வரலட்சுமி விரத பூஜை - ஒரு முழுமையான வழிகாட்டல் - A Complete Guidance for Varalakshmi Poojai
வரலட்சுமி விரத பூஜை - ஒரு முழுமையான வழிகாட்டல் - A Complete Guidance for Varalakshmi Poojai
பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்து தர்மத்தில், சுமங்கலிப் பெண்கள் சேர்ந்து செய்யும் விசேஷ பூஜைதான் வரலட்சுமி விரத பூஜை. வேண்டும் வரத்தை அருள்பவள் வரலட்சுமி. அஷ்டலட்சுமிகளின் ஐக்கிய ஸ்வரூபமே வரலட்சுமி திருவடிவம். வரலட்சுமியை விரதமிருந்து பூஜித்தால், குடும்பம் குறைவின்றி சிறக்கும்.
கணவர் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறுவார். குழந்தைகளுக்கு அனைத்து பேறுகளும் ஸித்திக்கும். இந்த அளவுக்கு மகிமைமிக்க வரலட்சுமி பூஜை தென் மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான ஆடி மாதத்தில் இரண்டாம் வெள்ளி அல்லது பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியில் கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது எப்படி என்று விளக்குகிறார் பாரதி ஸ்ரீதர்.