Election bannerElection banner
Published:Updated:

எதிர்மறை எண்ணங்கள்... கண் திருஷ்டி... வெற்றிகொள்வது எப்படி? - அதிகாலை சுபவேளை!

கண் திருஷ்டி கணபதி
கண் திருஷ்டி கணபதி

எதிர்மறை எண்ணங்கள்... கண் திருஷ்டி... வெற்றிகொள்வது எப்படி? - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

இன்று 15. 4. 21 சித்திரை மாதம் 2 ம் தேதி வியாழக்கிழமை. இந்த நாளுக்கான திதி திரிதியை பகல் 2.29 வரை பிறகு சதுர்த்தி. இன்றைய நட்சத்திரம் கிருத்திகை இரவு 7.28 வரை பிறகு ரோகிணி. இன்று நாள் முழுவதும் மரண யோகம் என்பதால் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் பெரியோர்கள்.

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை

இன்று இரவு 7.28 வரை சித்திரை நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் பிறகு சுவாதி

இன்று கிருத்திகை விரதம் என்பதால் இன்று நாம் வழிபட வேண்டிய தெய்வம் முருகப்பெருமான். இந்த நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருஷ்டி பொம்மை
திருஷ்டி பொம்மை

கண் திருஷ்டி உள்ளதா?

பொதுவாகவே நமக்கு வரும் பிரச்னைகளுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் கண் திருஷ்டி என்பதும் ஒன்று. கண் திருஷ்டி என்பதே இல்லை என்று சொல்பவர்கள் இன்று பலர் இருந்தாலும் அது குறித்து நம் முன்னோர்கள் நிறைய சொல்லிவைத்திருக்கிறார்கள். ‘கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது போன்ற பழமொழிகள் அதை உறுதிப்படுத்துகின்றன.

பொதுவாக ‘ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா... ஒருவர் உங்களின் வளமையையோ அல்லது உங்களுக்குக்கிடைக்கும் வாய்ப்பையோ கண்டு பொறாமையாகவோ அல்லது பகைமையோடோ ஒரு வார்த்தையைச் சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதைக் கேட்டால் உங்கள் மனம் பாதிப்படையும் அல்லவா... அது உங்களுக்குள் ஒரு நெகட்டீவ் அதிர்வுகளை உருவாக்குகிறது. உங்கள் எண்ணங்களை மட்டுப்படுத்த வைக்கிறது. எண்ணம் மட்டுப்படும்போது செயலில் தீவரத்தன்மையும் பாதிக்கும் என்பது இயல்பானது. இதைத் தான் நம் முன்னோர்கள் கண் திருஷ்டி என்று மறைபொருளாகச் சொன்னார்கள். எதிர்மறையான விஷயங்களைச் சொல்லவேண்டும் என்பதுகூட இல்லை. அதை நினைத்தாலே போதுமானது. இது குறித்து ஒரு சிறு கதைகூட சொல்வார்கள்.

ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தாராம். அவர் தன் பலத்தினால் அந்த ஊர் மக்களைத் துன்புறுத்தி வந்தார். செய்வதறியாது தவித்தனர் மக்கள். அப்போது அந்த ஊரின் வழியாக ஒரு சாது சென்றார். அவர் ஊர் மக்களின் முகத்தைக் கண்டு ஏதோ பிரச்னை என்பதை அறிந்துகொண்டுவிட்டார். ஒருவரை அழைத்து என்ன பிரச்னை என்று விசாரித்தார். அவர் பிரச்னையைச் சொன்னதும், ‘இவ்வளவுதானா, நான் சொல்கிறபடி செய்யுங்கள்’என்று சொல்லி ஒரு ரகசியத்தை ஒருவரின் காதில் சொல்லிச் சென்றார்.

ரகசியத்தைக் கேட்டவர் ஊரில் சிலரோடு அதைப் பகிர்ந்துகொண்டார். மறுநாள் காலை பயில்வான் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒருவர், ‘என்ன பயில்வான் ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்... சரியாக உறங்கவில்லையா?’ என்று கேட்டார். அதற்கு பயில்வான் ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று சொல்லிவிட்டு நடந்தார். வழியில் பார்த்த இரண்டு மூன்றுபேர் பயில்வானிடம், ‘உடம்பு ஏதும் சரியில்லையா... ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்... முகத்தில் களையே இல்லை’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்போது பயில்வானுக்கே சந்தேகம் வந்துவிட்டது. நேரே வீட்டுக்குச் சென்று படுத்துக்கொண்டார்.

உடனே ஊர்காரர் ஒருவர் பயில்வானின் வீட்டுக்குக் கஞ்சி எடுத்துச் சென்று ‘இதைச் சாப்பிடுங்கள் உடல் தெம்பாகிவிடும்’ என்றார். இப்போது பயில்வான் தனக்கு உடல் நலம் குன்றிவிட்டது என்று முடிவுக்கு வந்துவிட்டார். சில நாள்களில் அவர் பலம் குறைந்தே போனது. உண்மையில் பயில்வானின் உடம்புக்கு ஒன்றுமே இல்லை. எதிர்மறையான வார்த்தைகளே அவரை பலவீனமாக்கியது. அதேபோன்றுதான் கண் திருஷ்டியும் என்கிறார்கள் பெரியவர்கள்.

சரி, நமக்குக் கண் திருஷ்டி இருப்பதை அறிந்துகொள்வது எப்படி? வாழ்வில் நமக்கும் நடக்கும் சில நிகழ்வுகள் மூலம் அதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள். அவை எவை? அவற்றுக்கான பரிகாரம் என்ன என்பன குறித்து அறிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.

இந்த நாளுக்கான சுருக்கமான ராசிபலன்கள் இதோ உங்களுக்காக...

விரிவான பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

கவனம் : புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்கும் நாள். - டேக் கேர் ப்ளீஸ்!

ரிஷபம் :

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் உணவு விஷயங்களில் கவனம் தேவை. அஜீரணம் போன்றவை ஏற்படலாம். - ஆல் இஸ் வெல்!

மிதுனம் :

சாதகம் : இன்று அனைத்து முயற்சிகளும் சாதகமாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படலாம். பிற்பகலுக்கு மேல் யாரோடும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். - சாதகமான ஜாதகம் இன்று!

கடகம் :

ஆதாயம் : நண்பர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். - ஜாலி டே!

சிம்மம் :

நிதானம் : அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் செயல்களில் நிதானம் தேவைப்படும் நாள். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. பேச்சிலும் நிதானம் அவசியம். - நா காக்க!

கன்னி :

தெளிவு : குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் எதிர்பாராத பணவரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. - இனி எல்லாம் சுபமே!

துலாம் :

சந்திராஷ்டமம் இருப்பதால் இன்று நாள் முழுவதும் இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். இறைவழிபாடு தேவை. - கேர் ஃபுல் ப்ளீஸ்!

விருச்சிகம் :

ஆலோசனை : வீட்டிலும் வெளியிலும் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு உண்டாகும். செயல்களிலும் வெற்றி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். - என்ஜாய் தி டே!

ராசிபலன்கள்
ராசிபலன்கள்

தனுசு :

சுறுசுறுப்பு : காலைமுதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தினருக்காகச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். - ஆல் தி பெஸ்ட்!

மகரம் :

விவாதம் : அனுகூலமான நாள் என்றபோதும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதர உறவுகளால் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சிக்கனம் தேவை. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம் :

தன்னம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். - நம்பிக்கை அதானே எல்லாம்!

மீனம் :

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். பிற்பகலுக்கு மேல் அனைத்தும் சாதகமாகும். - பெஸ்ட் ஆஃப் லக்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு