Published:Updated:

பித்ரு தோஷத்தைக் களைந்திடும் மணிகர்ணிகா வழிபாடு!

lord siva and parvathi
பிரீமியம் ஸ்டோரி
News
lord siva and parvathi

ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷ நிலைகள் உள்ளதா என்று அறிய சூரியன், ராகு, கேதுகளின் சேர்க்கை 1, 6, 8, 12-ம் இடங்களில் காணப்பட வேண்டும்.

முன்வினைகளுக்கு ஏற்ப வாழ்வில் ஏற்படும் தோஷங்களில் பலவகை உண்டு. அவற்றில் அவசியம் கவனிக்கப்பட வேண்டியது பித்ரு தோஷம். பித்ரு தோஷம் பொல்லாதது. வாழ்வில் முன்னேற்றத் தடைகள், வீட்டில் மங்கல காரியங்கள் நடைபெறுவதில் தடங்கல்கள், சந்ததிப்பேறு வாய்க்காமை... இப்படி பல பிரச்னைகள் பித்ரு தோஷத்தால் ஏற்படக் கூடும். இந்த தோஷத்துக்கு என்ன காரணம், அதற்கான நிவர்த்தி என்ன என்பது குறித்துத் தெரிந்துகொள்வோம்.

ஒருவரது ஜாதகத்தில் பித்ரு தோஷ நிலைகள் உள்ளதா என்று அறிய சூரியன், ராகு, கேதுகளின் சேர்க்கை 1, 6, 8, 12-ம் இடங்களில் காணப்பட வேண்டும். அமாவாசை, அஷ்டமி, பிரதமை ஆகிய திதிகளில் பிறந்தவர்களுக்கு... சனி, ராகு, கேது ஆகியோர் சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

lord siva and parvathi
lord siva and parvathi

ஒரு குடும்பத்தில், அகால மரணம் ஏற்பட்ட பெண்களுக்கு முறையான பிதுர் கிரியை செய்யாதிருத்தல், பெண் பூப்பெய்துவதற்கு முன் ஆயுளை இழந்த நிலையில், அந்தக் குழந்தையின் தாய் தந்தை காலத்துக்குப் பிறகு, அந்தக் குழந்தைக்கான திதி காலங்களில் பிண்ட கிரியைகள் செய்யாதிருத்தல், மூன்று வழியினருக்குப் பரம்பரை விதிப்படி திதி கொடுக்காமல் இருத்தல், சுமங்கலிகளின் சொத்தை உடன்பிறப்புகள் அபகரித்துவிட, அந்தப் பெண்களால் ஏற்படும் சாபம் ஆகிய காரணங்களால் பித்ரு தோஷத்துக்கு ஆளாக நேரிடும். மூத்தோர் சாபங்கள் தோஷமாக மாறி நம்மை வாட்டும்.

பித்ரு தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறுவற்கு பல வழிகள் சொல்லப் பட்டாலும், அவற்றுள் மணிகர்ணிகா வழிபாடு விசேஷமானது. காசிக்குச் செல்பவர்கள் கங்கை கரையிலுள்ள ‘மணிகர்ணிகா காட்’ என்ற தீர்த்தக் கட்டத்துக்குச் சென்று பித்ருக்களை நினைத்து வழிபட்டு வரலாம்.

ஒருமுறை, இந்தத் தீர்த்தக்கட்டத்துக்கு எழுந்தருளிய ஆதிசங்கரர், அங்கே தன் தாயாருக்குத் தர்ப்பணம் செய்தார். அப்போது, தமது ஞானதிருஷ்டியால் மணிகர்ணிகாவின் பெருமையையும் சக்தியையும் அறிந்து வியந்தார். அப்போது அவர் வாக்கிலிருந்து கங்கையாகப் பிரவாகமெடுத்த அற்புத ஸ்துதியே, ‘மணிகர்ணிகா அஷ்டகம்’.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எவரொருவர், மணிகர்ணிகா தீர்த்தக்கரையில் அமர்ந்து பித்ரு பூஜை செய்து, இந்தத் துதியை மூன்று முறை படிக்கிறாரோ, அவர் பிரம்மனைப் போன்று மதிக்கப்படுவார். மேலும், மணிகர்ணிகா தீர்த்தத்திலிருந்து 16 மைல்கல் சுற்றளவில் வசிப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குப் புண்ணியமும் புனிதமான வாழ்வும் ஸித்திக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

பார்வதிதேவியை பரமேஸ்வரருக் குத் திருமணம் செய்து வைத்த மகாவிஷ்ணு, அவர்களது தேனிலவுக்காக ஓரிடத்தைத் தேடினார். காசியின் கங்கை தீரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே ஒரு தீர்த்தத்தையும் சோலையையும் தனது சக்கராயுதத்தால் உண்டுபண்ணினார். அதைப் பார்க்க வந்தபோது, பார்வதிதேவி தீர்த்த நீரில் முகம் பார்த்து மணியை (ஆபரணம்) சரிசெய்தாள்.

அப்போது, மணிகளில் ஒன்று கழன்று நீரில் விழுந்துவிட்டது. பரமேஸ்வரன் அதை எடுக்க முயற்சி செய்தார். அப்போது அவரது கர்ணகுண்டலம் ஒன்றும் கழன்று நீரில் விழுந்துவிட்டது. தேவியின் மணியும் ஈசனின் கர்ண மணியும் விழுந்ததால், அந்தத் தீர்த்தத்துக்கு மணிகர்ணிகா என்ற பெயர் நிலைத்தது. ஆக, இந்தத் தீர்த்தம் மகத்துவமானது. மணிகர்ணிகா தீர்த்தக்கட்டத்துக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே மணிகர்ணிகா அஷ்டகத்தைப் படித்து வழிபடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழிபடும் முறை...

தட்டில் பச்சரிசி பரப்பிவைத்து, அதில் பஞ்சமுக ருத்ராட்சமும் பொன்னால் ஆன மணி அல்லது சிவ ஆபரணம் ஏதேனும் ஒன்றை வைக்க வேண்டும். அருகில் பார்வதி - பரமேஸ்வரன் சேர்ந்திருக்கும் படத்தை அலங்கரித்துவைத்து, ஐந்து முக தீபம் மற்றும் காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

அடுத்ததாக, சிவார்ச்சனை... வில்வம் சமர்ப்பித்து, 16 சிவ நாமாவளி களையும், அம்பிகை அர்ச்சனையை 16 நாமாவளியாகவும் செய்து வணங்க வேண்டும். அத்துடன் ஆதிசங்கரர் அருளிய மணிகர்ணிகா அஷ்டகத்தின் பாடல்களில் ஒன்றையாவது படித்து வணங்க வேண்டும். நிறைவில் பானகம், நீர்மோர், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, ஆரத்தி காட்ட வேண்டும். பின்னர், ஆத்ம பிரதட்சணம் செய்து மலரிட்டு, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.

(24.12.13 இதழிலிருந்து...)

கே.குமாரசிவாச்சார்யார்

மணிகர்ணிகா தேவியே போற்றி

மங்கள வடிவினளே! மணிகர்ணிகா தேவியளே!

சங்கரனும் மாலவனும் கங்கைதனில் வாக்குதிர்க்க

தெளிவான ஆன்மாவாய் தேகமதை ஆக்கிடவே

ஒளிர்பவளே உன் நீரில் உள்ளத்தை வைக்கின்றோம்.

(மணிகர்ணிகா அஷ்டகத்திலிருந்து...)