Published:Updated:

எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகப் போகும் 2020... மகர ராசியினருக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்!

உங்களின் தொழிலை நீங்கள் எப்படிச் செய்யலாம், எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கான முன்னோடியாகவும் அனுபவமாகவும் 2020-ம் ஆண்டு அமையும்.

புத்தாண்டுப் பலன்கள்
புத்தாண்டுப் பலன்கள்

2020 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில், மகர ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்...

2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறக்கிறது. இது, மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

Capricorn
Capricorn

மகர ராசியினரின் எதிர்காலத்துக்கான வழிகாட்டுதலாக 2020-ம் ஆண்டு அமையவிருக்கிறது. 

இளைஞனாக இருந்து வாழ்க்கையில் நுழைய இருப்பவர்களுக்குப் படிப்பறிவு, கேள்வி அறிவு இருந்தால் மட்டும் போதாது. பட்டறிவு இருந்தால்தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது பொதுவாக சொல்லப்படக்கூடிய சித்தாந்தம். அந்த வகையில் 2020-ம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு `அனுபவமே ஆசான்' என்று சொல்லக்கூடிய ஆண்டாக இருக்கும்.

ஏராளமான புதிய அனுபவங்கள் இனிப்பாகவும் கசப்பாகவும் உங்களுக்காகக் காத்து இருக்கின்றன. வெற்றி, தோல்வி இரண்டுமே ஒரு மனிதனுக்கு அனுபவம்தான். வெற்றி கிடைக்கும்போது சந்தோஷத்தில் ஆடக் கூடாது, தோல்வி கிடைக்கும்போது துயரத்தில் துவண்டு போய்விடக் கூடாது என்கிற ஞானம் இந்த ஆண்டு உங்களுக்குக் கிடைக்கும்.

நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள், வேலை தருபவர் எப்படிப்பட்டவர், உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர் எப்படிப்பட்டவர், பணம் கொடுப்பவர் எப்படிப்பட்டவர், பணம் வாங்குபவர் எப்படிப்பட்டவர் என்பதையெல்லாம் உங்களுக்கு இந்த ஆண்டு கற்றுத் தரப்போகிறது.

Planets
Planets
தொட்டதெல்லாம் துலங்குமா... வெற்றி வாய்ப்பு பெருகுமா?! தனுசு ராசிக்காரர்களின் புத்தாண்டுப் பலன்கள்

உங்களின் தொழிலை நீங்கள் எப்படிச் செய்யலாம், எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கான முன்னோடியாகவும் அனுபவமாகவும் 2020-ம் ஆண்டு அமையும். இந்த அனுபவம்தான், எதிர்வரும் காலத்தில் உங்களின் வாழ்க்கையை முறையாகத் திட்டமிட வைத்து, ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைக்க உதவும்.

தோல்வி என்பது இந்த ஆண்டு உங்களுக்கு இருக்காது. ஆனால், அதே வேளையில் தடைகள், தாமதங்கள் ஏற்படும். அவற்றை எப்படித் தாண்டி வெற்றிகொள்வது என்பதற்கான சூட்சும ரகசியங்களை, இப்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அனுபவத்தை எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்தக் கடையிலும் நம்மால் வாங்க முடியாது. பணம் என்றால் என்ன, உறவுகள் என்றால் என்ன, நண்பர்கள் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்து செய்வது நல்லது. அவசரத்தில் காரியம் நிதானத்தில் சங்கடம் என்றிருக்கக் கூடாது. 

பொதுவாகவே மகர ராசிக்காரர்கள், துருதுருவென எதையாவது செய்துகொண்டே இருப்பவர்கள். அவற்றையெல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு நின்று நிதானமாக எதையும் செய்யவேண்டிய நேரம் இது.

எந்த ஒரு புதிய காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், அம்மா அப்பா தாய் தந்தையரிடமும் தாத்தா பாட்டியிடமும் கேட்டுவிட்டு அவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகு செய்வது மிகவும் சிறந்தது.

Planets
Planets

இருக்கும் வேலையை விட்டுவிட்டுப் புதிதாக ஒரு வேலையில் சேரப் போகிறேன் என்பதெல்லாம் இப்போது கூடாது. அது எப்போதும்போல் போய்க்கொண்டேயிருக்கும். ஆறு போகும் போக்கிலேயே போய் கரையேறுவதுதான் இப்போதைக்கு உங்களுக்கு மிகவும் சிறந்தது. `எதிர்நீச்சல் போடுகிறேன்' என்று உங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கத் தேவையில்லை.

குறிப்பாக, 30, 40 வயதில் இருப்பவர்கள் புதிதாகத் தொழில் தொடங்குவதையோ இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதையோ இப்போது செய்ய வேண்டாம். தள்ளிப் போடுவது நல்லது.

செய்யும் காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். அதனால் மனம் தளர்ந்து சோர்வடைந்து போகாமல், எப்போது அந்தக் காரியம் முடியுமென்பதைக் காலத்தின் தீர்ப்பில் விட்டுவிட்டு, நீங்கள் அமைதியாக இருங்கள். மேலும், எவருக்கும் ஜாமீன் கையொப்பம் போடுவதோ கடன் வாங்கிக் கொடுப்பதோ போன்ற வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

`உடையவன் இல்லா இருக்கை பாழ்' என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. அதை இப்போது மகர ராசிக்காரர்கள் தெரிந்துகொள்வீர்கள். மகர ராசியினருக்கு ஒரு எதிர்காலத்துக்கான வழிகாட்டுதலாக இந்த 2020-ம் ஆண்டு அமையவிருக்கிறது.

Saturn
Saturn

ஜன்ம சனி நடைபெறுவதால் வேலை பார்ப்பதற்கு எந்தவித ஆர்வத்தையும் தூண்டாமல், உங்களை முடக்கிப் போட வைத்திருக்கப் பார்ப்பார். எப்போதும் சோம்பலும் ஒரு அயர்ச்சியும் உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கும். `சரி, அதை நாளைக்குச் செய்துகொள்ளலாமே சற்றுநேரம் படுப்போம் என்று உங்களின் மனம் அசைபோட்டுக்கொண்டிருக்கும்.

மாணவர்களுக்கு எப்போதும் விளையாட்டிலேயே சிந்தனை இருக்கும். புத்தகத்தைத் திறந்தாலே படிப்பில் ஆர்வம் குறையும். மனத்தை ஒருநிலைப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். தியானம், யோகா தெய்வ வழிபாடு போன்றவற்றில் ஈடுபடுவது நல்ல பயனளிக்கும்.

மகர ராசிக்காரர்கள் முயற்சியையும் கடின உழைப்பையும் முதலீடாக்கிப் போட்டால்தான் அவர்களுக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும்.

ஜனவரி 24-ம் தேதி திருக்கணிதப்படி சனி பகவான் உங்களின் ஜன்ம ராசியான மகர ராசியில் வந்து அமர்கிறார். ஜன்மத்தில் சனி நடக்கும்போது காரியத் தடைகளை ஏற்படுத்துவது, உடல் சோம்பலை ஏற்படுத்துவது போன்றவற்றைச் செய்வார்.

வெற்றிகள் குவியப்போகும் 2020...  துலாம் ராசிக்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்!#Video

பணம் தேவைக்கேற்பவே வரும். மிகுதியான அளவு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. சாதகமற்ற பலன்கள் இருந்தாலும், எப்பவுமே ஒரு ராசிக்குரியவர் அதே ராசியில் அமரும்போது கெடுபலன்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். அந்த அடிப்படையில் மகர ராசிக்கு அதிபதி சனி பகவான் அவரின் சொந்த வீட்டிலேயே இருக்கப் போகிறார். ஆகவே, சொந்த வீட்டில் இருந்துகொண்டு ஜாதகருக்கு தீங்கு செய்ய மாட்டார் என்பது பொதுவான விதி.

ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார். அதனால் கெடுபலன்கள் இல்லாவிட்டாலும் சாதகமற்ற பலன்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், நாம் முன்னெச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் செயல்பட்டால் வரக்கூடிய தடைகளை எளிதாகத் தேடமுடியும்.

புதிய முயற்சிகள், பிரமாண்டமான செயல்பாடுகளை இந்த ஆண்டு தள்ளிப்போடுவது நல்லது. செலவில் சிக்கனமும் கவனமும் தேவை.

2020 -ம் ஆண்டு ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டிய இடத்தில் 100 ரூபாய் அளவிலேயே செலவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.