Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: கும்பம் - பேச்சுத் திறமை கூடும்! | கே.பி. வித்யாதரன்

கும்பம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
கும்பம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

புத்தாண்டு பிறக்கும் வேளையில் சுக்கிரன் மிகவும் சாதகமான ராசி, நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். வீடு மனை வாங்கும் முயற்சிகளும் பயன்தரும்.

12 ஆம் வீட்டில் சனிபகவான் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் கும்ப ராசி அன்பர்களுக்கு உள்ளது. அந்த ஆர்வத்துக்கு நல்ல பதிலையும் நன்மையான பதிலையும் தருவதாக இந்த 2022 ம் ஆண்டு அமையும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்குப் பத்தாம் வீடான விருச்சிகத்தில் பிறப்பதால் பதவிகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.

2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

புத்தாண்டு பிறக்கும் வேளையில் சுக்கிரன் மிகவும் சாதகமான ராசி நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். வீடு மனை வாங்கும் முயற்சிகளும் பயன்தரும்.

புதனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். பேச்சிலும் சாமர்த்தியம் கூடிவரும். எதிரிகளையும் பேச்சால் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். பிரச்னை ஏற்பட்டுப் பிரிந்து சென்ற சொந்த-பந்தங்கள் இணைவார்கள். வீட்டிலும் வெளியிலும் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். செவ்வாய் பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நிலம் சம்பந்தப் பட்ட விஷயங்கள் லாபகரமாக அமையும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராகு - கேதுவைப் பொறுத்தவரை 20.3.22 வரை உங்கள் ராசிக்கு 10 ல் கேதுவும் 4 ல் ராகும் சஞ்சரிக்கிறார்கள். இதனால் பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு குறையாமல் இருக்கும். இடமாற்றம், சம்பளப் பிரச்னை, சலுகைகளில் பிடித்தம் என்று பல்வேறு நெருக்கடிகள் இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

மார்ச் 21 ஆம் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9 ஆம் வீட்டுக்கு கேது பெயர்ச்சி ஆவதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு உண்டாகும். சிறு சிகிச்சையின் மூலம் சரியாகும். ராகு 3 ஆம் வீட்டிற்குக் குடிபுகுவது மிகவும் சாதகமான அம்சமாகும். மனதில் இருந்த பயம், டென்ஷன் ஆகியன நீங்கும். இதுவரை முயற்சி செய்தும் முடியாமல் போன விஷயங்கள் சாதகமாகும். சகோதர வகையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பங்குச்சந்தை லாபம் தரும்.

குருபகவான்
குருபகவான்

குருபகவான் ஆண்டின் தொடக்கம் முதல் 13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே இருந்து பலன் கொடுப்பதால் பணிச்சுமை அதிகமாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து நீங்கும்.

ஆனால் 14.4.2022 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசியை விட்டு குரு விலகி 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் சொல் பேச்சுக் கேட்டு நடப்பார். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். வீடு கட்டும் யோகம் கூடிவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரையச் சனி இந்த ஆண்டு முழுவதும் தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். கடன் பிரச்னை பற்றிய பயம் உண்டாகும். பணவரவு ஓரளவு இருக்கும். தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். தொலைதூரப் பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்போது தகுந்த முன் ஜாக்கிரதை அவசியம்.

வியாபாரிகள்: மே, ஜூன் மாதங்களில் வியாபாரமும் லாபமும் அதிகரிக்கும், பணியாளர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருங்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களை வெளிப்படையாகச் சொல்லிக்கொடுக்க வேண்டாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய தொழில் முயற்சிகள் அனுகூலமாகும்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

வாடிக்கையாளர்களைக் கவர அறிவிக்கும் சலுகைகள் நல்ல பலனைத் தரும். பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போங்கள். பங்குதாரர்கள் கடந்த காலங்களில் செய்த நல்ல விஷயங்களை நினைத்து அவர்களின் சொற்களைப் பொருட்பருத்தாமல் விடுவதன் மூலம் தொழிலில் பிரிவு ஏற்படாமல் இருக்கும். ஹோட்டல், கட்டடப் பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் ஆகிய தொழிலைச் சேர்ந்தவர்களுக்கு அபிவிருத்தியும் ஆதாயமும் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்: கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டிய காலம். அவசரப்பட்டு அதிகாரிகளிடம் வார்த்தைகளை விடவேண்டாம். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களிலும் அக்கறை காட்டாதீர்கள். உங்களுக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றினாலும் அமைதியாக இருங்கள். விரைவில் உங்கள் பொறுமைக்கான பலன் கிடைக்கும். மே, அக்டோபர், டிசம்பர் ஆகிய மாதங்களில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். சம்பளமும் உயரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அலைச்சல், செலவினங்களை ஒருபக்கம் தந்தாலும் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதாகவும் அமையும்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாளை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள்.