Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: கடகம் - தொட்டது துலங்கும்! | கே.பி. வித்யாதரன்

கடகம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
கடகம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

உறவினர், நண்பர்களிடையே உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

கடக ராசிக்காரர்கள் கடந்த ஓர் ஆண்டாகச் செயல்களில் பல தடை தாமதங்களைச் சந்தித்துவருகிறார்கள். பல நேரங்களில் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை என்பதைப்போன்ற சூழல்களைச் சந்தித்துவருபவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த 2022ஆம் ஆண்டு எப்படிப்பட்ட ஆண்டாக அமையப்போகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

உங்களின் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பேச்சு சாதுர்யத்தால் பல பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். அளவுக்கு மீறிக் கடன் வாங்கி அடைக்கச் சிரமப்பட்ட நீங்கள் தற்போது அந்தக் கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்திமுடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். சுக்கிர பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகத்தில் பொலிவு உண்டாகும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். வீட்டில் தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்கள் நடந்தேறும்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
ஆலங்குடி குருபகவான் கோயில்

பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த படி வீடு, மனை அமையும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பண வரவும் உண்டாகும். புதன் 7ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

உறவினர், நண்பர்களிடையே உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

குருபகவான் 13.4.2022 வரை அஷ்டம குருவாக சஞ்சரித்துவருவதால் எதிலும் நிதானம் தேவை. சேமிக்க முடியாதபடி செலவுகள் அதிகரித்தவண்ணம் இருக்கும். வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். ஆனால் 14.4.2022 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஜோதிட மொழி. எனவே இந்தக் காலகட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமான காலமாக அமையும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீட்டிலும் வெளியிலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அந்தஸ்து கௌரவம் உயரும். பதவிகள் தேடிவரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இப்போது இருக்கும் வேலையைவிட அதிக சம்பளத்தில் மிகச்சிறந்த வேலை கிடைக்கும்.

ஏளனமாகப் பேசியவர்களும் இனி உங்களைப் பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவாக புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தினைச் சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

குருபகவான்
குருபகவான்

கேது உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் நிற்பதால் மனதில் ஒரு வருத்தம் இருக்கும். தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீக சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். ராகு உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றிபெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

21.3.2022 முதல் உங்கள் ராசிக்கு 4-ல் கேதுவும், 10-ல் ராகுவும் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் வீண் கருத்துமோதல் வரக்கூடும். வீண் அலைச்சல், டென்ஷன், காரியத் தாமதம், வாகன விபத்துகள் வந்து போகும்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் ஒரு திட்டமிடல் அவசியம். யார் என்று தெரியாமல் மற்றவர்களோடு குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் உஷாராகப் பழகுங்கள். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைத் தரம் பிரித்துப் பார்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். முன்பு போல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக்கொண்டிருக்காதீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள்: நல்ல பணியாளர்கள் அமைவார்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கடையைச் சிலர் பெரிய இடத்திற்கு மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்யலாம். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் தொழில் சூடுபிடிக்கும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் வரும். பங்குதாரர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். உங்களிடத்தில் முற்பகுதியில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வீர்கள்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். மேலதிகாரிகள் நட்பு பாராட்டுவார்கள். அவர்களின் சொந்தப் பிரச்னைகளைக்கூட உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், என சின்னச் சின்னத் தொந்தரவுகள் வந்துபோகும். என்றாலும் உழைப்புக்கேற்ற நற்பலன்களைத் தரப்போகும் ஆண்டு இது.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் மையப்பகுதியிலிருந்து குரு பகவானின் பார்வையால் நற்பலன்களைப் பெற்று சாதிக்கும் ஆண்டாக அமையும்.

பரிகாரம்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீற்றிருக்கும் யோக பைரவரை தேய்பிறை அஷ்டமி திதியில் சென்று வணங்குங்கள்.