Published:Updated:

பித்ரு தோஷம் நீங்கட்டும்!

முன்னோர் ஆராதனை
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர் ஆராதனை

ஜோதிடர் முருகப்ரியன்

பித்ரு தோஷம் நீங்கட்டும்!

ஜோதிடர் முருகப்ரியன்

Published:Updated:
முன்னோர் ஆராதனை
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர் ஆராதனை

நம் குடும்பம் செழிக்கவும், சந்ததியினர் வளமான எதிர்காலத்தைப் பெறவும், வீட்டில் சுபிட்சங்கள் பெருகவும் முன்னோர்களாகிய பித்ருக்கள் ஆசியும் அருளும் மிக அவசியம் ஆகும். முன்னோரின் ஆசி கிடைக்காத வீட்டில், சுபிட்சம் தங்காது.

பித்ரு தோஷம் நீங்கட்டும்!

சிலரது குடும்பத்தில் எப்போதும் ஏதேனும் சச்சரவுகள் இருக்கும். மகப்பேறு பிரச்னை, சுபகாரியங்களில் தடை போன்ற பிரச்னைகள் இருந்துகொண்டிருக்கும். அதேபோல் சிலர் எப்போதும் இனம்புரியா கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். வேறுசிலர் புதுவிதமான பிணிகளால் பிரச்னைக்கு ஆளாகியிருப்பார்கள். மட்டுமன்றி தொழிலில் திடீர் முடக்கம், பணியில் எதிர்ப்புகள் இடையூறுகள்... இதுபோன்ற பிரச்னைகளுக்கு பித்ரு தோஷம் காரணமாகலாம்.

பித்ருதோஷம் ஏன் ஏற்படுகிறது? பெற்றோரைச் சரியாகக் கவனிக்காததால் அவர்களின் வருத்தத்துக்கும் சாபத்துக்கும் ஆளாவது, இறந்துபோன முன்னோர்களுக்கான வழிபாடுகளை முறைப்படி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் பித்ரு தொஷம் உண்டாகிறது.

ஜாதகரீதியாக சொல்வதானால்... சூரியனும் ராகுவும் 9-ஆம் இடத்தில் இருந்தால், பித்ரு தோஷம் உண்டாகும். பித்ருகாரகனான சூரியனுடன் பாபக் கிரகமான சனி சேர்ந்தாலும், பித்ரு தோஷம் உண்டாகும். சூரியனுடன் கேது சேர்ந்தாலும், பித்ரு தோஷம் ஏற்படும்.

நம் முன்னோர்கள் இறந்த பிறகு மோட்ச நிலை அடைந்துவிட்டால், அவர்களால் நமக்கு எந்தவிதத் தொந்தரவும், கெடுதல்களும் ஏற்படாது. மோட்சம் அடையாத ஆத்மாக்கள் அதை அடையும்வரை நம்முடன் தொடர்பு கொண்டிருக்கும் என்பர் பெரியோர்.

பித்ரு தோஷம் நீங்கட்டும்!

மட்டுமன்றி, இயற்கை மரணம் அடையாதவர்கள், இளம் வயதில் நிறைவேறாத ஆசைகளுடன் மரணம் அடைந்தவர்கள், துர்குணமும் கெட்ட பழக்கவழக்கங்களும் உடை ஆத்மாக்கள் கோபமும் பழிவாங்கும் நிலையிலும் இறந்தவர்கள் ஆகியோர் தன் வழி வந்தவர்களுக்குப் பாதிப்பு உண்டாக்குகிறார்கள்.

நாம் என்னதான் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று வேண்டிக்கொண்டாலும், அவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப பாதிப்பு அடைவார்கள் என்பதை உறுதிபடச் சொல்கிறார்கள், முன்னோர்கள். இதனால்தான் இந்து தர்ம நெறிப்படி பித்ரு தோஷ நிவர்த்தி செய்யப்படுகிறது.

இறைவனிடமிருந்து தோன்றிய உயிர்கள் மண்ணுலகில் வாழ்ந்து மீண்டும் இறைவனிடமே ஐக்கியமாகும் நிலையையே முக்தி அடைதல் என்கிறோம். முக்தி அடைந்தவர் யார், அடையாதவர் யார் என்பதை நம்மால் அறியமுடியாது. எனவே, இறந்த நம் முன்னோர்கள் அனைவருமே முக்தி பெறவேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்வதே சிறப்பு. இது, இறந்து போனவருக்கும் சாந்தியைத் தரும். வாழ்கின்ற நமக்கும் நிம்மதியைக் கொடுக்கும்.

சரி, பித்ரு தோஷம் நீங்கவும் முன்னோரின் அருளைப் பெறவும் என்ன செய்யலாம்?

முன்னோரின் நினைவு நாள் மட்டுமின்றி, மாதந்தோறும் அமாவாசை நாளில், முன்னோருக்கான காரியத்தைச் செவ்வனே செய்பவர் வீட்டில், பீடைகள் விலகி ஐஸ்வரியம் பெருகும்.

மாவாசைதோறும் இறந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பது அவசியம். எவ்வளவு வேலைகள், பண நெருக்கடிகள் இருந்தாலும், வருடம் ஒருமுறை செய்யவேண்டிய சிராத்தத்தைத் தவறாமல் செய்ய வேண்டும்.

சுவின் சாணத்தால் செய்த வறட்டியால், வீட்டில் வேத விற்பன்னர்களைக் கொண்டு அக்னி வளர்த்து, அதில் பசு நெய்யால் ஆஹுதி செய்வதுடன், நம் முன்னோர்களின் (இறந்தவர்களின்) பெயர்களைச் சொல்லி சாதத்தையும் நெய்யையும் அதில் இட்டு பிண்ட தானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கிவிடும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வேத விற்பன்னர்களைக் கொண்டு வீட்டில் தில ஹோமமும் செய்து பித்ரு கடமையைச் செய்யலாம்.

சுவுக்கு உணவு கொடுப்பதன் மூலமும், ஏழைப் பெண் யாரேனும் திருமணம் ஆகாமல், பொருளாதார நெருக்கடியால் சிரமப்படுகிறார் என்றால், அவரது திருமணம் நடைபெற உதவி செய்வதன் மூலமும் பித்ரு தோஷம் நீங்கும்.

மாவாசை அன்றோ, முன்னோர்களின் நினைவு நாளன்றோ பாலால் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதும் நல்லது.

பித்ரு காரகன் சூரியனுக்கு உகந்த மாணிக்கக் கல்லை மோதிர விரலில் அணிவதும் சிறப்பு சேர்க்கும்.

ந்திரங்களிலேயே உயர்ந்தது எனப் போற்றப்படுவது ஶ்ரீகாயத்ரி மந்திரம். அந்த மந்திரத்தைத் தினமும் 108 அல்லது 1008 முறை சொல்வது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் ஜபிக்கிறோமோ அந்த அளவுக்கு நன்மை உண்டாகும். முகத்தில் தேஜஸ் கூடும். மனதுள் தெளிவு குடிகொள்ளும். பித்ரு தோஷம் மட்டுமல்லாது, எல்லாவித தோஷங்களும் நீங்கும்.

ஜாதகத்தில், சூரியன் பித்ருகாரகர் ஆவார். தந்தையைக் குறிக்கும் காரக கிரகம். 9-ம் இடம் பித்ரு ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 9-ம் வீட்டுக்கு உரிய கிரகம் தந்தையைக் குறிக்கும். 9-ம் பாவத்துக்குக் காரகத்துவம் உடைய கிரகம் சூரியன் தவிர, குருவும் ஆவார்.

குருவும், பித்ருக்களுக்குக் காரகர். எனவே, குருவருள் கிடைத்து விட்டால், சகல தோஷங்களும் நம்மை விட்டு அகலும். ஆகவே, தை அமாவாசை நாளில், குருவைத் தியானித்து வழிபட்டு குருவருளால் மகிமை பெறுவோம்.

மாவாசை நாளில், பித்ருக்கள் நெகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்கு வார்கள் என்பது உறுதி! மாதந்தோறும் வருகிற அமாவாசையை விட, ஆடி அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை மிகுந்த புண்ணியத்தைத் தருகிற முக்கியமான நாட்கள்.

ரும் ஜனவரி-31 திங்கள் கிழமை தை அமாவாசை வருகிறது. அன்றைய தினம் முறைப்படி முன்னோரை ஆராதனை செய்து அருள் பெறலாம். பல்வேறு காரணங்களால் முன்னோருக்கு திதி, திவசம் செய்யமுடியாமல் தவறவிட்டவர்களும் தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை வணங்கி வழிபடலாம். இதனால், பித்ருக்களின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும்.

பித்ரு தோஷம் நீங்கட்டும்!

முன்னோரின் ஆசியும் அருளும் கிடைக்கும்!

மாவாசையில், புனித நதிகளில் நீராடி, பித்ரு கடன் தீர்ப்பதும் பாவம் போக்கவல்லது என்பார்கள். குறிப்பாக ராமேஸ்வரம், காசி, கயா ஆகிய புனித இடங்களுக்குச் சென்று பித்ரு தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். காவிரி, தாமிரபரணி முதலான புண்ணிய நதிகளில் நீராடலாம். முன்னோரின் ஆசியையும் அருளையும் பெற்றுத் தரும் வேறு சில தலங்களும் உண்டு.

வெள்ளாற்றில் நீராடி...

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருவுடையார்பட்டி. இங்கேயுள்ள இறைவனின் திருநாமம் - திருமூல நாதர். அம்பாளின் திருநாமம் - திரிபுரசுந்தரி. இங்குள்ள ஆலயம் கரிகால் சோழனால் கட்டப்பட்டதாம். இந்தத் தலத்தில் உள்ள சொர்ண பைரவர் விசேஷமானவர். தேய்பிறை அஷ்டமி நாளில் இவருக்கு தயிர்சாத நைவேத்தியம் செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்; சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் வந்து சேரும் என்பது ஐதீகம்.

தை அமாவாசை நாளில் திருவுடையார்பட்டிக்கு வந்து வெள்ளாற்றில் நீராடினால், அல்லது அந்தத் தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டு திருமூலநாதரை வழிபட்டால், பித்ருக்கள் சாபம் நீங்கும்; முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்து, சந்ததி சிறக்க வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.

பித்ரு லிங்கங்கள்!

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது பூந்தோட்டம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது கூத்தனூர் சரஸ்வதி திருக்கோயில். இந்தக் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. இங்கு ஶ்ரீமுக்தீஸ்வரராக அருள்கிறார் ஈசன்.

ஶ்ரீராமன் தந்தையின் பொருட்டு தில தர்ப்பணம் செய்து வழிபட்ட தலம் இது. ஶ்ரீராமர் வைத்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறினவாம். அவை பித்ரு லிங்கங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. காசி, ராமேஸ்வரம் தலங்களுக்கு இணையான இந்தத் தலத்துக்கு வந்து பித்ருக் கடனை அடைப்பவர்களுக்கு பெரும் புண்ணியத்தை வரமாக வழங்கி அருள்கிறார் முக்தீஸ்வரர்.

இந்தத் தலம் நித்திய அமாவாசை தலம் எனவும் போற்றப்படுகிறது. அதாவது, காசி, ராமேஸ்வரத்தை அடுத்து இங்குதான் சூரியனும் சந்திரனும் அருகருகில் காட்சி தருகின்றனராம். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பதுதானே அமாவாசை?! ஆகவே, எல்லா நாளும் இங்கு அமாவாசைக்கு இணையானவை; இங்கே தர்ப்பணம் செய்வதற்கு நாள், நட்சத்திரம், திதி எதுவும் பார்க்கத் தேவையில்லை; எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம் என்கின்றனர், பக்தர்கள்!

64,000 கோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம்...

கத்தியரின் வழிகாட்டுதல்படி ஶ்ரீராமர் நீத்தார் கடன் செலுத்தி, சிவனாரின் தரிசனத்தையும் பெற்ற இன்னுமொரு தலம் தீர்த்தாண்ட தானம்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து மீமிசல் செல்லும் கடற்கரைச் சாலையில் (இ.சி.ஆர். சாலை), தொண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தாண்டதானம். இங்கே சிவனாரின் திருநாமம்- சர்வ தீர்த்தேஸ்வரர். தை அமாவாசை போன்ற புண்ணிய தினங்களில், இங்கேயுள்ள தீர்த்தகட்டமான கடலில் நீராடிவிட்டு சிவனாரை வழிபட்டால், 64,000 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

திருமூர்த்தி மலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலை வில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இது! இங்கே சிவனாரின் திருநாமம் - அமனலிங்கேஸ்வரர்.

அத்ரி மகரிஷிக்கும் அவர்தம் மனைவி அனுசூயைக்கும் அருள்வதற்காக, இந்த மலையில் இருந்தவர்களின் இல்லத்துக்கு மும்மூர்த்திகளான சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் வந்தனர். அப்போது மூன்று பேரையும் குழந்தைகளாக்கி, அமுது படைத்தாள் அனுசூயை. மும்மூர்த்திகளும் இல்லாததால் உலகச் செயல்பாடே தடைப்பட... உமையவள், சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோர் அனுசூயாவிடம் வந்து முறையிட்டனர். அதையடுத்து, மும்மூர்த்தியரையும் பழைய உருவுக்கு மாற்றினாள் அனுசூயா என்கிறது ஸ்தல புராணம். இன்றைக்கும் திருமூர்த்தி மலையில் அனுசூயாதேவிக்குக் கோயில் உள்ளது.

இங்கே மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தரிசனம் செய்தால், நம் ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும்; பித்ருக்கள் மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism