Published:Updated:

உங்கள் லக்னமும் நவகிரகங்களும்!

நவகிரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நவகிரகங்கள்

ஜோதிடர் முருகப்ரியன்

உங்கள் லக்னமும் நவகிரகங்களும்!

ஜோதிடர் முருகப்ரியன்

Published:Updated:
நவகிரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நவகிரகங்கள்

ஜனன ஜாதகத்தில் லக்னம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே உங்கள் ஜாதகத்தில் முதலாம் இடம். இப்படி லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு 12 இடங்களை 12 பாவங்களாகப் பிரித்து விளக்குகிறது ஜோதிட சாஸ்திரம். ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு அமைப்புக்கு ஆதாரமாகத் திகழும்.

உங்கள் லக்னமும் நவகிரகங்களும்!

க்னம் ஆகிய முதலாம்பாவம்: ஒருவரது குணநலன், ஆரோக்கியம், நிறம், தகுதி, செல்வாக்கு ஆகியவற்றைக் குறிக்கும்.

2-ம் இடம்: தன-குடும்ப - வாக்குஸ்தானம்

3-ம் இடம்: சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம்

4-ம் இடம்: சுகஸ்தானம். மாத்ரு ஸ்தானம் என்றும் சொல்வர்.

5-ம் இடம்: புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்

6-ம் இடம்: ருண-ரோக-சத்ரு ஸ்தானம்

7-ம் இடம்: களத்திர ஸ்தானம்

8-ம் இடம்: ஆயுள் ஸ்தானம்

9-ம் இடம்: பாக்கிய ஸ்தானம்

10-ம் இடம்: ஜீவன ஸ்தானம் - கர்ம ஸ்தானம்

11-ம் இடம்: லாப ஸ்தானம்

12-ம் இடம்: அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானம்.

லக்னத்தை முதன்மையாகக் கொண்டு மேற்காணும் இடங்களில் என்னென்ன கிரகங்கள் உள்ளன, அவை எந்தெந்த இடங்களை சுப-அசுப பார்வைகளால் பார்வையிடுகின்றன என்பவற்றைக் கவனமாகப் பரிசீலித்த பிறகே பலன்களைச் சொல்லவேண்டும்.அவ்வகையில் முதலாம் பாவமான லக்னத்தில் எந்தெந்த கிரகங்கள் அமைந்திருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சூரியன்: உதய லக்னமாகிய இந்த இடத்தில் சூரியன் இருந்தால், நல்ல உயரமான தோற்றமும், சிவந்த நிறத்துடன் உஷ்ண சரீரம் அமைந்திருக்கும். லக்னத்தில் சூரியன் அமையப்பெற்ற ஜாதகர்கள், முன்கோபம் கொண்டவராகத் திகழ்வார்கள். எந்தச் செயலையும் தைரியத்துடன் செய்து முடிப்பார்கள். இவர்கள் மூலம் நோயால் பாதிக்கப்படலாம்.

சந்திரன்: லக்னத்தில் சந்திரன் இருக்க, நடுத்தரமான உயரமும் வட்ட முகமும், வசீகரத் தோற்றமும் கொண்டு திகழ்வார்கள். சரீரம் குளிர்ச்சியாக இருக்கும்.

செவ்வாய்: உடலில் ஏதேனும் ஓரிடத்தில் தழும்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. முன்கோபம் உண்டு. இவரின் சரீரம் பித்த சரீரமாகும். பிறரை அச்சம் கொள்ளச் செய்யும் சுபாவம் கொண்டவர். முன்யோசனை சற்றும் இல்லாதவர் என்றும் சொல்லலாம். இவர்கள் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்வார்கள்.

புதன்: லக்னத்தில் புதன் அமையப்பெற்றிருக்கும் ஜாதகர்கள், நடுத்தர உயரத்துடன் திகழ்வர். சற்றே கறுமை நிறம் கொண்டவர். பிறர் மகிழும் வண்ணம் இனிமையாகப் பேசும் இயல்பினர். சுவையான உணவு வகைகளை உண்பதில் விருப்பம் கொண்டிருப்பார்கள்.

உங்கள் லக்னமும் நவகிரகங்களும்!

வியாழன்: லக்னத்தில் குருபகவான் அமையப் பெற்றிருக்கும் ஜாதகர்கள், தைரியம் மிகுந்தவராகத் திகழ்வார். இவர்கள் திடமான சரீரம் கொண்டவர்கள். நல்ல கல்வியும் நடத்தையும் இவர்களின் சொத்து. ஆன்மிகத்தில் திளைப்பார்கள். நற்காரியங்களிலும் சமூகப் பணிகளிலும் அதிகம் நாட்டம் இருக்கும்.

சுக்கிரன்: களத்திரக்காரகன் என்ற சுகமான பாவத்துக்குச் சொந்தக்காரர் சுக்கிரன். இவர் ஜாதகத் தில் லக்னத்தில் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் நல்ல உயரமும் மெலிந்த தேகமும் பெற்றிருப் பார். இவரின் சரீரம் குளிர்ச்சி மிகுந்திருக்கும். எந்தப் பணியையும் உற்சாகம் மேலிடச் செய்வார்.

சனி: லக்னத்தில் சனி அமையப்பெற்றிருந்தால், அந்த ஜாதகர், கறுப்பு நிறத்துடன் மெலிந்த தேகம் பெற்றிருப்பார். சனி, ஆயுள் காரகன் ஆவார். இவர் லக்னத்தில் அமைந்திருந்தால், பொறுமை கைகூடும். உழைப்பதற்கு அஞ்சாத இயல்பு இருக்கும். ஓரளவு பயந்த சுபாவத்தையும் அளிப்பார். மறதியும் இருக்க வாய்ப்பு உண்டு.

ராகு: லக்னத்தில் ராகு அமையப்பெற்றிருந்தால், நல்ல உயரத்துடன் வலிமையான உடலமைப்பைக் கொண்டிருப்பார். அவ்வப்போது ஏதேனும் நோய்களால் அவதி ஏற்படலாம். இவர்கள் எப்போதும் உண்மைக் கருத்தை மறைத்துப் பேசுபவராக இருப்பார்.

கேது: ஞானகாரகன் கேது. இவர் லக்னத்தில் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கும். கடினமான எந்தக் காரியத்தையும் எளிதில் செய்துமுடிக்கும் ஆற்றல் உண்டு. கொண்ட கொள்கையை எவருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும் இவர்களிடம் உண்டு. இது பொதுவான இலக்கணமே. ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொண்டே ஒட்டுமொத்த பலன்களும் தெரியவரும்.

உங்கள் லக்னமும் நவகிரகங்களும்!


சந்திராஷ்டமம்... பயம் வேண்டாமே!

ந்திராஷ்டம நாளில் அம்பாளை வழிபடுவதால் மனச் சஞ்சலங்கள் நீங்கும். அன்று காலையிலேயே விளக்கேற்றி, அபிராமி அந்தாதி போன்ற அம்பாள் துதிப்பாடல்களைப் பாடி, விளக்கேற்றி வழிபட்டால் அன்றைய தினம் சிறப்பாகும்.

சந்திரனுக்கு உரிய தானியம் நெல். ஆகவே அன்று ஏழைகளுக்கு நெல் தானம் வழங்கலாம். இயன்றால், மூன்று ஏழைகளுக்கு உணவு அளித்து மகிழலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதாலும் சந்திராஷ்ட தோஷம் நீங்கும்.

-கே.சங்கரன், திருநெல்வேலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism