Published:Updated:

வாஸ்துக் கோளாறுகளை சரிசெய்வது எப்படி? #Video

வாஸ்து

இறைவழிபாடுதான் இதைப் பிரபஞ்சத்திடமிருந்து பெற்றுத் தரும். பிரபஞ்சம் நாம் எதைத் தீவிரமாக நினைக்கிறோமோ அதை நமக்குத் தரும். படைக்கப்பட்டவை யாவும் படைத்தவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே நடக்கும்.

வாஸ்துக் கோளாறுகளை சரிசெய்வது எப்படி? #Video

இறைவழிபாடுதான் இதைப் பிரபஞ்சத்திடமிருந்து பெற்றுத் தரும். பிரபஞ்சம் நாம் எதைத் தீவிரமாக நினைக்கிறோமோ அதை நமக்குத் தரும். படைக்கப்பட்டவை யாவும் படைத்தவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே நடக்கும்.

Published:Updated:
வாஸ்து

ஒரு வீட்டிலிருக்கும் வாஸ்து குறைபாடுகளை எப்படிச் சரிசெய்யலாம் என்பது பற்றி பிரபஞ்ச வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் கேட்டோம்.

இல்லம்
இல்லம்

``நாம் வாழும் வீடு சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி வாஸ்துக் குறைபாட்டுடன் இருந்தால், அதைச் சரிசெய்து மாற்றியமைத்து வெற்றிபெறலாம். சொந்தவீடாக இருந்தால், வீட்டின் தவறான பாகத்தை இடித்து புதிதாகக் கட்டி சரிசெய்து விடமுடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாடகை வீடாக இருந்தால் சரிசெய்வதெப்படி? வாஸ்து கோளாறோ தெருக்குத்து தவறோ இருந்தால், அத்தகைய வீடுகளில் வசிப்பவர்கள் புதிய வீட்டுக்கு மாறும் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

இல்லம்
இல்லம்

வாஸ்துக் குறைபாடுகளுக்கு பரிகாரங்கள் என்று எதுவும் கிடையாது. 'நாஸதே வித்யதே பவோ' என்று பகவத் கீதையில் ஒரு ஸ்லோகம் உண்டு. இல்லாததை இருப்பதுபோல் காட்டமுடியாது என்பதே இதன் பொருளாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்ல வாஸ்து அமைப்பு தவறான அமைப்பு இரண்டுமே இங்குதானிருக்கின்றன.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதைத் தேர்வு செய்வதற்கான அறிவை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும். இறைவழிபாடுதான் இதைப் பிரபஞ்சத்திடமிருந்து பெற்றுத் தரும். பிரபஞ்சம் நாம் எதைத் தீவிரமாக நினைக்கிறோமோ அதை நமக்குத் தரும். படைக்கப்பட்டவை யாவும் படைத்தவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே நடக்கும்.

இல்லம்
இல்லம்

நாமிருக்கும் வீட்டில் ஏதோ ஒரு மூலையிலோ பிரம்மஸ்தலத்திலோ ஜன்னல் வைத்ததிலோ தெருக்குத்திலோ தவறு இருக்கிறது என்றால் அதை எப்படிச் சரிசெய்யவேண்டும்?

தானம், நிதானம், சமாதானம் என்ற மூன்று மந்திரங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம்மால் முடிந்தளவு நம் சக்திக்குட்பட்டு தானம் செய்யவேண்டும். மற்றவர்களுக்குக் கொடுக்குமளவு என்னிடம் பணமில்லை என்றே நாம் பெரும்பாலான நேரங்களில் நினைக்கிறோம். யாசகம் பெற்று வாழ்பவர்கூட தெருவோரமாக உட்கார்ந்து சாப்பிடும்போது தன்னிடம் வரும் நாய்க்கு ஒரு கவளம் உணவை அளிக்கிறார். அதனால் நம்மால் முடிந்தளவு ஒரு பத்து ரூபாயை தானம் கொடுத்தால்கூட போதும், அதனுடைய பலன் மிகுதியாக இருக்கும்.

சென்னையிலிருந்து, திருச்செந்தூருக்குப் போகவேண்டுமென்றால் உடனே போய்விட முடியாது. ஒவ்வோர் அடியாகத்தான் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதனால் நமக்கு வேண்டியது நிதானம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ளவர்களை காலம் ஒருநாளும் கைவிட்டதில்லை.

ஆண்டாள் பி.சொக்கலிங்கம்
ஆண்டாள் பி.சொக்கலிங்கம்

கடைசியாகச் சமாதானம் நம் மனதுக்குள் இருந்தால்தான் நம்மால் மற்றவர்களுக்கு அதைத் தர முடியும். அந்தச் சமாதானம் எங்கிருந்து வரும்? போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகம் நம் மனத்தில் வன்மத்தை விதைக்கும். ஆனால், அதை வேரோடு களைந்தெறிந்துவிட்டு தீமை செய்தவர்களையும் மனசார வாழ்த்துங்கள். உங்களுக்குப் பெருவாழ்வு நிச்சயம் கிடைக்கும்" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism