Published:Updated:

2022-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் - பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை?

சந்திர கிரகணம்

மதியம் 2.39 மணிக்குத் தொடங்கும் இந்தச் சந்திர கிரகணம் மாலை 6.19 மணி அளவில் முடிவு பெறும். இந்த கிரகணம் பூர்ண சந்திர கிரகணமாக நிகழும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இதைக் காணமுடியும். சென்னையைப் பொறுத்தவரை பூர்ண சந்திர கிரகணத்தைக் காணமுடியாது.

2022-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் - பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை?

மதியம் 2.39 மணிக்குத் தொடங்கும் இந்தச் சந்திர கிரகணம் மாலை 6.19 மணி அளவில் முடிவு பெறும். இந்த கிரகணம் பூர்ண சந்திர கிரகணமாக நிகழும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இதைக் காணமுடியும். சென்னையைப் பொறுத்தவரை பூர்ண சந்திர கிரகணத்தைக் காணமுடியாது.

Published:Updated:
சந்திர கிரகணம்
2022-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ இருக்கிறது. இன்று (08.11.22) மதியம் 2.39 மணிக்குத் தொடங்கும் இந்தச் சந்திர கிரகணம் மாலை 6.19 மணி அளவில் முடிவு பெறும். இந்த கிரகணம் பூர்ண சந்திர கிரகணமாக நிகழும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இதைக் காணமுடியும். சென்னையைப் பொறுத்தவரை பூர்ண சந்திர கிரகணத்தைக் காணமுடியாது. கிரகணம் முடியும் வேளையில் குறைச் சந்திர கிரகணமாக சிறிது நேரம் காணமுடியும்.
ராகு-கேது
ராகு-கேது

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

இன்றைய கிரகண ராகு பகவான் மேஷ ராசியில் இருக்கும்போது நிகழ்கிறது. சந்திர மேஷ ராசியில் ராகு பகவானோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். பொதுவாக கிரகணம் நிகழும் நாளில் பிறந்தவர் அதாவது இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் தோஷ பரிகாரம் செய்வது நல்லது. அதேபோன்று மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கிருத்திகை நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டும். அதேபோன்று பூரம் பூராடம் நட்சத்திரக்காரர்களும் சாந்தி செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

பரிகாரங்கள் என்னென்ன?

ஜோதிட ரீதியாம சந்திரன் மனோகாரகன். நம் மனத்தின் அதிபதி. அப்படிப் பட்ட மனத்தின் அதிபதிக்கு நிகழும் ஒரு தற்காலிகக் குறை நம் மனத்தை பாதிக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. எல்லோருக்கும் பாதிக்குமா என்றால் இல்லை. எந்த ராசியில் கிரகணம் நிகழ்கிறதோ அந்த ராசியைச் சேர்ந்த நட்சத்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம். எனவே அந்த அந்த ராசிக்காரர்கள் உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் தம்மைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

பரிகாரங்களில் முதன்மையானது கிரகண காலத்தில் இறைவனின் நாமத்தை ஜபம் செய்வதுதான். கிரகண நேரத்தில் அம்பாளைத் துதிக்கும் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தால் மனம் தூய்மையாகவும் அமைதியோடும் விளங்கும்.

அதேபோன்று கிரகணம் முடிந்ததும் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று அபிஷேகப் பொருள்கள் வாங்கி தானம் கொடுக்கலாம்,

கிரகணம் முடிந்ததும் நீராடுவது மரபு. வாய்ப்பிருப்பவர்கள் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பு. அப்படி நீராடினால் மனம் வலிமை பெறும்.

ஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருப்பது சிறப்பு. உடல் நலமில்லாதவர்கள் கர்ப்பிணிகள் இதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கிரகணம் ஆரம்பிக்கும் நேரம் முதல் முடியும் நேரம் வரை இறை நாமங்களைச் சொல்லிக்கொண்டிருப்பதே சிறந்த பரிகாரம். வீட்டில் வீண் செய்ய முடியாத வைத்துப் பயன்படுத்தும் பொருள்களான நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைத்துப் பிறகு பயன்படுத்துவது நல்லது. மற்ற உணவுகளை கிரகணம் முடிந்து புதிதாக சமைத்து சாப்பிடுவதே சிறப்பு என்கிறது சாஸ்திரம்.