Published:Updated:

வாஸ்து என்பது ஏமாற்று வேலையா? #Video

வாஸ்து ஜோதிடமென்பது காலம் காலமாக மனிதவாழ்வில் இயைந்த ஒன்றாகத் திகழ்கிறது. பழங்கால வீடுகள் கோயில்கள், அரண்மனைகள், யாவும் வாஸ்து அடிப்படையில் கட்டப்பட்டவைதான்.

வாஸ்து
வாஸ்து

வாஸ்து ஜோதிடம் குறித்த பல தவறான கருத்துகள் மக்கள் மத்தியில் உலவுகின்றன. வாஸ்து என்பது ஒரு வகையான வியாபாரம் என்றும் சிலர் கருதுகிறார்கள். இது குறித்து பிரபஞ்ச வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

இல்லம்
இல்லம்

``வாஸ்து ஜோதிடமென்பது காலம் காலமாக மனிதவாழ்வில் இயைந்த ஒன்றாகத் திகழ்கிறது. பழங்கால வீடுகள் கோயில்கள், அரண்மனைகள், யாவும் வாஸ்து அடிப்படையில் கட்டப்பட்டவைதான். ஆனால், இப்போது அவசர உலகில் பலரும் இந்தக் கலையை மறந்து அவரவர்களின் அவசரத்துக்கேற்ப வீடுகளை அமைத்துக்கொண்டும் முறையான வழிமுறைகளைக் கையாளாமலும் வீட்டைக் கட்டிவிட்டு அவஸ்தைப்படுகிறார்கள். இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் எப்போதும் பிரச்னைகளோடு வாழப் பழகிவிட்டோமே ஒழிய, அவற்றை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி அதிகம் விவாதிப்பத்தில்லை

வாஸ்து சாஸ்திரம் பற்றி பல்வேறுவிதமான கருத்துக்கள் பலரால் கூறி வந்தாலும் வாஸ்து என்பதற்கு அடிப்படை சூரியன்தான். பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்தும் விதமாக ஒரு கட்டடத்தை நாம் அமைப்பதற்கான வழிமுறைகள்தான் வாஸ்து சாஸ்திரம். இது முழுக்க முழுக்க அறிவியலுடனும் பிரபஞ்சத்துடனும் தொடர்புடையது. இதற்கு சாதி மத மொழி பாகுபாடுகள் கிடையாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பலரும் திருவரங்கத்துக்கும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கும் போயிருப்பார்கள். காஞ்சிபுரம் காமாட்சி கோயிலில் இருக்கும் ஶ்ரீசக்கரம் 9 முக்கோணங்களாலானது. இதில் 27 கோடுகளை வித்தியாசமாக இணைக்கும்போது அவற்றிலிருந்து 43 முக்கோணங்கள் உருவாகியிருக்கும். அது,வாஸ்து சாஸ்திரத்துக்கு சிறந்த உதாரணம்.

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

ஶ்ரீசக்ராவை ஆய்வு செய்த ரஷ்ய விஞ்ஞானி ஶ்ரீசக்கரம் 7-ம் நூற்றாண்டில் தோன்றியதல்ல. இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டுமென உறுதியாகக் கூறுகிறார். ஶ்ரீசக்ராவின் மையப்பகுதியைப் பிந்து என்று அழைப்பார்கள். இந்த மையப்பகுதி 3 டி வடிவில் பிரித்தோமென்றால் அதில் பிரமிடு வடிவம் உருவாகும்.

ஆதிகால மனிதர்கள் இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் ஶ்ரீசக்ரம் குறித்த அடையாளங்கள் காணப்படுகின்றன. நம் நாட்டிலிருந்தே இந்த அற்புதக்கலை பல நாடுகளுக்கும் பயணப்பட்டிருக்க வேண்டும். நம் கோயில்கள் தொடங்கி, எகிப்திய பிரமிடுகள் வரை அனைத்தும் வாஸ்து விதிகளுக்குட்பட்டவையே. அமரிக்க டாலரொன்றை எடுத்துப்பாருங்கள். அதன் பின்புற ஓரத்தில் ஶ்ரீசக்ர குறியீடு இருப்பதைக் கவனிக்கலாம்.

இல்லம்
இல்லம்

வாஸ்து என்கிற வார்த்தையில் இல்லாவிட்டாலும் அங்குள்ள கட்டட நியதிகள்படி பென்டகன் கட்டப்பட்டதால்தான் ட்வின் டவர் இடிபாட்டின்போது, அது எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பியது. ஆகவே, வாஸ்து சாஸ்திரம் என்பது எந்தவித ஏமாற்று வேலையும் கிடையாது. இதற்கு எந்தவித பரிகாரமும் கிடையாது'' என்றார்.