Published:Updated:

படிக்கும் அறையை எவ்வாறு அமைக்கலாம்? - ஒரு வாஸ்து வழிகாட்டல்! #Video

படிக்கும் அறை
படிக்கும் அறை

உங்கள் பிள்ளைகள் நல்லமுறையில் படித்து வாழ்வாங்கு வாழவேண்டுமென்றால் அவர்களை, 'ஹாலில் உட்கார்ந்து படி', 'பெட் ரூமில் உட்கார்ந்து படி' என்று சொல்லுவது அத்தனை சிறப்பானது அல்ல. அவர்களுக்கான படிக்கும் அறை, நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கவேண்டும்.

வாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறை, எப்படி இருக்கவேண்டும், அதை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது பற்றி வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

Reading Room
Reading Room

பெற்றோர்கள் பெரும்பாலும் செய்யும் ஒரு முக்கியமான தவறு ஒன்று உண்டு. தன் பிள்ளையின் படிப்பை அவனின் பள்ளிக்கூட நண்பர்களின் படிப்புடன் ஒப்பிட்டு, ``அங்க பாரு, உன்கூடதான் விளையாடுறான் எங்கே போனாலும் கூடவே வர்றான். ஆனா, அவன் பார். நூற்றுக்கு தொண்ணூறு மார்க் எடுக்கிறான். நீ இவ்வளவு கம்மியா எடுக்கிறே'' என்று பிள்ளைகளைக் கண்டிப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். உண்மையில் அவ்வாறு கண்டிக்கக் கூடாது.

காரணம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் வெவ்வேறு விதமான கேள்விகள் வெவ்வேறு விதமான பதில்கள் உண்டு என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். உங்களின் குழந்தையை மற்றவர்களின் குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுவது, ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது தவறான கண்ணோட்டம். இதனால் அந்தக் குழந்தை உளவியல் ரீதியாக பாதிப்படையும், என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

Reading
Reading

குழந்தைகளிடம் எதையும் வலியுறுத்துதல் கூடாது. அவர்களின் போக்கிலேயே சென்று அவர்களை மடை மாற்ற வேண்டும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். 'வாஸ்துப்படி படிக்கும் அறையை அமைக்கமுடியுமா?

Student interest
Student interest

வாஸ்து என்பதும் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்ததுதான். இயற்கையைத்தவிர வேறில்லை. இயற்கைதான் கடவுள்.

வாஸ்துவில் மிகவும் அடிப்படையான விஷயம், காற்றும் சூரியனும்தான். சூரிய வெளிச்சமும் சுகாதாரமான காற்றோட்டமும் இருக்கும் அறையில் நம் மனம் எளிதாகவே படிப்பில் கவனம் செலுத்தும்.

காற்றும் சூரிய வெளிச்சமும் ஒரு வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அவசியம் வந்தே ஆகவேண்டும். அப்படி வரவேண்டுமானால் அங்கு அமைந்திருக்கும் அறையில் ஜன்னல் இருப்பது அவசியம்.

ஜன்னலைத் திறந்தால் வானம் தெரிய வேண்டும், 'ஓபன் டு த ஸ்கை' என்று சொல்வார்கள். அப்படி உள்ள அறையாக அது இருக்கவேண்டும். நான் எவ்வளவோ பேருக்கு வாஸ்து முறையில் வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறேன். ஆனால், அவர்களில் வெறும் ஐந்து சதவிகிதம் பேர்தான் 'குழந்தைகள் படிக்கும் அறையைச் சிறப்பாக அமைத்துத் தாருங்கள்' என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

சிலர் 'டாய்லெட், பாத்ரூம் பெரிதாக இருக்க வேண்டும், சிலர் சமையலறை பெரிதாக இருக்கவேண்டும், ஹால் எனக்கு மிகப்பெரிதாக இருக்க வேண்டும் என்று வேறு சிலரும் கேட்டிருக்கிறார்கள். மிகக் குறைவானவர்களே 'என் பிள்ளை படிக்கும் அறை சிறப்பாக இருக்க வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்கள்.

Number One
Number One

பிரபந்தம் பாடிய நம்மாழ்வார் பூமியில் அவதாரம் எடுக்கிறார் என்பதற்காக அவரின் வருகைக்கு 350 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெருமாள் புளிய மரமாக அவதரித்து காத்திருந்தார் என்பார்கள்.

உங்கள் பிள்ளைகள் நல்லமுறையில் படித்து வாழ்வாங்கு வாழவேண்டுமென்றால் அவர்களை, 'ஹாலில் உட்கார்ந்து படி' 'பெட் ரூமில் உட்கார்ந்து படி' என்று சொல்லுவது அத்தனை சிறப்பானது அல்ல.

அவர்களுக்கான படிக்கும் அறை, நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கவேண்டும். அப்படி வடிவமைக்கப்பட்ட அறையில் படித்த பிள்ளைகள் மிகப்பெரிய அளவில் சாதனையாளர்களாக வெற்றியாளர்களாகத் திகழ்ந்து இருக்கிறார்கள்.

படிக்கும் அறையை வடகிழக்குப் பகுதியில் அமைப்பது நல்லது. அதிலும் அந்தக் குழந்தை பூமியின் சகல ஐஸ்வரியங்களும் பெற சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே வரும் வகையில் அமைக்கப்பட்ட அறையில் படிப்பது நன்மை பயக்கும்.

வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் படிக்கும் அறையில் கனமான பொருள்கள் எதுவும் இருக்கக்கூடாது. இது மிகவும் முக்கியம். குழந்தைகளின் படிப்புக்காக மட்டுமல்ல, பொதுவாகவே வீட்டின் வடகிழக்குப் பகுதியில் கனமான பொருள்கள் இல்லாமல் இருந்தால்தான் அந்த வீட்டின் வெற்றிக்கு அது மிகவும் உதவுவதாக இருக்கும்.

வடகிழக்குப்பகுதியைத் துண்டித்து வேறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்தினால் தலையில்லாத வீடு போல் ஆகிவிடும். என்றுதான் அதைச் சொல்லுவேன். ஒரு வீட்டின் தலைப்பகுதி வடகிழக்குப் பகுதி. சிலர் கார் நிறுத்துவதற்கான இடமாக வடகிழக்குப் பகுதியைப் பயன்படுத்தி போர்டிகோ அமைத்திருப்பார்கள் அப்படிச் செய்வது தவறு.

Home
Home

படிக்கும் அறையின் கிழக்கிலும் வடக்கிலும் ஜன்னல் இருக்கவேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கிழக்கு பார்த்து படிப்பது என்பது இதில் கவனிக்க வேண்டிய இன்னோர் அம்சம். குழந்தைகள் படிக்கவேண்டும் என்பதற்காக அறையை குளிர்சாதன வசதியுள்ள அறையாக மாற்றக்கூடாது. அப்படி நாம் அந்த அறையை ஏ.சி செய்வதாக இருந்தால், வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஜன்னலைத் திறந்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த நோக்கமே அடிபட்டுப் போகும்.

இப்படிப்பட்ட சூழலில் படிக்கும்போது அந்தக் குழந்தையின் மனம் இயல்பாகவே ஒரு சுமுகமான நிலைக்குச் செல்லும். நான்கு மணி நேரம் படிக்கவேண்டிய ஒரு பாடத்தை அந்தக் குழந்தை, 'எந்திரன்' படத்தில் வரும் ரஜினியைப் போல் கிடுகிடுவென ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடும்.

வகுப்பிலிருக்கும் மற்ற டாப் கிளாஸ் குழந்தைகளைவிட இவர்கள் முன்னணிக்குச் செல்வார்கள் என்பது நிச்சயம். இதை மட்டும் செய்தால் போதுமா? கூடுதலாக சில அம்சங்களைப் பார்ப்போம்.

பத்துமுறை படிப்பதைவிட ஒரு முறை எழுதிப் பார்ப்பது குழந்தைகளின் படிப்புக்கு மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். இதற்கு மஞ்சள் கலர் பேப்பரில் சிவப்பு வண்ண மையில் எழுதிப் பார்க்கும் போது, குழந்தைகளின் மனத்தில் அவர்கள் படிக்கும் பாடம் எளிதாகப் பதியும் .

அந்தக் காலத்தில் திருமண அழைப்பிதழ்களை மஞ்சள் வண்ணத்தில் உள்ள தாளில் சிவப்பு நிற மையினால்தான் அச்சடித்து இருப்பார்கள். இந்த வழக்கம் இன்றும் பல குடும்பங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இது ஜோதிட ரீதியாக குருமங்கள யோகம் ஆகும்" என்கிறார் வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம்.

அடுத்த கட்டுரைக்கு