புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

2023 புத்தாண்டு மிதுன ராசிபலன்கள்

மிதுனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மிதுனம்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த 2023 புத்தாண்டு மிதுன ராசி பலன்கள்

தன்னம்பிக்கை மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது, 2023 புத்தாண்டு பிறக்கிறது. வருங்காலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். சகோதர-சகோதரிகளுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

2023 புத்தாண்டு மிதுன ராசிபலன்கள்

ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். அண்ணனுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். சேமிப்புக் கணக்கில் இருப்பு அதிகமாகும். அரை குறையாக நின்றுபோன வீடு கட்டும் வேலையை விரைந்து முடிப்பீர்கள். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

ராசிநாதனான புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், சோந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. மகளுக்கு நல்ல வரன் கிட்டும். புது டிசைனில் நகைகள் வாங்குவீர்கள்.

22.4.23 வரை குரு 10-ல் தொடர்வதால், வேலைச்சுமை, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்கவேண்டி வரும். பிரபலங்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். பழைய கடன் பிரச்னைகள் மனதை வாட்டும். மூன்றாவது நபருக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை; வீண் உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. சமூக ஊடகங்களில் கவனமாக இருங்கள். வங்கிக் கணக்கு விவரங்களை வெளியில் பகிர வேண்டாம்.

23.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணி நிரந்தரமாகும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். மகனின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். வங்கிக் கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள்.

2023 புத்தாண்டு மிதுன ராசிபலன்கள்

புத்தாண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி தொடர்கிறது. முன்கோபம், பதற்றம், சிறு சிறு ஏமாற் றம், வீண் பழிகள் வந்துசெல்லும். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். 29.3.23 முதல் 23.8.23 வரை சனி அதிசாரத்தில் 9-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால், இக்காலக்கட்டத்தில் அனைத்துப் பிரச்னைகளும் விலகும். ஆனால் சேமிப்புகள் கரையும். எனினும், அஷ்டமத்தில் அகப்பட்டதைவிட இந்தக் காலக்கட்டம் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும்.

8.10.23 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்க வேண்டாம். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 9.10.23 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால், சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரிகளே! மார்ச் மாதம் கடையிலிருந்து கணிசமாக லாபம் உயரும். பாக்கிகள் வசூலாகும். சலுகைகளால் வாடிக்கையாளர்களைக் கவர்ந் திழுப்பீர்கள். பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பி னாலும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். கமிஷன், உணவு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஏப்ரல் மாதம் வரை கவனம் தேவை. மே மாதம் முதல் குரு பகவான் உத்தியோக ஸ்தானத்தை விட்டு விலகுகிறார். உங்களுக்கு ஒத்துழைப்பு தரும் அதிகாரி வந்து சேர்வார். சிலருக்கு அதிகச் சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, புது அனுபவங் களையும் திருப்புமுனையையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: நாமக்கல் அனுமனை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் துளசி சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபடுங்கள்; வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்கும்.