தொடர்கள்
Published:Updated:

காரிய வெற்றி தரும் மங்கல தருணங்கள்!

மங்கல தருணங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மங்கல தருணங்கள்!

ஆர்.சுப்ரமணியன்

நாம் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேற நாளும் நேரமும் கூடிவரவேண்டும் என்பார்கள் பெரியோர்கள். சரியான ஆரம்பமே வெற்றிக்கு முதற்படி ஆகும். அவ்வகையில் நாம் செய்ய நினைக்கும் நற்காரியங்களைச் சாதகமான சுபவேளைகளில் தொடங்குவது அவசியம்.

காரிய வெற்றி தரும் 
மங்கல தருணங்கள்!
wildpixel

பொதுவாக வீட்டின் சுபநிகழ்வுகளை புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்வது வழக்கம். எனினும் அன்றாட வாழ்வில்... வியாபாரத் தொடக்கம், கல்வி ஆரம்பம், புது முயற்சிகள், கல்யாணப் பேச்சைத் தொடங்குதல் போன்ற சுபகாரியங்கள் பலவற்றை மற்ற நாள்களிலும் தொடங்கும் சூழல் ஏற்படலாம்.அந்த வகையில், நல்ல பலன்களை விளைவுகளை அருளும் மங்கல காலம் - சுபஹோரைகள் குறித்த விவரத்தை அறிந்து கொள்வோம்.

ஞாயிறு: காலை 8 முதல் 10 மணி வரையிலும் மிகச் சிறந்த தருணம் ஆகும். இதில் 8 முதல் 9 மணி வரை புதன் ஹோரை; 9 முதல் 10 மணி வரை சந்திர ஓரை ஆகும்.

திங்கள்: இந்தக் கிழமையில் காலையில் சந்திர ஹோரை கால மான 6 முதல் 7 மணி வரையிலும் மங்கல நேரமாகும்.

செவ்வாய்: இந்தக் கிழமையில் குரு ஹோரை காலமான பகல் 12 முதல் 1 மணி வரையிலும்; சந்திர ஹோரை வேளையான மாலை 5 முதல் 6 மணி வரையிலும் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

புதன்: இந்தக் கிழமையில் காலையில் 9 முதல் 10 மணி வரையிலும் குரு ஹோரை ஆகும். மதியம் 2 முதல் 3 மணி வரை சந்திர ஹோரை. இந்த வேளையில் புதிய முயற்சிகளை, சுபாரியத் தொடக்கத்தை முன்னெடுக்கலாம்.

வியாழன்: குரு வாரமாகிய வியாழனன்று சுக்கிர ஹோரையிலும் புதன் ஓரையிலும் நற்காரியங்களைத் தொடங்கலாம். அன்று காலை 9 முதல் 10 மணி வரை சுக்கிர ஹோரை. மாலை 5 முதல் 6 மணி வரை புதன் ஹோரை ஆகும்.

வெள்ளி: காலை 6 முதல் 9 மணி வரையிலான காலத்தைச் சுப காரியங்களுக்காகத் தேர்வு செய்யலாம். அன்றைய தினம் 6 மணி முதல் 9 மணி வரையிலும் முறையே சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை இடம்பெறும்.

சனிக்கிழமை: இந்தத் தினத்தில் பகல் 11 முதல் 12 மணி வரை புதன் ஹோரை மற்றும் 12 முதல் 1 மணி வரை சந்திர ஹோரையிலும் சுபகாரியங்கள் நடத்தலாம். மாலையில் 5 முதல் 6 மணி வரையிலான சுக்ர ஹோரை ஏற்றது.