Published:Updated:

மாத ராசிபலன்

இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான புரட்டாசி மாத ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்கள்.

மாத ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான புரட்டாசி மாத ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்கள்.

Published:Updated:
இன்றைய ராசிபலன்

புரட்டாசி மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேஷ ராசி அன்பர்களே!

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறி யாகி முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சி அனுகூலமாகும். ஆனால், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு பதவிஉயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18,23,26,27; அக்: 4,7,9,12,14

சந்திராஷ்டம நாள்கள்: செப் 29 இரவு முதல் 30; அக் 1 காலை முதல் 2 காலை வரை

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்வதும், சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். மாதப் பிற்பகுதியில் புதிய வாகனம் வாங்கும் யோகமும் சிலருக்கு ஏற்படும். கணவன் - மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சி களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படக்கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார் கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை தாமதங்கள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் மாதம். தந்தையுடன் தேவையற்ற பிரச்னை கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

பணியாளர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தையும், சிலர் பொல்லாப்பையும் சந்திக்கலாம். பொறுமையுடன் அனுசரித்து போகவும். வேலையில் கவனமாக இருக்கவும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவுபடுத் தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 19,22,25,30; அக்: 6,9,12,14,17

சந்திராஷ்டம நாள்கள்: அக் 2 காலை முதல் 4 காலை வரை

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடும், துர்கை அம்மன் வழிபாடும் நன்மை தரும்.

மிதுன ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய மாதம். தந்தை வழி உறவுகளால் வீண் விரயம் உண்டாகும். ஆனாலும், பணவரவு கணிசமாக உயரும். குடும்பத் தில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் தற்போது ஈடுபட லாம். அனுகூல மாக முடிவதற்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். முக்கிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்னைகள் வந்தாலும், இருக்கும் இடம் தெரியாமல் போகும். சிலருக்கு உன்னதமான பலன்கள் ஏற்படும். எதிலும் வெற்றி காணலாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் சற்று இழுபறிக் குப் பிறகே முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 22,25,29,30; அக்: 1,8,11,15

சந்திராஷ்டம நாள்கள்: அக் 4 காலை முதல் 6 காலை வரை

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவதும், விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

கடக ராசி அன்பர்களே!

பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கண வன் - மனைவிக்கிடையே அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். மாத முற்பகுதியில் சகோதரர் களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலையும் செலவுகளையும் ஏற்படுத்துவதாக இருக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்கு உகந்த மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியா பாரத்தை விரிவுபடுத்துவதையோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ தவிர்த்துவிடவும்..

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை கள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18,20,23,28; அக்: 2,4,13,16

சந்திராஷ்டம நாள்கள்: அக் 6 காலை முதல் 8 காலை வரை

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், சனிக்கிழமையன்று ஆஞ்சநேயர் வழிபாடும் நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மாத முற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் என்றாலும் பிற்பகுதியில் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்திலும் குழப்பமான சூழ்நிலை காணப்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான திருப்பம் ஏற்படும். இழுபறியான அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமையும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு சலுகையுடன் கூடிய இடமாற்றம் உண்டு. மாத முற்பகுதியில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறை முகத் தொல்லைகள் நீங்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும் போது தக்க முன்னெச்சரிக்கை அவசியம். இதுவரை ஏற்பட்டு வந்த அதிகப்படியான செலவுகள் குறையும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18,21,24,29; அக்: 3,6,13,15

சந்திராஷ்டம நாள்கள்: அக் 8 காலை முதல் 10 மாலை வரை

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கன்னி ராசி அன்பர்களே!

மாதம் முழுவதும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளில் அவசர முடிவு எடுக்கவேண்டாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. குடும்பத் தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கனிந்து வரும். உறவினர்களுடன் அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங் களின்போது கைப்பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். நண்பர்களிடம் எதிர் பார்த்த நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு நீண்டநாள்களாகச் செலுத்த நினைத்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் பிடிவாத மாக நடந்துகொள்வது மனதை சலனப்படுத்தும். கூடுமானவரை பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவார்கள். எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில் தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பெரிய அளவிலான முதலீடு களைத் தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மாத முற்பகுதியில் அனைத்து விஷயங்களிலும் பொறுமை யைக் கடைப்பிடிப்பது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக் கும். மாதப் பிற்பகுதியில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 20,24,26,29,30; அக்: 3,6,14,16

சந்திராஷ்டம நாள்கள்: அக் 10 மாலை முதல் 12 இரவு வரை

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை தரிசித்து வழிபடுவதன் மூலமும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமும் பிரச்னைகளின் கடுமை குறையும்.

துலா ராசி அன்பர்களே!

தெய்வ அனுகிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும். மாத முற்பகுதியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற் கான வாய்ப்பு உள்ளது. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கக்கூடும் என்றாலும் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். கணவன் - மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். மாத முற்பகுதியில் சகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் மாத முற்பகுதியில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர் பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வியாபார வளர்ச்சிக் காகக் கடுமையாக உழைக்கவேண்டி வரும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 23,26,29; அக்: 2,4,8,11,13

சந்திராஷ்டம நாள்கள்: செப் 18 இரவு முதல் 20 மதியம் வரை

பரிகாரம்: ஞாயிறு அன்று ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும், பைரவர் வழிபாடும் நன்மைகளை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பு மரியாதையைத் திரும்பப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப் படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புதிய நண்பர்களின் அறிமுக மும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டி ருந்த கருத்து வேறுபாடு மறையும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் - மனை விக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், உடனே சரியாகிவிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளை முறியடிப்பீர்கள். பழைய கடன்கள் விஷயத்தில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

பணியாளர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவர். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் மறைமுகத் தொல்லைகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அவர் களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் மாதம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 24, 25, 27, 28; அக்: 3, 4, 5, 6, 11, 15, 16

சந்திராஷ்டம நாள்கள்: அக் 7 பிற்பகல் முதல் 8, 9 மாலை வரை; அக் 15 காலை முதல் 17 இரவு வரை

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், அஷ்டமியன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகே சாதகமாக முடியும். மன உறுதி அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன் பேசும்போது கூடுமானவரை பதற்றப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வீடு அல்லது மனை வாங்கக் கூடிய வாய்ப்பு கூடிவரும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கண வன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்ப தற்கான வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் விஷயத்தில் நன்றாகத் திட்டமிடல் அவசியம்.

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்கு தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு சாதகமான பதில் வரும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர் களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 25,26,28,30; அக்: 2,5,8,10,13

சந்திராஷ்டம நாள்கள்: செப் 20 மதியம் முதல் 23 இரவு வரை; அக் 17 இரவு முதல்

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் துர்கை வழிபாடும் நலம் தரும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். பணவரவு அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயம் இழுபறியாகி முடியும். எதிரிகளால் இடையூறுகள் ஏற்பட்டாலும், சாமர்த்தியமாக முறியடித்துவிடுவீர்கள். மாத முற்பகுதி யில் உறவினர்கள் மற்றும் மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் பிரச்னை கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கணவன் -மனைவிக்கி டையே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். எனவே, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். அவர் களுடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வழக்குகளில் அவசரம் காட்டவேண்டாம். இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளை முறியடிப்பீர்கள்.

குடும்பநிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். தேவை யான பணம் இருப்பதால் செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18,20,27,29; அக்: 1,4,7,11,14

சந்திராஷ்டம நாள்கள்: செப் 23 இரவு முதல் 25 காலை வரை

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மை தரும்.

கும்ப ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். மனதில் தன் னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இதுவரை மறைந்திருந்த உங்கள் திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ் வீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும். வழக்குகளில் அவசரம் தவிர்க்கவும்.

பணியாளர்கள் பணியில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாதத் தொடக்கத்தில் வேலையில் கவனமாக இருக்கவும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திடீர் வருமானத்துக்கு வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். ஆனால், புதிய கிளைகளைத் தொடங்குவது மற்றும் புதுத் தொழிலில் முதலீடு செய்வது ஆகியவற்றில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடுவது நல்லது. சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள்.

பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18,21,29,30; அக்: 3,6,9,14,16

சந்திராஷ்டம நாள்கள்: செப் 25 காலை முதல் 27 மாலை வரை

பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதுடன் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு மோதகம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பதும் நல்லது.

மீன ராசி அன்பர்களே!

புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்க விவகாரங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்கு வீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் ஏற்படாது. குடும் பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் வழியில் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்ப வர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்க வேண்டி இருக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக் கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருப்பதுடன் லாபத்தை அதிகரிக்கவும் உதவும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள வர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 19,20,22,25; அக்: 1,3,6,9,13,15

சந்திராஷ்டம நாள்கள்: செப் 27 மாலை முதல் 29 காலை வரை

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும், சனிக்கிழமையன்று பெருமாளை வழிபடுவதும் நன்மை தரும்.