Published:Updated:

வழக்கமாகக் கோயில்களில் நடைபெற வேண்டிய உற்சவங்கள் நடக்காததால் தோஷங்கள் ஏற்படுமா?

உற்சவங்கள்
உற்சவங்கள்

வழக்கமாகக் கோயில்களில் நடைபெற வேண்டிய உற்சவங்கள் நடக்காததால் தோஷங்கள் ஏற்படுமா?

இன்றைய பஞ்சாங்கம்

26. 6. 21 ஆனி 12 சனிக்கிழமை

திதி: துவிதியை இரவு 9.06 வரை பிறகு திரிதியை

நட்சத்திரம்: பூராடம் காலை 6.49 வரை பிறகு உத்திராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

வேங்கடேச பெருமாள்
வேங்கடேச பெருமாள்

சந்திராஷ்டமம்: ரோகிணி காலை 6.49 வரை பிறகு மிருகசீரிடம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

உற்சவங்கள் நடக்காததால் தோஷங்கள் ஏற்படுமா?

கோயில்களில் உற்சவங்கள் நடத்துவது உலகின் நன்மைக்காகத்தான். ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் கோயில்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றனவே தவிர பக்தர்கள் தரிசனத்துக்குக் கூட அனுமதியில்லை. தற்போதுதான் நாலு மாவட்டங்களில் (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உற்சவங்கள் என்பதற்கு வாய்ப்பேயில்லை. நிலைமை இப்படி இருக்க வழக்கம்போல் உற்சவங்கள் நடத்துவதும் அதில் பக்தர்கள் கலந்துகொள்வதும் இயலாத சூழ்நிலையாகத்தான் உள்ளது, இவ்வாறு உற்சவங்கள் நடக்காத நிலையில் ஏதேனும் தோஷங்கள் ஏற்படுமா என்னும் ஐயம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து விரிவான உரையாடலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

மேஷம்:

செலவு : செலவுகள் அதிகரிக்கும். கைவசம் பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். நற்செய்தி வந்து சேரும். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்:

குழப்பம் : மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரலாம். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்னைகளை தவிர்க்கலாம். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

மிதுனம்

செலவு : தேவையான பணவரவு உண்டாகும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வீண்செலவுகள் ஏற்படலாம். பிற்பகலுக்கு மேல் பொறுமை அவசியம் - சிக்கனம் தேவை இக்கணம்!

கடகம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பேச்சுவார்த்தைகளில் சுமுகத் தீர்வு எட்டும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம்:

நன்மை : எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். மனம் இறைவழிபாட்டில் செல்லும். சகோதர உறவுகள் மூலம் நன்மைகள் நடைபெறும். - நாள் நல்ல நாள்!

கன்னி:

கவனம் : அனைத்தும் சாதகமாக இருந்தபோது தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பணவரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். - டேக் கேர் ப்ளீஸ்!

துலாம்:

அனுகூலம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சியைக் கொண்டுவரும். - என்ஜாய் தி டே!

விருச்சிகம்:

வெற்றி : தடைகள் ஏற்பட்டாலும் காரியங்களில் வெற்றியே உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உறவினர்கள் வகையில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். - வெற்றி நிச்சயம்!

தனுசு:

மகிழ்ச்சி : காரியங்கள் அனுகூலமாகும். பணவரவும் உண்டாகும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார்கள். - ஜாலி டே!

மகரம்:

நிதானம் : செலவுகள் அதிகரிக்கும். செயல்களில் நிதானம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற உழைக்க வேண்டி வரும். ஆரோக்கியம் மேம்படும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கும்பம்:

பக்தி : இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். சகோதர உறவுகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனம் தேவை. - எல்லாம் அவன் செயல்!

மீனம்

விவாதம் : அனைத்தும் சாதகமாக இருந்தாலும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு