Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: மேஷம் - செல்வமும் செல்வாக்கும் பெருகும்! | கே.பி. வித்யாதரன்

மேஷ ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்

புதன் உங்களுக்கு சாதகமான ராசியில் சஞ்சரிப்பதால் புத்திக்கூர்மை வெளிப்படும். அனைவரோடும் சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். எப்போதும் எதிர்த்துப் பேசுபவர்கூட உங்கள் வாக்கைக் கேட்டுப் பணிந்துபோவார்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: மேஷம் - செல்வமும் செல்வாக்கும் பெருகும்! | கே.பி. வித்யாதரன்

புதன் உங்களுக்கு சாதகமான ராசியில் சஞ்சரிப்பதால் புத்திக்கூர்மை வெளிப்படும். அனைவரோடும் சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். எப்போதும் எதிர்த்துப் பேசுபவர்கூட உங்கள் வாக்கைக் கேட்டுப் பணிந்துபோவார்.

Published:Updated:
மேஷ ராசிக்காரர்களுக்கான ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்

சென்ற ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவந்த மேஷ ராசி அன்பர்களுக்கு 2022ஆம் ஆண்டு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம். 2021 நவம்பர் மாதம் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் வந்து சஞ்சாரம் செய்யும் குருபகவான் இந்த ஆண்டு முதல் 4 மாதங்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை வழங்கவிருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்கையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். அவரால் ஆதாயம் உண்டு.

ராகு - கேது
ராகு - கேது

வெளிவட்டாரத்தில் இதுவரை மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து நடக்காத காரியங்களை இந்த ஆண்டு கொஞ்சம் அதிகாரத்தோடு பேசி சாதிப்பீர்கள்.

இந்த ஆண்டு உங்களுக்கு எட்டாமிடமான விருச்சிக ராசியில் பிறக்கிறது. அதுவும் செவ்வாய்க்குரிய இடம் என்பதால் கவலைப்பட வேண்டாம். பயணங்கள் அதிகரிக்கும். செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும் என்றாலும் அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.

புதன் உங்களுக்கு சாதகமான ராசியில் சஞ்சரிப்பதால் புத்திக்கூர்மை வெளிப்படும். அனைவரோடும் சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். எப்போதும் எதிர்த்துப் பேசுபவர்கூட உங்கள் வாக்கைக் கேட்டுப் பணிந்துபோவார். உறவினர்கள் தேடிவந்து அன்பு செய்வார்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்தை விற்பது, வேறு சொத்து வாங்குவது அனைத்தும் லாபகரமாக அமையும்.

குருபகவான் 11ஆம் வீட்டிலேயே 13.4.2022 வரை சஞ்சாரம் செய்வதால் திடீர்யோகம், பணவரவு ஆகியவை கிடைக்கும். வராமலிருந்த பணமெல்லாம் வந்து சேரும். கடனை அடைப்பீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

எதிர்மறை எண்ணங்கள் விலகும். மனதில் தைரியமும் நம்பிக்கையும் கூடும். மதிப்பு மரியாதை தேடிவரும். அதிகாரப் பதவிகளும் கௌரவப் பதவிகளும் கிடைக்கும். சிலருக்கு வேலைவாய்ப்பு கைகூடும்.

குருபகவான் 14 ஏப்ரல் அன்று மீன ராசியில் அடியெடுத்துவைக்கிறார். உங்களுக்கு விரைய ஸ்தானமான மீனத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் செலவுகள் அதிகரிக்கும். அதே வேளையில் அவற்றில் பெரும்பகுதி சுபச்செலவுகளாக இருக்கும். கோயில் குளங்களுக்குச் சென்று வருவீர்கள். திருப்பணிகளுக்கு உதவுவீர்கள். சகோதரர்கள் வீட்டுச் செலவுகளை எடுத்துச் செய்வீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.

வாக்கு ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. யாரிடமும் அளவுக்கு மீறிக் கோபப்பட வேண்டாம். விளையாட்டுப் பேச்சுகூட சில நேரங்களில் விபரீதமாகப் போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் கேது 8ஆம் வீட்டில் நிற்பதால் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். உடலிலும் சிறு சிறு உபாதைகள் இருந்தபடியே இருக்கும். வழக்குகளில் கொஞ்சம் தேக்க நிலையே காணப்படும். ஆனால், 21.3.2022 முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்குள் வந்துவிடுவதாலும், கேதுபகவான் 7இல் சஞ்சரிக்க இருப்பதாலும் சின்னச் சின்னக் குழப்பங்கள் இருந்தபடி இருக்கும். தேவையற்ற பதற்றம் அவ்வப்போது வந்து செல்லும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

குருபகவான்
குருபகவான்

இந்த ஆண்டு சனிபகவான் 10ஆம் வீட்டிலேயே சஞ்சாரம் செய்வது மிகவும் சாதகமான பலன்களையே தரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். பணபலம் அதிகரிக்கும். பதவிகள் தேடிவரும். பொது விழாக்களைத் தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். சொத்துத் தகராறுகள் தீரும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை திருமண வாய்ப்புகள் தேடிவரும்.

வியாபாரிகள்: ஆண்டின் முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பிற்பகுதியில் பெரிய முதலீடுகளில் இறங்க வேண்டாம். பாக்கிகளை கொஞ்சம் சிரமப்பட்டு வசூலிக்க வேண்டிவரும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். ஜனவரி, பிப்ரவரி, நவம்பர் மாதங்களில் புதிய வணிக வாய்ப்புகள் கூடிவரும். லாபமும் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். இரும்பு, கமிஷன், மரவகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

பணம்
பணம்

உத்தியோகஸ்தர்கள்: பணிச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பிறரின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிகாரிகள் உங்கள் பணிகளை அங்கீகரித்து முக்கியத்துவம் தருவார்கள். தள்ளிப்போன பதவி உயர்வு சம்பள உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு அயல் நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் தேடிவரும். ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஆகஸ்டு மாதங்களில் பணியிடத்தில் அனுகூலமான சூழ்நிலை நிலவும்.

மொத்தத்தில் 2022ஆம் ஆண்டு முற்பகுதியில் வசதி வாய்ப்புகளை அதிகரிக்கச்செய்து முன்னேற்றம் தரும். பிற்பகுதி செலவுகள் அதிகரிப்பதாகவும் அலைச்சலைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.