Published:Updated:

கும்ப லக்னமும் குலதெய்வமும்!

புதன்
பிரீமியம் ஸ்டோரி
புதன்

ஜோதிடர் கே.எம்.முருகேசன்

கும்ப லக்னமும் குலதெய்வமும்!

ஜோதிடர் கே.எம்.முருகேசன்

Published:Updated:
புதன்
பிரீமியம் ஸ்டோரி
புதன்

கும்ப லக்ன அன்பர்களுக்குக் குலதெய்வத்துக்கு உரிய ஐந்தாம் இடம் மிதுனம். இந்த ராசிக்குரிய கிரகம் புதன். இந்தக் கிரக மூர்த்தி, கும்ப லக்னக்காரர்களின் ஜாதகத்தில் எந்தெந்த பாவங்களில் இருந்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக அறிவோம்.

கும்ப லக்னமும் குலதெய்வமும்!

கும்பம்: புதன் கும்பத்திலேயே இருந்தால் குலதெய்வம் வைணவ தெய்வமாக இருக்கும். கல்வியில் மேன்மை, பூர்வீகச் சொத்துகளால் லாபம், நீண்ட ஆயுள் உண்டு. குலதெய்வக் கோயிலில் வில்லங்கம் உண்டாகலாம். கும்ப ராசியில்-அவிட்டத்தில் புதன் இருந்தால் தொழிலில் மேன்மை, மனோபலம், புகழ், கௌரவம் உண்டாகும். சதயத்தில் புதன் இருந்தால், மூதாதையரின் ஆசி உண்டு. பூரட்டாதியில் புதன் இருந்தால் நல்ல வருமானம் இருக்கும்.

மீனம்: இங்கு புதன் இருப்பது சிறப்பல்ல. குலதெய்வ உதவி கிட்டாது அல்லது குலதெய்வம் எது என்று அறியாமல் இருப்பார்கள். மீனம் ராசியில் - பூரட்டாதி நட்சத்திரத்தில் புதன் இருந்தால், குடும்பம் சிறப்பாக அமையாது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் புதன் இருந்தால், சிந்திக்கும் திறன் குறையும்; நிம்மதியான உறக்கம் இருக்காது. ரேவதி நட்சத்திரத்தில் புதன் இருந்தால் ஆயுள் பங்கம், புத்திர புத்திரிகளைப் பிரிதல் ஆகிய நிலை ஏற்படும்.

மேஷம் : இங்கு புதன் இருப்பது மனவலிமையைக் கொடுக்கும். அதேநேரம், சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். அசுவினியில் புதன் இருந்தால் சர்ப்பதோஷம் காரணமாகக் குலதெய்வத்தை அறியாமல் போவார்கள். பரணியில் புதன் இருந்தால், தாயார் வழியில் சில உதவிகள் கிடைக்கும். கார்த்திகையில் புதன் இருந்தால், மனைவி வழி உறவினர்களால் ஆதரவு உண்டு.

ரிஷபம்: இங்கு புதன் இருந்தால், பூர்வீகச் சொத்தில் விரயம் ஏற்படும். பிள்ளைகளைப் பிரிய நேரிடும். ரோகிணியில் புதன் இருந்தால், தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கார்த்திகையில் புதன் இருந்தால், தந்தைவழி உறவுகள் சிறப்பாக அமையாது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால், தொழில்ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.

மிதுனம்: இங்கு புதன் இருப்பது மிகுந்த மேன்மையைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்து சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்கு குலதெய்வத்தின் உதவி எப்போதும் இருக்கும். இந்த ராசியில்-மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால் தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். திருவாதிரையில் புதன் இருந்தால், முன்னோர்கள், நாகதேவதையின் ஆசி அதிகம் உண்டு. புனர்பூசத்தில் புதன் இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை; தனவரவு உண்டு.

கடகம்: இதில் புதன் இருப்பது நன்மையல்ல. பகைவர்களாலோ வேறு காரணங்களாலோ குலதெய்வ வழிபாடு தடைப்படும். பிள்ளைகளும் பகைவர் ஆவார்கள். குடும்பத்தில் கடன் ஏற்படும். நரம்பு, மூளை நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். பூசத்தில் புதன் இருந்தால், விரயச் செலவுகள் அதிகமாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால், மாமன் வர்க்கத்தார் பகைவர்களாகவும் அவர்களுடன் வில்லங்க விவகாரங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்: இங்கு புதன் இருந்தால் தெய்வத்தின் உதவிகள் கிடைக்கும். ஆயினும் தேவையில்லாத வம்பு வழக்குகள் தேடி வரும். மகம் நட்சத் திரத்தில் புதன் இருந்தால், அமானுஷ்ய சக்திகளால் தொல்லைகள் ஏற்படலாம். பூரம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால் தாய் தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களுடன் பிரச்சனைகள் தோன்றி மறையும். உத்திரம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால் மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

கன்னி: இங்கு புதன் இருப்பது ஆயுளை அதிகப்படுத்தும். இருப்பினும் தேவையில்லாத வம்பு வழக்குகளுக்கு ஆளாகும் சூழ்நிலைகள் உருவாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால், தாயாருடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் புதன் இருந்தால் நிலம், வீடு சம்பந்தமாக வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

துலாம்: இங்கு புதன் இருப்பது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். தந்தை மேன்மை அடைவார். பூர்வீகச் சொத்தில் நல்ல மேன்மையும் அதை அனுபவிக்கும் பாக்கியமும் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் புதன் இருந்தால், சகோதரர்களால் நன்மையும் தொழிலில் மேன்மையும் ஏற்படும். சுவாதியில் புதன் இருந்தால் முன்னோர்களின் ஆசியால் நல்ல உயர்வு கிடைக்கும். விசாகத்தில் புதன் இருந்தால் வாக்கு வன்மை, நல்ல செல்வ நிலை, தொழிலில் நல்ல வருமானம் ஆகியவை கிடைக்கும்.

விருச்சிகம்: இங்கு புதன் இருப்பது சிறப்பல்ல. பூர்வீகச் சொத்தில் கடன் ஏற்படும். அதேநேரம், ஆயுள் அபிவிருத்தி உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகக் கடன் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அனுஷத்தில் புதன் இருந்தால், தொழில் ரீதியான விரயங்கள் ஏற்படலாம். கேட்டையில் புதன் இருந்தால் தொழிலில் புது முயற்சிகள் வெற்றிபெறும்.

தனுசு: இங்கு புதன் இருப்பது மேன்மையைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். மூலம் நட்சத்திரத்தில் புதன் இருந்தால், முன்னோர்களின் ஆசியும் அருளும் உண்டு. அமானுஷ்ய சக்திகள் உதவி செய்யும். பூராடத்தில் புதன் இருந்தால் உறவுகள் மேம்படும். பெண்களால் உதவியும் நன்மையும் ஏற்படும். உத்திராடத்தில் புதன் இருப்பதும் சிறப்பு; உறவுகளால் உயர்வு உண்டு.

மகரம்: இங்கு புதன் இருப்பது நல்லதல்ல. பிள்ளைகள் மற்றும் வழக்கு களுக்காக அதிகம் செலவு செய்யும் நிலை உண்டு. இருப்பினும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. உத்திராடத்தில் புதன் இருந்தால், வாழ்க்கைத் துணை மற்றும் அவர்கள் வழி உறவினர்களால் விரயங்கள் ஏற்படும். திருவோணத்தில் புதன் நின்றால் தாய்வழியில் விரயங்களும் எதிரிகளால் செலவுகளும் ஏற்படும். அவிட்டத்தில் புதன் இருந்தால் தொழில் ரீதியான விரயச் செலவுகள் ஏற்படும்.