Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - மகரம்

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் மகர ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - மகரம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் மகர ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

மகரம்: மன்னிக்கும் குணம் கொண்ட நீங்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் போது இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள்.

சாதுர்யமாகவும், சமயோஜிதமாக யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பிகள் உதவுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல் போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். இந்த சுபகிருது வருடம் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்கு பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்துக் கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். இரண்டாம் முயற்சியில் சில வேலைகள் முடியும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துச் செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

3-ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துப் போகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்துச் செல்லும். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னையை சுமூகமாக பேசி தீர்க்கப்பாருங்கள்.

மகரம்
மகரம்

வருடம் முடியும் வரை 4-ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டிற்குள் வருவதால் உத்யோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்:

13.7.2022 முதல் 7.8.2022 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலக்ட்கரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரிகளுக்கு...

வியாபாரிகளே, போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில யுக்திகளை கையாளுவீர்கள். சந்தை நிலவரமறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். சித்திரை, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பங்குதாரர்களுடன் பிரச்னை நீங்கும். ஹோட்டல், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு மாறுவார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்தியோகஸ்தர்களே, உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் சித்திரை, ஆனி மாதங்களில் உண்டு. அவ்வப்போது வேலைச்சுமை,டென்ஷன் என வந்தாலும் கலகலப்பான சம்பவங்களும் உண்டு. உயரதிகாரியுடன் நெருக்கமாக இருந்தாலும் சக ஊழியர்களால் தொந்தரவு உண்டு. கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் கிட்டும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த சுபகிருது ஆண்டு அடுத்தடுத்து வேலைச்சுமையால் ஆரோக்யத்தை குறைத்தாலும், அவ்வபோது வெற்றியையும், வளர்ச்சியையும் தரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism