திருக்கதைகள்
Published:Updated:

`கேது தோஷமா?'

கேது பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேது பரிகாரம்

எஸ்.கண்ணன்

ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடம் என்பது களத்திர ஸ்தானம் ஆகும். இதில் கேது பகவான் இருப்பது, திருமணத் தடையை ஏற்படுத்தும் என்பார்கள். அதே நேரம், 7-ல் இருக்கும் கேது பகவான் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெற்றார் எனில், அற்புதமான வாழ்க்கைத் துணை அமையும் என்று ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன. ஆக, ‘ஏழில் கேது’ என்றதுமே ‘தோஷம்’ என்று பயம்கொள்ளத் தேவையில்லை.

`கேது தோஷமா?'
subodhsathe

கிரக நிலைகளை மேலோட்டமாகப் பார்த்து வீண் கவலையால் வாடாமல், மற்ற கிரகங்களின் நிலைகளையும் ஆராய்ந்து தெளிவது அவசியம். ஒருவேளை கேதுவின் நிலை தோஷமாக இருந்தால், செவ்வாய்க் கிழமைகளில், கேது பகவான் காயத்ரீ மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு.

பிள்ளையாருக்கு அருகம்புல் சமர்ப்பித்து, மோதகம் படைத்து, விநாயகர் அகவல் பாராயணம் செய்து, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், கேது பகவான் மகிழ்ச்சி அடைவார்.

காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சித்ரகுப்தரைத் தரிசித்து வழிபட்டு வருவதும் கேதுபகவானுக்கு ப்ரீத்தியானது. அதேபோல், ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்வது, சமயச் சொற்பொழிவு முதலான ஆன்மிக காரியங்கள், கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கு உதவி செய்வதாலும் கேதுபகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.புதன் தரும் யோகங்கள்!

புதன் சூரியனுடன் இணைந்து இருப்பது புதாதித்ய யோகம் எனப்படும். இது மிகவும் விசேஷமானது. இந்தச் சேர்க்கையானது மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி போன்ற இடங்களில் அமைந் திருப்பின், குறிப்பிடத்தக்க நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்.

பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்று பத்ரயோகம் என்பதாகும். லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில், அதாவது 1, 4, 7, 10-ல் புதன் இருப்பதே பத்ரயோகம். இந்த யோகம் அமையப்பெற்ற ஜாதகர், கம்பீரத் தோற்றமும் பேச்சாற்றலும் கொண்டவராக இருப்பார்.

`கேது தோஷமா?'

`பசு சாபம்’ நீங்கணுமா?

ருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நீசனாகவோ, தோஷம் உள்ளவ னாகவோ இருந்தால் பசுவின் சாபம் இருக்கக்கூடும் என்பது ஞான நூல்களின் கருத்து. இதனால் குடும்பத்தில் வறுமையும் துன்பமும் சூழும். இந்தக் குறை நீங்க பசுக்களுக்கு பச்சைப் புல், அகத்திக்கீரை முதலியவற்றை உண்ணக் கொடுக்கலாம். இதனால் பஞ்ச மகா பாவங்களும் விலகும் என்பது மகான்களின் வாக்கு.