பச்சை மாமலை போல் மேனி பவழவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகர் உளானே!
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே
புதன் பகவான் நிறைய பாராட்டுக்கும் பெருமைக்கும் புகழுக்கும் உரியவர். துணை இல்லாமல் இருக்கும் நிலவில்லாத கிரகம். இந்த புதன் பகவான், சந்திரனுடைய மகனாகவே ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபச்சை நிறத்துக்குரியவர், பச்சைக்கிளியின் மீது அத்தனை பிரியம்கொண்டுள்ளவர், சூரியனையே தனது நண்பனாகப் பாவித்து 77 நாள்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறவர்.
எப்போதும் தன்னுடன் இருக்கும் கிரகத்தோடு சமாதானம் பேசுபவர். உடன் இருக்கும் கிரகத்தின் தன்மையை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கிறவர்.

பணிவு என்ற ஒரு விஷயம் நாம் அனைவரும் புதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம். இந்த புதன் கிரகம், விஷ்ணுவுக்குரிய கிரகம் என்று அழைக்கப்படும் சிறப்பைக்கொண்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புதன், சுபர்களோடு சேரும்போது சுபத்தன்மையும் பாவ கிரகங்களோடு சேரும்போது பாவராகவும் அந்த ஜாதகனுக்குப் பலனை அருள்கிறார்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் தசை நடக்கும்போது, அந்த ஜாதகருக்கு பாராட்டு, பெருமை மற்றும் புகழைச் சேர்ப்பார். அத்துடன் எழுத்துப் பணி, வரவு செலவுகள் பார்ப்பது போன்ற துறைகளில் நாட்டத்தையும் பங்குச் சந்தை, வங்கி மற்றும் பொருளாதாரம் சார்ந்த துறைகளில் அதிக ஆர்வத்தையும் ஏற்படுத்துவார்.
புதன் லக்னத்திலிருந்து 6, 8, 12-ம் வீட்டில் இருக்க... அது மிதுன ராசியாகவோ, கன்னி ராசியாகவோ வரும்போது, விபரீத ராஜயோகத்தைத் தருவார்.
புதன் தசையில் எந்தக் கிரகம் புத்தியை நடத்து கிறதோ, அதற்கு ஏற்றவாறு தன்னைத்தானே மாற்றிக்கொள்வார்.
துளசி, வெண்தாமரை. பச்சை நிற படைப்புகள் எல்லாமே புதனுக்கு உரியவை.
மதுரை மீனாட்சி அம்மனுடைய உடல், பச்சை நிறத்தில் இருக்கும் காரணத்தால், அந்த அம்பிகை புதனுக்கு உண்டான தெய்வமாகவே ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறாள். ஒருமுறையேனும் மதுரையம்பதி சென்று மீனாட்சி அம்பிகையை தரிசித்து வழிபட்டு வந்தால், அம்பாளின் அருளோடு புதன் பகவானின் துணையையும் பெறலாம்.
ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், திருவெண் காடு சென்று வருவதும் பச்சை நிற வஸ்திரத்தை தானம் கொடுப்பதும் சிறப்புடையது.
அதேபோல், வெண்தாமரை மலர்களைப் புதனுக்காகச் சமர்ப்பணம் செய்து துளசி மாலை அணிவிப்பதும் கூடுதலான பலன்களைத் தரும். துளசி மாலை அணிவிக்கும் போது புதன் தோஷமிருந்தால் விலகும். புதன் தசை நடக்கும் போது ஆயுஸ்ஹோமம் செய்பவர்கள் துளசி மாலையை அணிந்துகொள்வதால் சிறந்த பலன்களைப் பெறலாம்.
புதன் தோஷமுள்ளவர்கள் மகா விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று தரிசனம் செய்யலாம். சயனக்கோலத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்வது நல்லது.
மகாவிஷ்ணுவின் திருமேனியை தரிசிப்பதும், அவருக்குத் துளசி மாலை, வெண்தாமரை, பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள் போன்ற பழங்களைச் சமர்ப்பிப்பதும் விசேஷம். அதேபோல் பச்சைநிறப் பழங்களை ஏழைகளுக்குத் தானம் அளிக்கலாம். கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள பாசுரங்களைப் பாடி பெருமாளை வழிபடுவதும் விசேஷம்.

புதன் பலம் பெற்றவர்கள் புதன், மிதுன ராசியிலோ, கன்னி ராசியிலோ அமர்ந்திருக்கும்போது, வீட்டில் பச்சை நிறப் பறவைகளை வளர்ப்பது பச்சை நிறப் பறவைகளுக்கு உணவு தானம் செய்வது அனுக்கிரகத்தைத் தரும்.
ஜாதகத்தில் புதன் வக்கிரம் பெற்றவர்கள் திருவக்கரை வக்கிரகாளியை புதன்கிழமையில் தரிசனம் செய்வதும், பச்சை நிற வஸ்திரம், பச்சை நிற பழங்கள், பச்சை நிற தானியங்கள் ஆகியவற்றைத் தானமாகக்கொடுத்து வழிபாடு செய்வதும் சிறப்புக்குரியதாக இருக்கும்.