Published:Updated:

வெற்றிகள் குவியப்போகும் 2020... துலாம் ராசிக்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்!#Video

புத்தாண்டு
புத்தாண்டு

ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். மிகப்பெரிய அளவில் வேகவேகமாக முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும்.

2020 ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 - ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில், துலாம் ராசிக்காரர்களுக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்...

``2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறக்கிறது. இது, மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி, இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு பகவான் சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவப் பலன்களே மிகுதியாக இருக்கும்.

Libra
Libra

2020-ம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு 50/50 என்கிற ரீதியில் சாதகமான பலன்களும் சாதகமற்ற பலன்களும் நடக்கக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.

துலாம் ராசிக்காரர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் நிதானமாகத்தான் எல்லா பலன்களும் நடைபெறும். வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ஒருமுறைக்கு  இருமுறை யோசித்துத்தான் எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஜூன் மாதம் முடிய இந்த நிலைதான் நீடிக்கும். ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். மிகப்பெரிய அளவில் வேகவேகமாக முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும்.

உங்களின் மனத்தில் இருக்கும் ஆசைகள், எண்ணங்கள் இவை யாவும் பூர்த்தியாகும். குறிப்பாக, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் கன்னிப்பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் நல்ல இடத்தில் வரன் அமையும்.

கடந்த 2019-ம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அத்தனை சிறப்பானதாக அமையவில்லை. சுமாரான பலன்களே நிகழ்ந்தன.  குறிப்பாக வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றில் பெரிய அளவில் பொருள் ஈட்ட முடியவில்லை.

Libra
Libra

அதற்கு நேர்மாறாக இந்த 2020-ம் ஆண்டு நல்ல முன்னேற்றத்தைத் தரும். தொழில் அபிவிருத்தியும் இருக்கும். புதிய வாடிக்கையாளர்களும் உங்களிடம் வந்து சேர்வார்கள். 

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாதங்கள், நீங்கள் செய்யும் முயற்சிகள், உங்களுடைய செயல்கள் இவற்றிலெல்லாம் சின்னச் சின்ன முட்டுக்கட்டைகளும் தடைகளும் வருவது இயற்கை. அவற்றின் முடிவுகள் தெரியாத நிலையில் கிணற்றில் போட்ட கல்லைப் போல் உங்களுக்கான லாபமும் வெற்றியும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் அதிகம். மெள்ள மெள்ள ஜூன் முடிந்ததும் நீங்கள் விதைத்த விதைகளெல்லாம் அறுவடையாகும்.

துலாம் ராசிக்காரர்கள், சின்னச் சின்ன தடைகள் வருவதைக்கண்டு பயப்படத் தேவையில்லை. கெடுபலன்கள் எதுவும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த ஜாதகம் வலுவானதாக இருந்தால், கோட்சார ரீதியாக நடக்கக்கூடிய சின்னச் சின்ன தடைகள்கூட அகற்றப்பட்டு பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.

Signs
Signs

ராசிக்கட்டத்தில் இருக்கும் 12 கட்டங்களில் 3, 6, 8, 12 ஆகிய இடங்கள் மறைவுஸ்தானம் எனச் சொல்லப்படுகின்றன. ஜாதக ரீதியாக இப்போது துலாம் ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் அவர்களுக்குத் தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். தங்களின் திறமை மீதே ஒரு சின்ன சந்தேகம் வரும். நம்மால் இதைச் செய்து முடிக்க முடியுமா, நம்மால் செய்ய முடியாமல் போகுமோ என்ற ஒரு பய உணர்வு ஏற்படும். இவற்றை அவர்கள் தியானம் மற்றும் தெய்வ வழிபாட்டின் மூலம் கடப்பது நல்லது.

தொழில் துறையில் இருப்பவர்கள் முதல் ஆறு மாதங்களில் புதிய முதலீடுகளை அவசரப்பட்டுச் செய்யவேண்டாம். அலுவலகத்தில் இருப்பவர்கள், உயரதிகாரிகள் சொல்லும் பணிகளைச் சிறப்பான முறையில் உடனுக்குடன் செய்து முடிப்பது, அவர்களுக்கு நல்ல பெயரை ஈட்டித் தருவதாக அமையும். 

முதல் ஆறு மாதங்கள் எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது ஏன் செய்யக் கூடாது என்பதையெல்லாம் யோசித்துத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அதன் பிறகு செயலாற்றுங்கள். தினசரி அலுவல்களை முன்கூட்டியே குறித்து வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

Signs
Signs

துலாம் ராசிக்காரர்களுக்கு நான்காம் இடமான மகர ராசிக்கு ஜனவரி 24 -ம் தேதி திருக்கணிதப்படி சனி பகவான் செல்கிறார். அர்த்தாஷ்டமச் சனியில் எதுவும் துன்பம் தருமோ எனக் கவலைப்பட வேண்டாம். மகர ராசி, சனி பகவானுக்குச் சொந்த வீடு என்பதால், துலாம் ராசிக்காரர்களுக்குத் துன்பம் தரமாட்டார்.

ஒன்றுக்கு நான்கு இடங்கள் அலைந்து திரிந்தால்தான் இளைஞர்களுக்குத் திருமணம் கைகூடும். தற்போது இருக்கும் வேலையை திடுதிப்பென உதறித்தள்ளிவிட்டு வேறு வேலைக்குச் செல்ல வேண்டும் என நினைக்காதீர்கள். இப்போது இருக்கும் வேலையில் இருந்துகொண்டே புதிய வேலையைத் தேடிக்கொண்ட பிறகு, தற்போது இருக்கும் வேலையை விடுவது நல்லது.

துலாம் ராசிக்கு சனி பகவான் ராஜ யோகாதிபதி அவர் நான்காமிடத்தில் இருக்கிறார். துலாம் ராசிக்கு ஆகாதவர் குரு, அவர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். பாதகமான இடத்தில் குரு பகவான் இருந்தால் உதவாமல் இருப்பாரே ஒழிய கெடுபலன்களைச் செய்ய மாட்டார், என்பது ஜோதிட விதி. 

முதல் ஆறு மாதம் சுமாரான பலன்களையும் அடுத்த ஆறு மாதம் சிறப்பான பலன்களையும் தரும் வகையில் 2020 -ம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அமையும்.

பிறர் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கும் கடக ராசி அன்பர்களுக்கான 2020 புத்தாண்டு பலன்கள்! #Video
2020 புத்தாண்டு ராசி பலன்கள்
அடுத்த கட்டுரைக்கு