Published:Updated:

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

நவகிரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நவகிரகங்கள்

நவதானிய பரிகாரங்கள் - ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

நவதானிய பரிகாரங்கள் - ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

Published:Updated:
நவகிரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நவகிரகங்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் நவகிரகங்கள் ஆதிக்கம் செலுத்து கின்றன. அனைத்து கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் சீராக இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. முன்வினைக்கு ஏற்ப கிரகங்களின் பலன்களும், செயல்பாடுகளும் மாறுபடும். அதற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதும் உண்டு.

கிரக தோஷங்கள் உண்டாகும்போது, அவற்றுக்குப் பரிகாரமாகக் குறிப்பிட்ட வழிபாடுகள், தரிசிக்கவேண்டிய தலங்கள் குறித்த விளக்கங்களை ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன. அதேபோல், ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய தானியங்களையும் பட்டியலிடுகின்றன.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

தோஷ பாதிப்பு ஏற்படுத்தும் கிரகத்துக்குரிய நாளில், அந்தக் கிரகத்தின் தன்மையைக் கொண்ட ஜீவராசிகளுக்கு, உரிய தானியங்களைத் தானம் அளித்தால் தோஷம் நீங்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

இயற்கையிலேயே ஒவ்வொரு ஜாதகருக்கும் ஒவ்வொருவிதமான உணவு பிடித்திருக்கும். ஜாதக அடிப்படையில் அமையும் இயல்பு இது என்றால் மிகையாகாது. அப்படியே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய தானியம் குறித்த பரிகார வழிபாட்டு விளக்கங்களும் நமது ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

சூரியன் - கோதுமை
சந்திரன் - நெல் (பச்சரிசி)
செவ்வாய் - துவரம் பருப்பு
புதன் - பச்சைப் பயறு
குரு - கொண்டைக் கடலை (மற்றும் கடலை வகைகள்)
சுக்கிரன் - வெள்ளை மொச்சை
ராகு - உளுந்து
கேது - கொள்ளு
சனி - எள்ளு

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

அதிகாலையில் கோதுமை தானம்...

ருவருடைய சுய ஜாதகத்தில் சூரியன் உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும், சூரியன் லக்னாதிபதியாக வந்தாலும், அந்த ஜாதகருக்குக் கோதுமைப் பொருள்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும்.

ஜாதகத்தில் சூரியன் நீசம் அடைந்து இருந்தால், சூரியன் தோஷம் பெற்றிருந்தால் அல்லது சூரியன் 3, 6, 8 மற்றும் 12-ம் இடத்தில் மறைந்து இருந்தால், ஜாதகர் சூரியனுக்குப் ப்ரீத்தி செய்யவேண்டும். சூரியனுக்கு உரிய கோதுமைப் பொருளால் குலதெய்வத்துக்கு நைவேத் தியம் சமர்ப்பித்து வழிபட வேண்டும். அந்தணர்களுக்குக் கோதுமைப் பொருள் களைத் தானம் அளிக்கலாம்.

குதிரை, வான்கோழி, ஒட்டகம் போன்ற பிராணிகளுக்குக் கோதுமை தானியங்களை உண்ணக் கொடுக்கலாம். சூரியனால் அமையப்பெற்ற தோஷங்கள் அனைத்துக்கும் கோதுமை தானம் சிறந்த பரிகாரமாகும். இந்த தானத்தை அதிகாலை நேரத்தில் செய்வது நல்லது.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

அந்திமாலையில் மீன்களுக்கு உணவு...

ருவருடைய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருந்தால் அவர்களுக்கு நெல் அல்லது பச்சரிசி சாதத்தின்(பொங்கல்) மீது அதிக விருப்பம் இருக்கும். சந்திரன் லக்னத்தின் அதிபதியாக வந்தாலும் இனிப்பு கலந்த பச்சரிசி சார்ந்த உணவு மீது ஆர்வம் ஏற்படும்.

சந்திரன் நீசம் அடைந்திருந்தாலோ, சந்திரன் தோஷம் பெற்றிருந்தாலோ, சந்திரன் லக்னத்துக்கு 3, 6, 8 மற்றும் 12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ பாதிப்புகள் உண்டு. இதற்குப் பரிகாரமாக, நெல் அல்லது பச்சரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை மீன் போன்ற நீர்வாழ் பிராணிகளுக்கு உணவாக இடலாம். திங்கள்கிழமை அல்லது பெளர்ணமி தினங்களில் மாலை வேளையில் இதைச் செய்தால் சந்திரனால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

முருகன் கோயிலுக்குத் துவரம் பருப்பு...

செ
வ்வாய் பகவான் ஒரு ஜாதகத்தில் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று இருந்தால் அல்லது அவர் லக்னாதிபதியாக அமையப் பெற்றிருந்தால், இயற்கையிலேயே அந்த ஜாதகர் துவரம் பருப்பு சாதம் முதலான துவரை சார்ந்த உணவு வகைகளில் - பண்டங்களில் ஈர்ப்பு உள்ளவராக இருப்பார்.

செவ்வாய் பகவான் நீசம் பெற்றுத் திகழ்வதும், மறைவு ஸ்தானங்களில் இருப்பதும் அவரால் உண்டாகும் பலன்களைக் குறைப்பதுடன் பாதிப்பையும் ஏற்படுத்தும். இப்படியான கிரக அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும், செவ்வாய் மூலம் வேறுவிதமான தோஷங்களுக்கு ஆளாகியிருந்தாலும் துவரம் பருப்பு தானம் செய்யவேண்டும்.

செவ்வாய்க் கிழமைகளில் அதிகாலை நேரத்தில் முருகப் பெருமான் கோயில்களுக்குத் துவரம் பருப்பு வழங்கி, வழிபடலாம். பக்தர்களுக்குத் துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம் செய்யலாம். இதனால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறையும். மேலும், சொந்த வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்களும், இந்தப் பரிகாரத்தைச் செய்து பலன் பெறலாம்.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

கிளிகளுக்குப் பச்சைப் பயறு...

பு
தன் ஒரு ஜாதகத்தில் உச்சம், ஆட்சி பெற்று இருந்தால் அல்லது அவரே லக்னாதிபதியாக இருந்தால் கல்வி, கலைஞானம் ஸித்திக்கும். அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உங்களைப் புகழ்பெற வைக்கும். இந்த ஜாதகர்கள் உணவில் பச்சைப் பயறு சேர்த்துக்கொள்வது சிறப்பு.

ஜாதகத்தில் புதன் நீசம் பெறுவதும் மறைவு ஸ்தானங்களில் இருப்பதும் குறிப்பிட்ட பலன்களில் பாதிப்பைத் தரும். இப்படியான ஜாதக அமைப்பைப் பெற்ற அன்பர்கள், கிளிகளுக்குப் பச்சைப் பயறு பதார்த்தங்களை உணவாகக் கொடுக்கலாம். மூன்றாம் பாலினத்தவருக்குத் தானம் செய்வதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

கொண்டைக் கடலை தானம்...

ஜா
தகத்தில் குருபகவான் உச்சம், ஆட்சி பெற்றிருந்தாலோ அல்லது அவர் லக்னாதிபதியாக இருந்தாலோ சிறப்பு. இத்தகைய ஜாதகர்கள், வியாழக்கிழமைகளில் கொண்டைக் கடலை அல்லது இனிப்பும் கடலையும் கலந்த பதார்த்தங்களை மகான்கள் சந்நிதியில் தானம் செய்வது விசேஷம். இதன் மூலம் குருபகவானின் திருவருளைப் பன்மடங்கு பெற முடியும்.

குரு பகவான் நீசம் பெறுவதும், மறைவு ஸ்தானங்களில் இருக்கும் நிலையும் குருபலனைப் பெறுவதில் தடங்கல்கள் உண்டாக்கும். இப்படியான அமைப்பைப் பெற்ற ஜாதகர்கள் வியாழக்கிழமைகளில் ஆசிரியர்கள், ஜோதிடர்கள், அந்தணர்கள், வேதபாடசாலையில் பயிலும் மாணவர்கள் ஆகியோருக்குக் கொண்டைக் கடலை மற்றும் இனிப்பு கலந்த கடலையை தானம் செய்யலாம். பசுக்கள், யானைகளுக்கு கடலை கலந்த பதார்த்தங்களை உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் குருபகவானால் உண்டாகும் தோஷ பாதிப்புகள் விலகும்; அவரின் ஆசியும் நிரம்ப கிடைக்கும்.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

சுக்ர யோகம் தரும் தானியம்...

ஜா
தகத்தில் சுக்கிரன் உச்சம், ஆட்சி அல்லது லக்னாதிபதியாக இருந்தால், அந்த ஜாதகர் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை மொச்சையைப் பரப்பி, அதன் மீது நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடவேண்டும். இதன் மூலம் சுக்ர பகவானின் அனுக்கிரகத்தை அதிகம் பெறலாம். வெள்ளிக் கிழமைகளில் அந்தணர்களுக்கு வெள்ளை மொச்சையை தானம் அளிக்கலாம்.

ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெறுவதும், லக்னத்துக்கு 3, 6, 8 மற்றும் 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருப்பதும் பாதிப்பு. இப்படியான அமைப்பைப் பெற்றவர்கள் புறா, கொக்கு போன்ற ஜீவராசிகளுக்கு உணவு தானம் கொடுப்பது விசேஷம். அதேபோல் திருவரங்கத்துக்குச் சென்று ரங்கநாதரை தரிசித்து வரலாம். பசுமடத்துக்கு வெள்ளை மொச்சையை தானம் அளிக்கலாம். இதனால் வாழ்வில் சுக்ரயோகம் கூடும்; செல்வ கடாட்சம் ஸித்திக்கும்.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

சனிக்கிழமையில் நல்லெண்ணெய்...

னி பகவான் என்றாலே, எல்லோருக்கும் `எள்’ தானியம் நினைவுக்கு வரும். சனி பகவான் ஒரு ஜாதகத்தில் மகரம், கும்பம் மற்றும் ராசியில் அமைந்திருந்தால், தினமும் உணவில் நல்லெண்ணெய் சேர்ப்பது சிறப்பு. மேலும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வர ஆயுள், ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் பெருகும்.

சனிபகவான் ஒரு ஜாதகத்தில் தோஷம் பெற்றிருந்தாலோ, அவர் 3. 6. 8 மற்றும் 12-ம் இடங்களில் அமைந்திருந்தாலோ, சனி ப்ரீத்தி செய்வது அவசியம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய், இனிப்பும் எள்ளும் கலந்த பட்சணங்களை ஏழைகளுக்குத் தானம் செய்யலாம். இனிப்பும் எள்ளும் கலந்த உணவுப் பொருள்களை காகத்துக்கு வழங்கலாம். இதன் மூலம் கடன் சிரமங்கள், வீண் அவமானங்கள் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும்.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

உளுந்து பரப்பி நெய் தீபம் ஏற்றுங்கள்...

ராகு பகவான் ஜாதகத்தில் விருச்சிகம் அல்லது ரிஷப ராசியில் இருந்தால், அந்த ஜாதகருக்கு உளுந்து சேர்த்த உணவுப் பொருள்களில் அதிக ஈர்ப்பு இருக்கும் அல்லது வெறுப்பு இருக்கும். இந்த ஜாதகர்கள் வெள்ளிக் கிழமை களில் ராகு காலத்தில், பூஜை அறையில் உளுந்து பரப்பி, அதன் மீது நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், செல்வ வளம் பெருகும். பொருளாதார வரவில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கும்.

ஜாதகத்தில் ராகுவால் தோஷம் உள்ள நிலை, ராகு தசை நடக்கும் நிலை எனில், அந்த ஜாதகர்கள் உளுந்து சேர்த்த உணவுப் பண்டங்களை அந்தணர்கள், ஜோதிடர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக வழங்கி ஆசி பெறுவது விசேஷம். இதன் மூலம் குடும்பம் சுபிட்சம் அடையும்; ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெருகும்.

தோஷங்கள் தீர்க்கும் நவதானியங்கள்!

குலதெய்வக் கோயிலில் கொள்ளு தானம்...

ஜா
தகத்தில் கேது பகவான் விருச்சிகம் அல்லது ரிஷப ராசியில் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் தங்களின் குலதெய்வத்துக்கு கோயிலில் வழிபட்டுவிட்டு, கொள்ளு தானியத்தைத் தானம் வழங்கினால் எதிர்காலம் சிறக்கும். ஜாதகத்தில் கேது தோஷம் இருந்தாலோ, கேது தசை நடக்கும் காலம் என்றாலோ, சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டு, கொள்ளு மற்றும் கொள்ளு சேர்த்து செய்யப்பட்ட பதார்த்தங்களைத் தானம் செய்வது விசேஷம். இதனால் கேது பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு, ஜாதகத்தில் நவகிரகங்களில் நிலையை ஆராய்ந்து, தசா புத்தி கணக்கீடு செய்து, பாதிப்பு தரும் கிரக நிலைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட கிரகத்துக்கு உரிய நாளில், உரிய தானியங்களைத் தானமாகக் கொடுத்து, வழிபட்டு வந்தால், நம் வாழ்க்கை சிறக்கும்.

*****

மருத்துவ சிகிச்சையை எந்த நாளில் தொடங்கலாம்?

ருத்துவ சிகிச்சையோடு தொடர்புடைய பல்வேறு விதமான ஜோதிடத் தகவல்கள் பழைமையான நூல்களில் உள்ளன

நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்: அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய 16 நட்சத்திரங்கள்.

சாதாரண காய்ச்சல் போன்ற உபாதைகள் பூரம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திர நாட்களில் ஆரம்பித்தால், சிகிச்சை தேவை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

அதேபோல், திங்கள் - அஸ்தம், புதன் - அஸ்வினி, வியாழன் - சித்திரை, வெள்ளி - புனர்பூசம் இந்தக் கிழமைகள் அல்லது நட்சத்திர நாட்கள், சிகிச்சை செய்ய உகந்தவை ஆகும்.

- கே.பாலன், மதுரை-2