Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: தனுசு - தடைகள் அகலும்! | கே.பி. வித்யாதரன்

தனுசு - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
தனுசு - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

இந்த ஆண்டு பிறக்கும்போது புத பகவான் சாதகமான ராசிகளில் சஞ்சரிக்கிறார். இதனால் முக்கியப் பிரமுகர்களின் நட்பும் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். பழைய சொத்தை எதிர்பார்த்த விலைக்கு விற்றுப் புதிய சொத்து வாங்குவீர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஏழரைச் சனியின் தாக்கத்தால் தடுமாறிக்கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு உங்களுக்குப் பல வகையிலும் ஆறுதல் தரும் ஆண்டாக அமையப்போகிறது.

இந்த ஆண்டு பிறக்கும்போது புத பகவான் சாதகமான ராசிகளில் சஞ்சரிக்கிறார். இதனால் முக்கியப் பிரமுகர்களின் நட்பும் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். பழைய சொத்தை எதிர்பார்த்த விலைக்கு விற்றுப் புதிய சொத்து வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும்.

குருபகவான்
குருபகவான்

சுக்கிரன் உங்கள் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம், விலையுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசிக்கு 12ஆம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் உங்களைத் துரத்தும். காலில் சக்கரம் கட்டினாற்போல பயணங்களும் அலைச்சல்களும் அடுத்தடுத்து இருக்கும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் 13.4.2022 வரை சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இதனால் புதிய முயற்சிகள் சிறு இழுபறிக்குப் பின் முடியும். பணிச்சுமையும் கடுமையாக இருக்கும். ஆனால் 14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குரு 4அம் வீட்டில் குருபகவான் அமர்ந்து பலன் தரவிருப்பதால் அதுவரை இழுபறியாக இருந்த பல காரியங்களெல்லாம் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் ஆரோக்கியம் மேம்படும். மனவருத்தங்கள் நீங்கும். எதைச் செய்தாலும் சட்டப்படியே செய்யுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேது உங்கள் ராசிக்கு 12-ல் 20.3.2022 வரை சஞ்சாரம் செய்வதால் நீண்ட நாள்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். தூக்கம் குறையும். அதேவேளை ராகு 6ஆம் வீடான ரிஷபத்தில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் ஏற்படும். சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். விழாக்களில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் ராகு 5ஆம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும்.

சனி பகவான்
சனி பகவான்

சனிபகவான் ராசிக்கு 2ஆம் வீடான மகரத்தில் அமர்ந்து ஆட்சிபலம்பெற்று பாதச் சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களையெல்லாம் தவிர்க்கப் பாருங்கள். எனவே ஆரோக்கியத்தில் உரிய அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். யாரையும் மட்டப்படுத்திப் பேசுவதை விட்டுவிடுங்கள். உள்மனதில் ஒருவிதப் போராட்டம் இருக்கும்.

அதேவேளையில் திடீர் பணவரவு, செல்வாக்கு அனைத்தும் கூடும். இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும். சில விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள்: வருடத்தின் சில மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். புதிய ஒப்பந்தங்களும் கைகூடும். வாடகைக்கு இருந்த இடத்திலிருந்து கடையைச் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி, ஷேர், சிமென்ட், செங்கல், உணவு வகைகளில் தொழில் செய்பவர்கள் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகச் சூழல் மிகவும் சாதகமாகும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். மே, டிசம்பர் மாதங்களில் புதுச் சலுகைகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியன உண்டாகும். மேலதிகாரியிடம் இருந்துவந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் தொடக்கம் உங்களைச் சிரமப்படுத்தினாலும் மையப் பகுதியும், இறுதிப் பகுதியும் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.