Published:Updated:

துலா லக்னமும் குலதெய்வ வழிபாடும்!

துலாம்
பிரீமியம் ஸ்டோரி
துலாம்

ஜோதிடமும் குலதெய்வமும் 10

துலா லக்னமும் குலதெய்வ வழிபாடும்!

ஜோதிடமும் குலதெய்வமும் 10

Published:Updated:
துலாம்
பிரீமியம் ஸ்டோரி
துலாம்

ஜோதிடர் கே.எம்.முருகேசன்

துலாம் லக்னத்துக்குக் குலதெய்வ கடாட்சத்தை எடுத்துச் சொல்லும் 5-ம் இடத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். அவருடைய அமைவுப்படி துலா லக்னக்காரர்களுக்குக் குலதெய்வம் தொடர்பான பலாபலன்கள் எப்படி இருக்கும் என்பதை அறிவோம்.

துலா லக்னமும் 
குலதெய்வ வழிபாடும்!

துலாம்: சனி பகவான் துலாம் ராசியில் அமர்ந்திருந்தால், குலதெய்வத் தின் உதவி சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்தில் மேன்மை, புத்திர புத்திரிகளுக்கு முன்னேற்றம், பணியாள்கள் சேவை என்று அனைத்து நலன்களும் உண்டாகும். துலாம் ராசி - சித்திரை நட்சத்திரத்தில் சனி இருந்தால், குடும்பத்தில் மங்கல காரியங்களும் மேன்மையும் ஏற்படும். சுவாதியில் சனி பகவான் இருந்தால் முன்னோர் ஆசீர்வாதம் உண்டு. விசாகத்தில் சனி பகவான் இருந்தால், குலதெய்வம் சிலகாலம் மறைந்திருந்து, பிறகு வெளிப்பட்டு நல்ல பலன்களை அளிக்கும்.

விருச்சிகம்: செல்வாக்கு ஏற்படும். தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு விலக வாய்ப்பு உண்டு. கவனமாக பேச வேண்டும். விருச்சிக ராசி அனுஷத்தில் சனி இருந்தால், செல்வச் செழிப்பு ஏற்படும். கேட்டையில் சனி பகவான் இருந்தால், ஆயுள் அதிகமாகும்; பொருளாதார மேன்மையை ஏற்படுத்தும். எனினும் குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்படும்.

தனுசு: சனி பகவான் தனுசு ராசியில் இருந்தால், மனோபலம் அதிகமா கும். பூர்வீகச் சொத்தால் நன்மை உண்டு. தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் சனி இருந்தால், முன்னோர் ஆசி கிடைக்கும். பூராடத்தில் சனி இருப்பின் வாழ்வில் மேன்மை உண்டு; எதிரிகள் அடங்குவர். உத்திராடத்தில் சனி இருந்தால், பாராட்டுகளும், லாபமும் உண்டாகும்.

மகரம்: மகர ராசியில் சனி பகவான் இருந்தால், தாயார் நலமடைவார். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மகர ராசி - உத்திராடத்தில் சனி இருப்பது, தொழிலில் மேன்மையைத் தரும். திருவோணத்தில் சனி இருந்தால் தொழில் அபிவிருத்தி, தாயாரால் நன்மை உண்டு. அவிட்டத்தில் சனி இருந்தால் சொல்வாக்கு செல்வாக்கு கிட்டும்; பூர்வீகச் சொத்துகளால் மேன்மை கிடைக்கும்.

கும்பம்: கும்பத்தில் சனி பகவான் இருந்தால், குலதெய்வத்தின் அருளால் பொன் பொருள் சேர்க்கை, பூர்வீகச் சொத்தில் முன்னேற்றம், பிள்ளைகளால் மேன்மை ஆகிய பலன்கள் கிடைக்கும். கும்ப ராசி - சதயம் நட்சத்திரத்தில் சனி இருந்தால் மூதாதையரின் அனுகிரகம் இருக்கும். பூரட்டாதியில் சனிபகவான் இருப்பின், வாழ்வின் பிற்பகுதியில் குலதெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு.

மீனம்: இங்கு சனி பகவான் இருந்தால், மறந்த குலதெய்வத்தைக் கண்டுபிடித்து வணங்குவார்கள். எனினும் குடும்பத்தில் கடன் சுமை, மருத்துவச் செலவுகள், தராதரம் இல்லாதவர்களுடன் பகைமை ஏற்படலாம். இந்த ராசியில் உத்திரட்டாதியில் சனிபகவான் இருந்தால், பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தடை உண்டாகும். ரேவதியில் சனி இருந்தால், மனக் கலக்கம் அதிகமாகும்.

மேஷம்: மேஷத்தில் சனி இருந்தால் குலதெய்வ வழிபாட்டை மீட்டெ டுக்க முடியாது. பூர்வீகச் சொத்து சுகம் ஆகியவற்றில் இழப்பு ஏற்படும். அசுவினியில் சனி இருந்தால், மூதாதையர் - பிதுர்களின் சாபம் இருக்கும். பரணியில் சனி இருந்தால், வாழ்வில் பலவிதமான பிரச்னைகளையும் சோதனைகளையும் சந்திப்பார்கள். கிருத்திகையில் சனி இருந்தால், மனச் சலனம் உண்டு.

ரிஷபம்: இங்கு சனி இருப்பது நல்லதல்ல. பங்காளிச் சண்டைகள் ஏற்படும். கார்த்திகையில் சனி இருந்தால் பங்காளிகளின் பிரச்னையால் குலதெய்வ வழிபாட்டில் வம்பு, வழக்குகள் ஏற்படும். ரோகிணியில் சனி இருந்தால், தொழில் சம்பந்தமான பிரச்னைகளைச் சந்திப்பார்கள். மிருகசீரிடத்தில் சனி இருந்தால், குடும்பத்தில்- வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: துலா லக்னக்காரர்களுக்கு இந்த ராசியில் சனி இருந்தால், ஜாதகர் எவ்வளவு விருப்பத்துடன் குலதெய்வத்தை வழிபடுகிறாரோ, அந்த அளவுக்கு நன்மை கிடைக்கும். இந்த ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் சனி இருந்தால், சில அதீத சக்திகளால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மூதாதையரின் அருளால் அவற்றை வெற்றிக் கொள்வீர்கள். புனர்பூசத்தில் சனி இருந்தால் தந்தைவழி உறவினர்களுடன் பகைமை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கடகம்: கடகத்தில் சனி இருந்தால் வியாபாரத்தில் நல்ல மேன்மை கிடைக்கும். குடும்பத்துக்கு ஆண் வாரிசு கிடைக்கும். புனர்பூசத்தில் சனி இருந்தால், பூர்வீகச் சொத்தில் மேன்மை ஏற்படும். பூசம் நட்சத்திரத்தில் சனி இருந்தால் சகல காரியங்களிலும் வெற்றியும் மேன்மையும் ஏற்படும். ஆயில்யத்தில் சனிபகவான் இருந்தால், தந்தை மற்றும் தந்தை வழியில் உள்ள உறவினர்களால் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்: சனிபகவான் இங்கு இருந்தால், ஜாதகர் சூழ்நிலையின் காரணமாக நாத்திகராக இருப்பார். சிலருக்குத் தந்தையுடன் பகையும் பிரிவும் ஏற்படும். மகம் நட்சத்திரத்தில் சனி இருந்து மாந்தி தொடர்பு ஏற்பட்டால், அமானுஷ்ய சக்திகளால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் சனி இருந்தால், வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உத்திரத்தில் சனி இருப்பின், தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் உறவு சிறப்பாக இருக்காது.

கன்னி: இங்கு சனி இருந்தால் பூர்வீகச் சொத்தாலும் புத்திர புத்திரிகளாலும் விரயங்கள் ஏற்படக்கூடும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்காமல் போகும். இந்த ராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் சனி இருந்தால், செய்யும் தொழில் - உத்தியோகத்தில் விரயம், வேலை வாய்ப்பை இழத்தல் போன்றவை ஏற்படக்கூடும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சித்திரையில் சனி இருந்தால் சகோதரர், வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் விரயங்கள் உண்டாகும். குலதெய்வத்தை வழிபட்டால் குடும்ப மேன்மை உண்டாகும்.