Published:Updated:

2020-ல் வீடு, வாகன யோகம் பெறப்போகும் மீன ராசிக்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்!

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்குத் தங்களின் வாழ்க்கைத் துணையை மிகச் சரியான முறையில் தேர்வு செய்வதற்குரிய ஆண்டாக இந்த 2020-ம் ஆண்டு இருக்கும்.

புத்தாண்டு
புத்தாண்டு

2020 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில், மீனம் ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்...

"2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறந்திருப்பது மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

Pisces
Pisces

மீன ராசிக்காரர்களுக்குச் சிறந்த மனமாற்றத்தைத் தரக்கூடிய ஆண்டாக 2020 இருக்கும். தொழில் ரீதியாகவும் வேலை ரீதியாகவும் இதுவரை நல்ல வேலை அமையப் பெறாமல், அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலையும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் அமையும்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்குத் தங்களின் வாழ்க்கைத் துணையை மிகச் சரியான முறையில் தேர்வு செய்வதற்குரிய ஆண்டாக இந்த 2020-ம் ஆண்டு இருக்கும். இதுவரை தங்களின் வாழ்க்கைத் துணையிடம் தங்களின் மன விருப்பத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தவர்கள், இந்த ஆண்டு தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து அதில் வெற்றியும் பெறுவார்கள்.

2019-ம் ஆண்டு நீங்கள் நினைத்து பெருவாரியான விஷயங்கள் எப்படி நடக்காமல் இருந்ததோ அவையெல்லாம் இப்போது நடக்கத் தொடங்கும். ஆண்டின் தொடக்கத்திலேயே நீங்கள் இதை உணரத் தொடங்கி விடுவீர்கள்.

எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகப் போகும் 2020... மகர ராசியினருக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்!

மீன ராசிக்காரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பத்தாம் இடத்திற்கு குரு வந்துவிட்டார். `பத்தில் இருக்கும் குரு பதவியைப் பறிப்பார்' என்று பொதுவான ஜோதிடச் சொலவடை இருந்து வருகிறது. ஆனால் தனுசுக்கும் மீனத்துக்கும் அதிபதியான குரு பகவான் தன் சொந்த ராசியான தனுசில் இருப்பதால், எந்தக் கெடுதலையும் செய்யமாட்டார். பத்தில் குரு வந்தால் தொழிலை இவர்களுக்கு மேம்படுத்தித் தரக்கூடிய ஒரு நிலையைத் தருவார். இயற்கைச் சுபரான குரு எந்தக் கெடுதலும் செய்யமாட்டார்.

உத்தியோகத்திலிருந்தும் தாங்கள் செய்த பணிக்கான அங்கீகாரம் கிடைக்காமல், மன உளைச்சலிலிருந்து வந்தவர்களுக்கு, இப்போது பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும்.

Earth
Earth

மீடியா துறையிலும் பத்திரிகைத் துறையிலும் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு 2020 சிறப்பான ஆண்டாக இருக்கும். அதாவது ஓரிடத்தில் நிலையாக வேலை செய்யாமல் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு, இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள், ஆலயப் பணிகளில் அர்ச்சகராக இருப்பவர்கள் ஆகியோருக்கெல்லாம் குரு பகவான் சிறப்பான மேன்மையை இந்தப் புத்தாண்டில் வழங்குவார்.

மீன ராசிக்காரர்களுக்கு கோள்சார ரீதியாக சுக்கிரனும் ராகுவும் நல்ல இடத்தில் இருக்கிறார்கள். தனுசில் இருக்கும் குரு பகவான் 4 - ம் இடத்தையும் 6 - ம் இடத்தையும் பார்க்கிறார். வீடு, வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்பை மீன ராசிக்காரர்களுக்குத் தருவார். இந்த ஜாதக அமைப்புகள் யாவும் ஏப்ரல் மாதத்துக்குள் நடக்கும்.

புதிதாகக் கடன் வாங்கப் போகிறோமே என்பது குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை. அவை சுபச்செலவாகவே இப்போது அமையப்போகிறது.

Star signs
Star signs

`பெரிய தொகையைக் கடனாகப் பெற்று, புதிதாக வீட்டை வாங்கினால் நம்மால் அந்தக் கடனை அடைக்க முடியுமா?' என்ற பயம் சிலருக்கு இத்தனை நாள்களாக இருந்து வந்தது. அந்த பயமெல்லாம் விலகி, புதிய வீட்டை வாங்கி, அதில் கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வீட்டுக் கடனை அடைக்கக்கூடிய தன்னம்பிக்கையும் இப்போது இவர்களுக்குப் பிறக்கும்.

தனுசில் இருக்கும் குரு பகவான் மீன ராசிக்கு இரண்டாம் இடமான மேஷத்தை 5 -ம் பார்வையாகப் பார்க்கிறார். இரண்டாம் இடம் என்பது தனம், குடும்பம், வாக்குஸ்தானம் ஆகியவற்றுக்குக் காரகத்துவம் பெற்றது. இரண்டாம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு அதீத பண வரவு இருக்கும். இது நாள்வரை திருமணமாகாமல் இருந்த இளைஞர்களுக்கு அவர்கள் குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் வகையில் திருமணம் நடைபெறும். பணமும் குடும்பமும் அமைந்துவிட்டாலே, அவர்களுக்கு வாக்கில் வலிமை வந்து சேரும்.

சனி பகவான் ஜனவரி 24-ம் தேதி மீன ராசிக்கு பதினொன்றாமிடமான மகர ராசிக்கு, தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியாகிறார். சனி பகவானின் சுழற்சிக்கு 30 ஆண்டுக்காலமாகும். ஒரு ராசியின் 11 - ம் இடத்துக்கு வரும்போது அவர்களுக்கு நல்ல லாபத்தைப் பெற்றுத் தருவார்.

பூர்வ புண்ணிய யோகத்தைப் பெறும் கும்ப ராசிக்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

ஆண்டின் தொடக்கத்திலேயே உங்களுக்குச் சிறப்பான பண வரவு இருக்கும். பணவரவு இருந்தாலே மற்ற பிரச்னைகளையெல்லாம் நீங்கள் எளிதாகத் தீர்த்து விடுவீர்கள்.

2020 ஆண்டு பணமும் வளமும் கொழிக்கும் ஆண்டாக அமையும் என்பது திண்ணம்.