Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: மீனம் - வெற்றிகள் தேடிவரும்! | கே.பி. வித்யாதரன்

மீனம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
மீனம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

குடும்பத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது மிகவும் அவசியம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். விலையுயர்ந்த ஆபரணங்களைக் கவனமாக கையாளுங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும்.

அனைவருக்கும் தங்களால் ஆன நன்மைகளைச் செய்து தானும் வாழவேண்டும் என்று அயராமல் உழைக்கும் மீன ராசி அன்பர்களே உங்களுக்கு இந்தப் புத்தாண்டு மிகுந்த நற்பலன்களையும் பொறுப்புகளையும் வழங்க இருக்கிறது.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 9 ஆம் ராசியான விருச்சிகத்தில் பிறப்பதால் அனைத்திலும் வெற்றியே உண்டாகும். முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வருத்தங்கள் நீங்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை வாய்க்கும்.

சனிபகவான்
சனிபகவான்

கடந்த ஆண்டுகளில் குடும்பத்தினருக்காகச் செலவு செய்ய வேண்டியிருந்த நிலை மாறும். சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சேமிப்பீர்கள். மதிப்பு மரியாதைக் கூடும். உங்களுக்கு இந்தப் புத்தாண்டு லாப வீட்டில் சுக்கிரனும், புதனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். திட்டமிட்டுச் சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நகைகளை விற்றுப் புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையோடு இருந்த பிரச்னைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் கேது 20.3.22 வரை சஞ்சாரம் செய்வதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். தாழ்வு மனப்பான்மையில் திண்டாடுவீர்கள். ஆனால் 3 ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதையும் சமாளித்து வெற்றிபெறும் மனப்பக்குவம் உண்டாகும். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான போக்கே காணப்படும். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். 21.3.2022 பிறகு ராகு பகவான் இரண்டாம் வீட்டிலும் கேதுபகவான் 8 ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள். இதனால் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பணிச்சுமை காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை. யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை இயக்கும்போது மிகுந்த கவனம் தேவை. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டாம். எப்போதும் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: மீனம் - வெற்றிகள் தேடிவரும்! | கே.பி. வித்யாதரன்

குருபகவான், 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் நின்று பலன் தருவதால் திடீர் பயணங்களால் அலைச்சல்கள், செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவிதப் படபடப்பு வந்து செல்லும். கோயில் போன்ற பொது இடங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

ஆனால் 14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். பொதுவாக ஜன்ம குரு என்றால் நற்பலன்கள் குறையும் என்பது ஜோதிடர்களின் கருத்து. ஆனால் குரு உங்கள் ராசி நாதனாகவும் இருப்பதால் பிரச்னைகள் வந்தாலும் அதைத் தீர்த்து வைப்பவராகவும் இருப்பார். ஆரோக்கியம் சிறிது பாதிக்கும். பணிச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உணவுகளால் அஜீரணம் அலர்ஜி போன்றவை ஏற்படும் என்பதால் வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடும்பத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது மிகவும் அவசியம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். விலையுயர்ந்த ஆபரணங்களைக் கவனமாக கையாளுங்கள். இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள்கூடக் காரணம் இன்றிக் கோபித்துக் கொள்வார்கள்.

ஆனால், சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. லாப வீடான மகரத்தில் சனி ஆட்சிபலம் பெற்று சஞ்சரிப்பதால் திடீர் யோகம், பணப்புழக்கம், பதவிகள் ஆகியன தேடிவரும். திட்டமிட்ட காரியங்களைத் தடையில்லாமல் முடிப்பீர்கள். புது சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் அடைப்பீர்கள். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதைக் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

வியாபாரிகள்: ஜனவரி மாதத்தில் திடீர் லாபம் கிடைக்கும். வியாபாரத்தைப் பெருக்கப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். மே, ஜூன் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடையை உங்கள் விருப்பப் படும் படி விரிவுபடுத்துவீர்கள்.

பழைய சரக்குகளைத் திறமையாக விற்றுத் தீர்ப்பீர்கள். கட்ட வேண்டிய கடனை தொகைகளை முறையாகச் செலுத்துவீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். புரோக்கரேஜ், எண்டர்பிரைஸ், செங்கல், பேக்கரி, வாகன உதிரிபாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். டிசம்பர் மாதத்தில் கூட்டுத்தொழிலில் மேன்மை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள்: பணிச்சுமை இருந்தாலும் அதிகாரிகள் உங்களை மதிப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். இடமாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை சாமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள். ஜனவரி மாதத்தில் உங்களின் தகுதி உயரும். ஜூன் மாதத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும். பதவி உயர்வுகளும் தேடிவரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும் இருந்தாலும் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடையே நற்பெயர் உண்டாகும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை ஆழம் பார்த்தாலும், கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் வெற்றியடையும் செய்யும்.

பரிகாரம்: திருச்சி ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஜம்புகேஸ்வரரைத் திங்கள் கிழமையில் சென்று வணங்குங்கள்.