Published:Updated:

சபரிமலையில் இருந்து மணி, முனீஸ்வரர் கோயிலிலிருந்து விளக்கு முதலியவற்றை வீட்டுக்கு எடுத்துவரலாமா?

விளக்கு
விளக்கு

சபரிமலையில் இருந்து மணி, முனீஸ்வரர் கோயிலிலிருந்து விளக்கு முதலியவற்றை வீட்டுக்கு எடுத்துவரலாமா?

இன்றைய பஞ்சாங்கம்

7.6. 21 வைகாசி 24 திங்கள்கிழமை

திதி: துவாதசி காலை 11.07 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: பரணி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 5.30 முதல் 6 வரை

நல்லன அருளும் நந்தி தரிசனம்!
நல்லன அருளும் நந்தி தரிசனம்!

சந்திராஷ்டமம்: அஸ்தம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

இன்று: பிரதோஷ விரதம்.

கோயில் பொருள்களை வீட்டுக்கு எடுத்துவரலாமா?

சிலர் கோயில்களிலிருந்து சில பொருள்களை எடுத்துவந்து வீட்டில் வைத்து வழிபட விரும்புவார்கள். காரணம் அவ்வாறு எடுத்துவந்தால் இறைவனின் சாந்நித்தியம் எப்போதும் நம் வீட்டோடு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அவ்வாறு செய்வது சரியா... சில சிவ பக்தர்கள் ஆலயத்திலிருந்து திருநீற்றைக்கூட எடுத்துவருவது இல்லை. காரணம் சிவன் கொத்து குல நாசம் என்பது அவர்களின் நம்பிக்கை. வாசகர் ஒருவர் தன் கிராமத்தின் முனீஸ்வரர் கோயிலிலிருந்து ஒரு விளக்கினை எடுத்துவந்து வீட்டில் வைத்து விளக்கேற்றி வழிபட ஆரம்பித்திருக்கிறார். ஏனோ, அவர் மனம் அன்று முதல் மிகவும் சஞ்சலமடைந்திருக்கிறது. அதற்குக் கோயிலிலிருந்து விளக்கு எடுத்துவந்து வழிபாடு செய்வதுதான் காரணமா என்று கேட்டிருக்கிறார். அவரின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

மகிழ்ச்சி : மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சின்னச் சின்ன குழப்பங்கள் தோன்றினாலும் பாதிப்பு இருக்காது. செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்பப் பணவரவும் காணப்படும். - என்ஜாய் தி டே!

ரிஷபம்

உதவி : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கும் செயல் அனுகூலமும் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு வீட்டில் பணிச்சுமை அதிகரிக்கும். - நாளை உங்க நாள்!

மிதுனம்

பணவரவு : இன்று பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகளும் பணவரவும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் அதிகரிக்கும். - ஜாலி டே

கடகம்

கலகலப்பு : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டபடி செயல்களை முடிப்பீர்கள். பேச்சில் மட்டும் கவனம் தேவை. - ஆல் இஸ் வெல்!

சிம்மம்

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய சிந்தனை உண்டாகும். பணவரவு இருப்பதால் கவலையில்லை. நல்ல தகவல்கள் வந்துசேரும். - ஆல் தி பெஸ்ட்!

கன்னி

கவனம் : பேச்சில் நிதானம் தேவை. நீங்கள் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லிக் குற்றம் சாட்டுவர். இறைவழிபாடு நனமை பயக்கும். - இதுவும் கடந்துபோகும்!

துலாம்

உற்சாகம் : உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவு ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பார்கள். நண்பர்களால் நன்மைகள் நடைபெறும். - இனி எல்லாம் சுபமே!

விருச்சிகம்

தடை : செயல்களில் சின்னச் சின்னத் தடைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தினர் உங்கள் மனதைப் புரிந்துகொள்வர். எதிர்பார்த்த பண உதவி பிற்பகலுக்கு மேல் கிடைக்கும். - தடை அதை உடை!

தனுசு:

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். என்றாலும் தேவையற்ற வார்த்தைகளைப் பேச்சில் தவிர்ப்பது நல்லது. - நா காக்க!

மகரம்

வெற்றி : செயல்களில் வெற்றி ஏற்படும். எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பணவரவு உண்டாகும். உறவினர்களால் செலவு ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். - வெற்றிக்கொடிகட்டு!

கும்பம்

சாதகம் : நினைத்ததை முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். - சாதகமான ஜாதகம் இன்று!

மீனம்

பொறுமை : அனைத்துவிதத்திலும் நன்மைகள் நடைபெறும் என்றாலும் சொல்லிலும் செயலிலும் பொறுமை அவசியம். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு