Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: கன்னி - புது பலம் பிறக்கும்! | கே.பி. வித்யாதரன்

கன்னி - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
கன்னி - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

14.4.2022 அன்று குருபகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்வில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சோர்வுகள் நீங்கி உற்சாகமாவீர்கள். எதிலும் கூடுதல் ஆர்வம் பிறக்கும். விட்டுப்போன வேலை வாய்ப்புகள் தேடிவரும்.

வாழ்க்கையில் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுத் தாங்கள் நினைத்ததை அடையும் வழக்கம் உடைய கன்னி ராசி அன்பர்களே. இந்தப் புத்தாண்டு. தங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சந்திரன் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் பிறக்கிறது என்பதால் உங்களின் வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும். அனைவரையும் உங்களின் கனிவான பேச்சால் கவர்வீர்கள். பணவரவில் இருந்த தடைகள் முற்றிலும் நீங்கும். சகோதர வகையில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். கன்னிக்கு யோகாதிபதி சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், மனதின் வலிமை அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குவரும். முக்கியப் பிரமுகர்களோடு கைகுலுக்கி அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்படும். வீட்டில் இருந்த சிக்கல்கள் தீரும். அமைதியும் நிம்மதியும் திரும்பும். புதபகவானும் ஐந்தில் நிற்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பெயர் புகழ் அதிகரிக்கும். மகன் அல்லது மகளின் போக்கு நல்லமுறையில் மாறும். அவர்களின் திறமை பளிச்சிடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது உகந்த இடம் அல்ல. ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். மனதில் எப்போதும் ஒரு டென்ஷன் போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டாலும் எப்போதும் சிறு அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும் என்றாலும், எதிரிகளும் நண்பர்களாவார்கள். திருப்பணிகளில் மனம் செல்லும். பொருள்களைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை. அனைவரோடும் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு பழகுவது நல்லது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதேவேளை 14.4.2022 அன்று குருபகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்வில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சோர்வுகள் நீங்கி உற்சாகமாவீர்கள். எதிலும் கூடுதல் ஆர்வம் பிறக்கும். விட்டுப்போன வேலை வாய்ப்புகள் தேடிவரும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அந்தப் பேறு கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். வீடுகட்ட மனைவாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னை தீரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

ராகு கேதுவைப் பொறுத்த வரை கேதுபகவான் ஆண்டு தொடங்கும்போது 3ஆம் வீடில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் பிதுர் ராஜ்ஜியச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். 9ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் ராகுவால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

குருவித்துறை குருபகவான்
குருவித்துறை குருபகவான்

21.3.22 அன்று ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின் 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.

சனிபகவான் ராசிக்கு 5ஆம் வீட்டில் இந்த ஆண்டு இறுதிவரை சஞ்சாரம் செய்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு நிறைவேற்றப் பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரியவேண்டி வரும். தாய்மாமன் வகையில் செலவுகளும், சின்னச் சின்ன மனஸ்தாபங்களும் வந்து போகும். குலதெய்வக் கோவிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள்: சோர்ந்திருந்தவர்கள் சுறுசுறுப்பாவீர்கள். தொழிலில் புதிய காற்று வீசும். பழைய இடத்திலிருந்து புதிய இடத்துக்கு வியாபாரத்தை மாற்றும் சந்தர்ப்பம் கனிந்துவரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் இருந்த பணம் கைக்குக் கிடைக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, துணி, ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

உத்தியோகஸ்தர்கள்: மறைந்துகிடந்த உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்களுக்கான உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் பகையை மறந்து இனி உங்களுக்கு உதவுவார்கள். மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை மதிப்பார். இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். சம்பளம் கூடும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும், அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கி, சமூகத்தில் அந்தஸ்தைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமியைச் சென்று வணங்குங்கள்.