Election bannerElection banner
Published:Updated:

12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும்?

Lord vinayaga
Lord vinayaga

சாதாரண களிமண்ணில் விநாயகரை யார் வேண்டுமானாலும் செய்து வணங்கி, மீண்டும் மண்ணிலேயே சேர்க்கிறோம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்' எனும் ஆன்மிகத் தத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்தியவர் விநாயகர்.

விநாயகர் சதுர்த்தித் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் 12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பது பற்றி ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணனைக் கேட்டபோது அவர் கூறியவை இதோ உங்களின் பார்வைக்கு...

Lord vinayaga
Lord vinayaga

உலகத்தில் அதிகமான நாடுகளில் அதிகமான மக்கள் வணங்கும் தெய்வங்களில் விநாயகருக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. சைவம், வைணவம் இரு சமயத்தவர்களுக்கும் பொதுவான கடவுள் விநாயகர். சைவத்தில் சக்தியின் மைந்தனாக, முருகனின் தமையனாக இருப்பவர், வைணவத்தில் தும்பிக்கையாழ்வாராக வணங்கப்படுகிறார். சாதாரண களிமண்ணில் அவரை யார் வேண்டுமானாலும் செய்து வணங்கி, மீண்டும் மண்ணிலேயே சேர்க்கிறோம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்' எனும் ஆன்மிகத் தத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்தியவர் விநாயகர்.

ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய கிரகங்கள்தான் மனித வாழ்வைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழ்கின்றன. அந்த சாயா கிரகங்களால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர்தான். 12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.

Lord vinayaga
Lord vinayaga

மேஷ ராசிக்காரர்களுக்கு 9-ம் வீட்டில் இருக்கும் சனி பகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, பத்தாம் இடத்துக்கு வரப்போகிறார். பத்தில் சனி வந்தால், 'பதி குழைந்து வறுமை காட்டும்' எனச் சொல்வார்கள். ஆனால், அது குறித்து நீங்கள் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள விநாயகரை ஒன்பது சனிக்கிழமை வணங்கி வந்தால் போதும். உங்களின் எல்லா கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும். விநாயகர் தொழில் விருத்தியைக் கொடுத்து வாழ்க்கை வளங்களை வாரி வழங்குவார்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு 8-ம் வீட்டில் இருக்கும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் ஒன்பதாமிடத்துக்கு வரப்போகிறார். சப்தம ஸ்தானம் எனும் 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் 8-ம் வீட்டுக்கு வரப்போகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வியாழக்கிழமைதோறும் விநாயகரை வழிபட்டு, சதுர்த்தி நாளில் மஞ்சள் ஆடை அணிவித்து வழிபட்டால், மனதில் தெம்பும் நம்பிக்கையும் பெற்று எல்லாவகையிலும் வெற்றியாக உங்களுக்கு அமையும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்போகிற குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் உன்னதமான காலமாக இருக்கப்போகிறது. இந்த ஆண்டு இறுதிக்குப் பின், அதாவது ஜனவரியிலிருந்து மார்ச்சுக்குள் சொந்தமாக வீடு வாங்கும் யோகம் அமையப்போகிறது. வாழ்வில் வெற்றிபெற்று சகல சுகங்களையும் பெற மிதுன ராசிக்காரர்கள் லட்சுமி கணபதியை வணங்குவது நல்லது. லட்சுமி கடாட்சம் பெருகி நல்ல பலன்களைத் தரும்.

கடக ராசிக்காரர்களுக்கு திருக்கணிதப்படி நடைபெறும் சனிப்பெயர்ச்சியின் மூலமாக 2020-ம் ஆண்டு நல்ல பலன்கள் பல உங்களை நோக்கி வர இருக்கின்றன. அதேவேளையில் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு மறைமுகத் தொல்லைகள், பணியிடத்தில் இறுக்கமான சூழல் ஆகியவையும் ஏற்படும். இவற்றைத் தடுக்க நீங்கள் பணிபுரியும் மேஜையில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து நீங்கள் மனதார பூஜித்து வந்தால் அனைத்துத் தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.

Ragu - kethu
Ragu - kethu

சிம்ம ராசிக்காரர்களுக்கு பஞ்சமம் எனச் சொல்லக்கூடிய 5-ம் வீட்டில் சிறப்பான கிரக அமைப்பு நிலவுவதால் தடைப்பட்ட திருமணங்கள் சுபமாக நடந்தேறும். குழந்தை பாக்கியம் இல்லாத சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். இவையெல்லாம் சீரும் சிறப்பாக நடைபெற 9 ஞாயிற்றுக்கிழமை விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பது தேங்காய்கள் உடைத்தால், விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு சதுர்ஸ்தானம் எனக்கூடிய 4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களின் மாறுதல்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. பொதுவாகவே சதுர்ஸ்தானம் விநாயகருக்கு மிகவும் இஷ்டமான இடமாகும். வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் விநாயகரை நான்கு சதுர்த்தி வழிபட்டு வந்தால், சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்கள்.

நினைத்த காரியம் கைகூடும்... கூடுவாஞ்சேரி ரயிலடி மாமர சுயம்பு விநாயகர் திருக்கோயில்! #Video

துலாம் ராசிக்காரர்களுக்கு மூன்றாமிடத்தில் நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் உடல் உபாதைகளைத் தரலாம். உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. இவர்கள் பஞ்சமுக விநாயகரை வீட்டில் வைத்து வணங்கி திங்கள்கிழமைதோறும் பூஜை செய்து வந்தால் நீடித்த வாழ்வும் ஆரோக்கியமும் பெறுவதுடன் சகல ஐஸ்வர்யங்களும் இவர்களை வந்து அடையும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்குத் தனம், குடும்பம், வாக்குஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாமிடத்தில் நடக்கும் கிரக மாறுதல்களும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவர இருக்கின்றன. குறிப்பாக, மாணவர்களுக்குக் கல்வியில் யோக நிலையும் ஒருசிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையும் ஏற்படும். வியாபார அபிவிருத்தி காரணமாகத் தொழில் முன்னேற்றங்கள் பலருக்கும் ஏற்படும். இவர்கள் தினமும் விநாயகரை வணங்க வேண்டும். சட்டைப்பையில் எப்போதும் விநாயகர் படம் ஒன்றை வைத்துக்கொண்டு மனதாலும் பூஜித்து வந்தால், ஆச்சர்யமான பலன்கள் இவர்களுக்குக் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இவ்வளவு நாள்களாக இருந்து வந்த துன்பங்கள் துயரங்கள் இனி படிப்படியாகக் குறைந்து பெரிய பெரிய முன்னேற்றங்கள் உங்களுக்கு அமையும். ஏழரைச் சனியின் பிடியில் தொடர்ந்து நீங்கள் இருப்பதால் விநாயகரை இடைவிடாது வழிபட்டு அவரைச் சரண் புகுந்திடுங்கள். இனி யாவும் உங்களுக்கு நலமாக அமைந்திடும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு சனியின் பாதிப்பு பெரிதாக இருக்காது. வியாபாரத்திலுள்ளவர்கள் சோதனைகளைத் தாண்டி சாதனை படைப்பார்கள். ராகு கேது பெயர்ச்சி இவர்களுக்குச் சிலபல சோதனைகளைத் தரலாம். அதனால், இவர்கள் தங்களின் வீட்டில் பஞ்சமுக ஆஞ்சநேயரையும் பஞ்சமுக நாகத்தையும் வழிபடுவது நல்லது. குடும்பத்தினருடன் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு 11-ம் வீட்டில் நடக்கும் கிரக சேர்க்கைகள் சிறப்பாக இருப்பதால் லாபம் அபரிமிதமாக இருக்கும். முடிவுறாத பிரச்னைகள் முடிவுக்கு வரும். இவர்கள் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்கி வருவது சிறப்பான பலனையளிக்கும். அந்த அறுகம்புல்லைத் தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரை அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். எருக்கம் மலர்களால் அர்ச்சித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

Lord vinayaga
Lord vinayaga

மீனம் ராசிக்காரர்களுக்கு 9-ம் வீட்டிலும் 10-ம் வீட்டிலும் இருக்கும் கிரகங்களின் மாறுதல்கள் அத்தனை சிறப்பாக இல்லை. அதனால் அவர்கள் தங்களின் உடல்நலனில் கவனம் கொள்வது நல்லது. இவர்கள் குளக்கரையிலிருக்கும் அரசமரத்தடி விநாயகரை வழிபட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு