Published:Updated:

பெண்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்!

அதிர்ஷ்ட நிறங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிர்ஷ்ட நிறங்கள்

ஜோதிடர் ஆர்.சுப்ரமணியன்

அனுபவித்து உணரவேண்டிய வரம் அதிர்ஷ்டம். குடும்பம், தொழில் முதலான சகலத் திலும் ஒருவர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டால், அவரைப் பெரிய அதிர்ஷ்டசாலி என்போம். மனிதர்கள் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெற்று மகிழ, பல வழிமுறைகளை ஜோதிடம் சார்ந்த நூல்கள் சில சுட்டிக்காட்டுகின்றன. அவற்றில் ஒன்று, அதிர்ஷ்ட நிறங்கள் குறித்த வழிமுறை.

பெண்களுக்கு 
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்!

நிறங்களில் அடிப்படையாக அமைபவை மூன்று: சிவப்பு, மஞ்சள், நீலம். இவற்றின் கலவையால் உருவாகும் வண்ணங்கள் மூன்று: ஆரஞ்சு, பச்சை, ஊதா. அடிப்படை வண்ணங்களும் அவற்றின் கலவையால் உருவாகும் வணங்களும் சேர்வதால் கிடைப்பவற்றை, இடைப்பட்ட வண்ணங்கள் என்று வகைப்படுத்துவார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கு வண்ணங் களில் ஈர்ப்பு அதிகம் எனலாம். அவ்வகையில், பிறந்ததேதி அடிப்படையில் பெண்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் குறித்து அறிவோம்.

1, 10, 19, 28: இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1-ஐ பிறவி எண்ணாகக் கொண்டவர்கள். சூரிய கிரகத்தின் ஆதிக்கத்தை அதிகம் பெற்றவர்கள். இந்தத் தேதிகளில் பிறந்த பெண்மணிகள், ஆழ்ந்த நிறங்களைத் தவிர்த்து லேசான வெளிர் நிறங்களிலான ஆடைகளையும் மற்ற உபயோகப் பொருள்களைத் தேர்வு செய்யலாம். இவர்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள், பிங்க் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்டகரமானவை. கறுப்பு வண்ணத்தைத் தவிர்த்தல் நல்லது.

2, 11, 20, 29: இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் எண் 2-ஐ பிறவி எண்ணாகக் கொண்டவர்கள்; சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்களுக்குக் கிளிப்பச்சை, இலைப் பச்சை, வெளிர் ரோஜா நிறம், வெளிர் நீலம் ஆகியவை அதிர்ஷ்டம் தரும். சிவப்பு, கறுப்பு மற்றும் ஆழ்ந்த நீலத்தைத் தவிர்க்கவேண்டும்.

3, 12, 21, 30 : இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் பிறவி எண் 3; குரு கிரக ஆதிக்கம் பெறுகிறார்கள். தாமரை, பிங்க், இலைப் பச்சை, வெளிர் பச்சை ஆகியன இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். ஆழ்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களைத் தவிர்த்தல் நல்லது.

4, 13, 22 : பிறவி எண் 4; ராகு கிரக ஆதிக்கம் பெற்ற வர்கள். மஞ்சள், வெளிர் நீலம், ரோஸ் நிறங்கள் அதிர்ஷ்டமானவை. சிவப்பு, கருப்பு மற்றும் நீல வண்ணத்தைத் தவிர்த்தல் நல்லது.

5, 14, 23: பிறவி எண்-5; புதன் கிரக ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்களுக்குச் சகல நிறங்களும் பொருந்தும். எனினும் வெளிர் சாம்பல், வெளிர் நீலம், இளஞ்சிவப்பு ஆகியன அதிகம் அதிர்ஷ்டம் தரும்.

பெண்களுக்கு 
அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்!
eden004

6, 15, 24: பிறவி எண்-6; சுக்கிர கிரக ஆதிக்கம் பெறுகிறார்கள். வெளிர் இலைப் பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்டம் தரும். ஆழ்ந்த சிவப்பு நிறத்தைத் தவிர்க்க வேண்டும்.

7, 16, 25: பிறவி எண்-7; கேதுவின் ஆதிக்கம் பெறுகிறார்கள். வெளிர் பச்சை, வெளிர் நீலம், மஞ்சள், வெண்மை அதிர்ஷ்டம் தரும். ஆகாத நிறங்கள் இல்லை என்றே கூறலாம்.

8, 17, 26 : பிறவி எண்-8; சனிக் கிரக ஆதிக்கம் பெறு கிறார்கள். மஞ்சள், ஆகாய நீலம், வெண்மை ஆகியவை நன்மை தருபவை. கறுப்பு நிறத்தைத் தவிர்ப்பது நல்லது.

9, 18, 27 : பிறவி எண்-9; செவ்வாய் கிரக ஆதிக்கம் பெறுகிறார்கள். வெளிர் சிவப்பு, வெளிர் நீலம், ரோஸ், நீலம் ஆகியவை பலன் தருபவை. பச்சை நிறம் தவிர்க்கப்படவேண்டும். இவை ஆண்களுக்கும் பொருந்தும். ஆடை, அலங்காரப் பொருள்கள் மட்டுமன்றி இல்லங்களுக்கான சுவர், திரைச் சீலைகள் முதலானவற்றுக்கும் இந்த வண்ணங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.