும் நிதானித்துச் செயல்படுவது நல்லது. அரசு வகை விவகாரங்களில் அலட்சியமாக இருக்கவேண்டாம். வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடுங்கள்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். அதன் காரணமாக உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும் ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, கடின இலக்குகளையும் எளிதில் வெல்லும் சூட்சுமத்தை உங்களுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.