Published:Updated:

வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும்வரை அச்ச உணர்வோடு இருக்கிறீர்களா? - பயம் போக்கும் பரிகாரம் இதோ!

நரசிம்மர்
நரசிம்மர்

வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும்வரை அச்ச உணர்வோடு இருக்கிறீர்களா? - பயம் போக்கும் பரிகாரம் இதோ!

இன்றைய பஞ்சாங்கம்!

7.5. 21 சித்திரை 24 வெள்ளிக்கிழமை

திதி: ஏகாதசி மாலை 6.49 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: பூரட்டாதி பகல் 3.35 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல்10.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

ஏகாதசி
ஏகாதசி

சந்திராஷ்டமம்: ஆயில்யம் பகல் 3.35 பிறகு மகம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

இன்று: ஏகாதசி விரதம்.

வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும்வரை அச்ச உணர்வோடு இருக்கிறீர்களா?

சிலர் காரணமின்றி எதிர்மறைச் சிந்தனைகளுக்கு ஆட்படுவர். குறிப்பாக வீட்டில் கணவன் - குழந்தைகள் வெளியே சென்றால் அவர்கள் வீடு திரும்பும்வரை அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதேபோன்று இந்தக்கொரோனா காலத்திலும் நமக்கோ அல்லது நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதேனும் நடந்துவிடுமோ என்று அச்சப்படுபவர்களும் உண்டு. இந்த அச்சம் பிற்காலத்தில் உடல் நலம் கெடவும் வழிசெய்யும். எனவே இந்த அச்ச உணர்வைப் போக்கிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு ஆன்மிகம் நல்ல வழியினைக் காட்டுகிறது. அதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம்

மகிழ்ச்சி : மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். எதிர்காலம் பற்றிச் சிந்திப்பீர்கள். - என்ஜாய் தி டே!

ரிஷபம்

பிரச்னை : குடும்பத்தினரின் தேவைகளை முயன்று நிறைவேற்றுவீர்கள். பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். சகோதர உறவுகளால் சிறு பிரச்னை அல்லது மனஸ்தாபம் ஏற்படும். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

மிதுனம்

அலைச்சல் : சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் அனைத்தும் சாதகமாகும். நல்ல செய்திகள் வந்துசேரும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கடகம்

ஆறுதல் : சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பண வரவு தாமதமாகும். நண்பர்கள் உதவுவது ஆறுதலாக இருக்கும். இறைவனை வழிபடத் தடைகள் நீங்கும். - எல்லாம் அவன் செயல்!

சிம்மம்

உதவி : எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். உறவினர்கள் ஆதரவாகவும் ஆதாயம் தரும்வகையிலும் நடந்துகொள்வார்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - ஆல் இஸ் வெல்!

கன்னி

நன்மை : நன்மைகள் நடைபெறும் நாள். முயற்சிகள் அனைத்தும் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த நற்செய்திகள் வந்துசேரும். பேச்சில் மட்டும் பொறுமை தேவை. - ஆல் தி பெஸ்ட்!

துலாம்:

செலவு : செலவுகள் அதிகரிக்கும். உணவு விஷயங்களிலும் அக்கறை தேவை. கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். பிற்பகலுக்கு மேல் நன்மைகள் நடைபெறும். - செலவே சமாளி!

விருச்சிகம்

அனுகூலம் : காரியங்கள் அனுகூலமாகும். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். செலவுகளில் மட்டும் சிக்கனம் தேவை. - ஜாலி டே!

தனுசு:

நம்பிக்கை : நீண்ட நாள்களாக இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர்கள். சகோதர உறவுகளால் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

மகரம்

சாதகம் : நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் கைக்குவரும். சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும். - சாதகமான ஜாதகம் இன்று!

கும்பம்

ஆரோக்கியம் : பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள். - ஹெல்த் இஸ் வெல்த்!

மீனம்

துணிவு : மனதில் துணிவும் தைரியமும் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பதால் சிலர் கடன் வாங்க நேரிடும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - துணிவே துணை!

அடுத்த கட்டுரைக்கு