ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

தம்பதி ஒற்றுமை மேலோங்க!

தம்பதி ஒற்றுமை மேலோங்க
பிரீமியம் ஸ்டோரி
News
தம்பதி ஒற்றுமை மேலோங்க

தம்பதி ஒற்றுமை மேலோங்க! - தொகுப்பு : முருகேசன், திண்டுக்கல்

தம்பதியர் பிரச்னைகளால் மணமுறிவு ஏற்படாமல் சுகமான வாழ்வைப் பெறுவதற்கு, மாங்கல்யகாரகனான சனி 12-ல் விரயமாகா மலும், மேஷத்தில் மறையாமலும் இருக்க வேண்டும். அதேபோன்று, களத்திரக் காரகனான சுக்கிரன், சூரியனுடன் சேராமலும், வேறொரு பாவக் கிரகத்துடன் சேராமலும் இருக்கவேண்டும். மங்களனாகிய செவ்வாய், அலி கிரக வீட்டில் அமர்ந்து பாவர்களால் பார்க்கப்படாமல் இருக்கவேண்டும். மேலும், குரு 10-ல் ஸ்தான பலன் இழந்து, பாவர்கள் பார்வை பெறாமல் இருந்தாலும் சாதகமே. ஒருவேளை ஜாதக நிலை சரியில்லாமல் இருந்து, இல்லற வாழ்வில் போராட்டங்கள் ஏற்பட்டால், சில எளிய வழிபாடுகள் மூலம் நல்லதொரு தீர்வு காணலாம். இந்தத் தம்பதி 54 நாள்கள் அர்த்தநாரீஸ்வரர் படத்துக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, தீபாராதனை செய்து வழிபடுவது விசேஷம். கணவரையோ அல்லது மனைவியையோ பிரிந்து வாழ்பவர், அருகிலிருக்கும் கோயில்களில் இரு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும் நாக விக்கிரகத்தை வலம் வந்து வணங்கி, பாலபிஷேகம் செய்து (90 நாட்கள்) வழிபட, பிரிந்து சென்றவர் அழைக்காமலேயே விரைவில் வந்து சேர்வார் என்பது நம்பிக்கை.

தம்பதி ஒற்றுமை மேலோங்க
தம்பதி ஒற்றுமை மேலோங்க

வேலையில் பாதிப்புகள் நீங்கிட...

ஜீவன ஸ்தானதிபதி 6, 8, 12-ல் மறைந்து பகை- நீசம் பெற்று, சுபர் சேர்க்கை இல்லாமல் பாவ கிரகங்களின் பார்வை ஏற்பட்டால், பணி நிரந்தரமாக அமையாமல் போகலாம்.

லக்னம், 12 ஆகிய இடங்களில் எது அமைந் தாலும், சூரியனும் செவ்வாயும் கூடி நின்றால்,

சில காலம் வேலை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப் பட்டு, சுமாரான பணிக்குச் செல்ல நேரிடும்.

10-க்கு உடைய கிரகம் 4-ல் அமர்ந்திருக்க... அந்த ஜாதகர் தன் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பதவி பறிபோகும் நிலைக்கு ஆளாவார். இதற்கு, மகரத்தில் பலவீனம் அடைந்த குரு காரணமாகி விடுவார்.

இதுபோன்ற தருணங்களில், வியாழக் கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று, குரு பகவானை வழிபட்டு பலன் அடையலாம்.

மேலும் அன்றைய தினம் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வில்வம், மஞ்சள் நிற மலர்களைச் சமர்ப்பித்து வழிபடலாம்.

ஓம் ஆலமர்ச் செல்வனே போற்றி

ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் தியான மூர்த்தியே போற்றி

ஓம் தென் முக நாயகனே போற்றி

ஓம் நான்மறைப் பொருளே போற்றி

ஓம் கங்காதரனே போற்றி

ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி

என்று திருநாமப் போற்றி கூறி வழிபட்டால் குருபலன் கைகூடும்; அவர் அருளால் உத்தியோகத்தில் உயரவான இடம் கிடைக்கும்.