Election bannerElection banner
Published:Updated:

உறவுகளுக்குள் சிக்கல்கள் ஏற்பட இந்த தோஷங்கள்தான் காரணமா? - ஆன்மிகம் சொல்லும் பரிகாரங்கள்!

முருகப் பெருமான்
முருகப் பெருமான்

உறவுகளுக்குள் சிக்கல்கள் ஏற்பட இந்த தோஷங்கள்தான் காரணமா? - ஆன்மிகம் சொல்லும் பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

இன்று 22. 4. 21 ம் தேதி சித்திரை மாதம் 9 ம் நாள், வியாழக்கிழமை. இன்றைய திதி தசமி இரவு 7.09 வரை பிறகு ஏகாதசி. இன்றைய நட்சத்திரம் மகம், யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை

சந்திராஷ்டமம்: உத்திராடம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

உறவுச்சிக்கல்கள் நீங்க மகான் வழிபாடு
உறவுச்சிக்கல்கள் நீங்க மகான் வழிபாடு

பொதுவாக பிரச்னைகள் அனைத்தும் உறவுகளைப் பேணுவதில் உள்ள சிக்கல்களாலேயே தொடங்குகின்றன. குடும்ப உறவுகளிலிருந்து சமூக உறவுகள் வரை உள்ள அனைத்து உறவுகளுமே நம் வாழ்வின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம். அந்த உறவுகளுக்குள் பிரச்னை ஏற்படும்போது வாழ்க்கை துயரமானதாக மாறிவிடுகிறது.

உறவுச்சிக்கல்கள் நீங்க...

‘உறவில் வேகுவதைவிட ஒரு கட்டு விறகில் வெந்துவிடலாம்’ என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். ‘வீட்டுக்கே போக முடியவில்லை, அம்மாவுக்கும் மனைவிக்கு ஒத்துவரவில்லை, பிள்ளைகள் சொன்ன பேச்சை கேட்பதில்லை. அப்பா நான் சொன்னதையே கேட்காமல் அவரும் அவஸ்தைப்பட்டு நம்மையும் படுத்துறார். தம்பி தங்கைகள் படும் கஷ்டம் பார்க்க முடியவில்லை, மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை.’ எனப் பலரும் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படித்தான் அலுவலகங்களில் நண்பர்கள் வட்டத்தில் சிக்கல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட உறவுச்சிக்கல்கள் எதனால் ஏற்படுகின்றன? அவை நீக்குவதற்கான பரிகாரங்கள் என்பன குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம் - அனுகூலம் : எதிர்பார்த்த செயல்கள் அனுகூலமாகும். குடும்பத்தினரின் தேவைகளை முயன்று நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம் - உற்சாகம் : உற்சாகமான நாள். குடும்பத்தினரால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முயற்சிகள் வெற்றியாகும். - என்ஜாய் தி டே!

மிதுனம் - தன்னம்பிக்கை : மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும். - ஆல் தி பெஸ்ட்!

கடகம் - சுறுசுறுப்பு : காலை முதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். - ஆல் இஸ் வெல்!

சிம்மம் - செலவு : முயற்சிகள் அனுகூலமாகும். பிற்பகலுக்கு மேல் நன்மைகள் நடைபெறும். என்றாலும் தாய்வழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். - செலவே சமாளி!

கன்னி - மகிழ்ச்சி : செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். என்றாலும் பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்கள் நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொள்வார்கள். - ஜாலி டே!

துலாம் - அதிர்ஷ்டம் : மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். - பெஸ்ட் ஆஃப் லக்!

விருச்சிகம் - பொறுமை : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உதவிகளும் கிடைக்கும் என்றாலும் உறவினர்களோடு பேசும்போது மட்டும் பொறுமை தேவை. - நா காக்க!

தனுசு : தெளிவு : மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள், முக்கிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது. - ஆல் தி பெஸ்ட்!

மகரம் - நிதானம் : அனைத்திலும் நிதானம் தேவை. சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். இறைவழிபாடு அவசியம். - இறைவன் இருக்க பயம் ஏன்!

கும்பம் : கவனம் : அனைத்தும் அனுகூலமாக இருந்தும் செயல்களில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தாலும் பணவரவும் இருக்கும். பெரியோர்களின் அறிவுரை கேட்டுச் செயல்படவும். - டேக் கேர் ப்ளீஸ்!

மீனம் - பணவரவு : எதிர்பாராத பணவரவு ஏற்படும் நாள். சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நன்மை பயக்கும். - விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு