Published:Updated:

விட்டுவிலகும் ஏழரைச் சனி... வெளிச்சம் பெறப்போகும் விருச்சிக ராசிக்காரர்கள்! - புத்தாண்டு பலன்கள்

விருச்சிக ராசி
விருச்சிக ராசி

ஜனவரி 24-ம் தேதியோடு முடிவடைந்து மொத்தமாக ஏழரைச் சனி விருச்சிக ராசிக்காரர்களை விட்டு விலகுகிறது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு விடியலைத் தரக்கூடிய ஆண்டாக இந்த 2020-ம் ஆண்டு அமையப்போகிறது. கடந்த இரண்டரை ஆண்டுக்காலமாக விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் பிடியில் சிக்கித் தவித்து வந்தார்கள். அந்த நிலையெல்லாம் வருகிற ஜனவரி 24-ம் தேதியோடு முடிவடைந்து மொத்தமாக ஏழரைச் சனி விருச்சிக ராசிக்காரர்களை விட்டு விலகுகிறது.

Vikatan
விட்டுவிலகும் ஏழரைச் சனி... வெளிச்சம் பெறப்போகும் விருச்சிக ராசிக்காரர்கள்! - புத்தாண்டு பலன்கள்

ஜாதக நோட்டை கையில் எடுத்துக்கொண்டு ஜோதிடர்கள் பலரிடம் சென்று ஜாதகம் பார்த்துச் சலித்தவர்கள் யார் என்று பார்த்தால், விருச்சிக ராசிக்காரர்கள்தான். அந்த அளவுக்கு இவர்களை ஏழரைச்சனி பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டது. அந்த நிலையெல்லாம் இப்போது மாறிப்போய் புதியதொரு பாதையை இவர்களுக்கு வகுத்துத் தர சனிபகவான் காத்திருக்கிறார்.

குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும், தொழில் வகையிலான சூழ்நிலையாக இருந்தாலும், பெரியவர்கள், சிறியவர்கள் யாராக இருந்தாலும் விருச்சிக ராசிக்காரர்கள் கண்கள் கலங்கும் அளவுக்குக் கவலைகொண்ட மனிதர்களாகவே இந்த இரண்டரை ஆண்டுக்காலம் நடமாடிக்கொண்டிருந்தனர்.

வெற்றிகள் குவியப்போகும் 2020...  துலாம் ராசிக்காரர்களின் ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்!#Video
விட்டுவிலகும் ஏழரைச் சனி... வெளிச்சம் பெறப்போகும் விருச்சிக ராசிக்காரர்கள்! - புத்தாண்டு பலன்கள்

இருள் கிரகமான சனி ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப் படுத்திவிட்டு முழுவதுமாக இப்போது விலகுகிறது. ஏழரைச் சனி விலகினாலே வாழ்க்கையில் புதிய வெளிச்சம் வரப்போகிறது என்பது ஜோதிட விதி. 2020-ம் ஆண்டு தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்கு விருச்சிக ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்களைக் காலம் வழங்க இருக்கிறது. அவர்கள் எதையுமே செய்யத் தேவையில்லை, அவர்களுக்கு வெற்றி தானாகவே வந்து சேரும்.

அதிர்ஷ்ட தேவதையே உங்கள் வாசலில் வந்து நிற்பாள். அவள் பல வெற்றி தேவதைகளை உங்களுக்குத் துணையாக அழைத்துத் தருவாள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இருந்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல நல்ல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன. அவர்கள் அடையப்போகும் வெற்றியின் ஓர் அறிகுறியாக இதைச் சொல்லலாம்.

விட்டுவிலகும் ஏழரைச் சனி... வெளிச்சம் பெறப்போகும் விருச்சிக ராசிக்காரர்கள்! - புத்தாண்டு பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் இதுவரை எவற்றையெல்லாம் விரும்பிக்கேட்டு கிடைக்காமல் இருந்ததோ அவையெல்லாம் கிடைக்கும். எது வேண்டும் என்று கேட்டாலும் அது உடனேயே அவர்களுக்கு விரைவாகக் கிடைக்கும். இதுதான் இந்த ஆண்டின் மிக முக்கியமான பலன். எல்லா விருச்சிக ராசிக்காரர்களும் இந்த 2020-ம் ஆண்டில் மிகவும் சிறப்பானதொரு நிலையை அடைவார்கள்.

அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீங்கள் எந்தத் திசையில் பயணிக்கப் போகிறீர்கள் என்பதைக் காண்பிக்கக்கூடிய ஓர் ஒளிமிகுந்த ஆண்டாக இந்த 2020-ம் ஆண்டு அமையும். வேலை, தொழில், வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் ஒரு தேக்க நிலையிலேயே இருந்துவந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு பெரிய அளவிலான வெற்றியைக் குறிக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும்.

விட்டுவிலகும் ஏழரைச் சனி... வெளிச்சம் பெறப்போகும் விருச்சிக ராசிக்காரர்கள்! - புத்தாண்டு பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் வேதனைகளைச் சாதனைகள் ஆக்குவார்கள். இதுவரை பல இடங்களில் உதவிகேட்டும் கிடைக்காத நிலை இருந்தது போய், இப்போது தேடி வந்து உதவுவார்கள். இதிலிருந்து, நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது என்பதை அவர்களே அறிந்துகொள்ளலாம். குறிப்பாக, கடன் தொல்லைகளால் வட்டிகட்ட முடியாமல் அவஸ்தை பட்டுவந்த விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் கடனை அடைத்து முடிப்பார்கள். வேலை இல்லாமல் தேவையற்ற அவப்பெயரோடு இருந்து வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் சேர்ந்தாற்போலக் கிடைக்கக்கூடிய ஒரு நேரமாக இது இருக்கிறது. கணவன், மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு வீட்டில் ஒரு விருச்சிக ராசிக்காரர் இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நிம்மதியற்ற நிலையில் இருந்த சூழல் இருந்து வந்தது. இப்போது அந்த நிலையெல்லாம் மாறிப்போய் சுபமான ஒரு நிலை உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி

மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி இருக்கும் என்பது திண்ணம்.https://www.vikatan.com/spiritual/astrology/2020-new-year-astro-predictions-for-gemini?artfrm=wrustory1

https://www.vikatan.com/spiritual/astrology/2020-new-year-astro-predictions-for-gemini?artfrm=wrustory1
அடுத்த கட்டுரைக்கு