Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: மகரம் - அடிப்படை வசதிகள் பெருகும்! | கே.பி. வித்யாதரன்

மகரம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
மகரம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் காலத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் இதுவரை இருந்த சிரமங்கள் சில நீங்கும். வீட்டில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். பேச்சிலும் இனிமை பிறக்கும். எதிரிகள்கூட உங்கள் பேச்சுக்கு அடிமையாவார்கள்.

கடந்த ஆண்டு ஜன்ம சனி மற்றும் ஜன்ம குருவினால் பல்வேறு இடைஞ்சல்களுக்கு ஆளாகித் தவித்துக்கொண்டிருந்த மகர ராசி அன்பர்களே... சனிபகவான் உங்கள் ராசி அதிபதி. அவர் ராசியிலேயே ஆட்சிபலம் பெற்று அமர்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.

இந்தப் புத்தாண்டு ராசிக்கு 11ஆம் வீடான விருச்சிகத்தில் பிறப்பதால் வாழ்வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் உண்டாகும். முடங்கிக்கிடந்தவர்கள் சுறுசுறுப்பாவீர்கள். வாழ்வில் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். அடிப்படை வசதிகளும் பெருகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு.

சனிபகவான்
சனிபகவான்

வி.ஐ.பிக்கள் அறிமுகமாவதுடன் அவர்களின் அன்பால் பல்வேறு உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கசப்புகள் விலகி கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் காலத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் இதுவரை இருந்த சிரமங்கள் சில நீங்கும். வீட்டில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். பேச்சிலும் இனிமை பிறக்கும். எதிரிகள்கூட உங்கள் பேச்சுக்கு அடிமையாவார்கள். தோற்றத்தில் அழகும் பொலிவும் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொடுத்துத் திரும்ப வராமல் இருந்த கடன் தொகை வசூலாகும். வாழ்க்கைத் துணை உறவினர்களிடையே உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குருபகவான் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்குஸ்தானமாகிய இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுக்குப் பஞ்சம் இருக்காது. எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

2022
2022

ஆனால் 14.4.2022 முதல் வருடம் முடியும்வரை குரு 3ஆம் வீட்டிலேயே அமர்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் ஒருவித டென்ஷன் இருக்கும். இளைய சகோதரர்கள் வகையில் மனத்தாங்கல் வரும். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

ராகு - கேதுவைப் பொறுத்தவரை 20.3.2022 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5ஆம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் அமர்வதால் வேலைச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். வீண் பழி வரக்கூடும். வீண் விவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு முழுவதுமே சனிபகவான் தங்கள் ராசியிலேயே ஜன்ம சனியாகத் தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முறைப்படி உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உணவிலும் கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றக் கொஞ்சம் அலைச்சலும், செலவும் மேற்கொள்ள வேண்டிவரும். பெருந்தன்மையாக நடந்துகொண்டாலும் சிலர் உங்களைக் குறை கூறுவார்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரண்டிக் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரிகள்: முதலீடுகளில் கவனம் தேவை. ஏப்ரல், மே மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொடர்புகள் கிடைக்கும். வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்பட்டுப் பின் நீங்கும். ஜூன் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு, மருந்து, இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்பவர்களுக்கு வியாபாரம் அபிவிருத்தி ஆவதோடு ஆதாயமும் பெருகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை கொடுப்பார்கள். தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

மகரம்
மகரம்

உத்தியோகஸ்தர்கள்: பணிச்சுமை அதிகமாகும். மேலதிகாரியோடு சுமுகமான உறவைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எதிலும் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகை கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளைத் தருவதாகவும், சமூகத்திலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவுசுளிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: திருச்செந்தூர் அருள்மிகு முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.