Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: ரிஷபம் - பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும்! | கே.பி. வித்யாதரன்

ரிஷபம் -ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மகான்களின் ஆசி கிட்டும். எதிர்பார்த்த விலையைவிடக் கூடுதல் விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் கடனில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடி புகுவீர்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: ரிஷபம் - பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும்! | கே.பி. வித்யாதரன்

மகான்களின் ஆசி கிட்டும். எதிர்பார்த்த விலையைவிடக் கூடுதல் விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் கடனில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடி புகுவீர்கள்.

Published:Updated:
ரிஷபம் -ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

எல்லாப் பெயர்ச்சிகளும் நடக்கின்றன, ஆனால் இன்னும் எங்களுக்கு நல்ல வாழ்க்கை வந்து சேரவில்லை என்று வருந்திக்கொண்டிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே... இந்த 2022ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களும் ஏற்றங்களும் வரப்போகின்றன. உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான விருச்சிக ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு மிக அற்புதமான ஆண்டாக அமையவிருக்கிறது. உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்திப் பல நல்ல வாய்ப்புகளைப் பெற்று மகிழப்போகிறீர்கள்.

தோற்றப்பொலிவு கூடும். அழகும் இளமையும் கூடும். திருமண வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ரிஷப ராசி அன்பர்களுக்குத் திருமண வாய்ப்புகள் தேடிவரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். கொடுத்து நீண்ட நாள்களாகத் திரும்பி வராத பணம் கைக்கு வரும்.

2022
2022

பல நல்ல விஷயங்களுக்காகக் காத்திருக்க நேர்ந்ததே அந்த நிலைமை மாறும். வாழ்க்கைத் துணைவழியில் செல்வாக்கு கூடும். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 9ஆம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகும். கம்பீரமாகச் செயல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கும். பணவரவு அதிகரிக்கும்.

பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். வீடுகட்டும் பணிகள் நல்ல முறையில் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பார்கள். உங்கள் மனதுக்குப் பிடித்ததுபோல் நடந்துகொள்வார்கள்.

புதன் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்யும்போது புத்தாண்டு பிறப்பதால் உங்கள் ஆலோசனையை மதிப்பார்கள். புதிய வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகன் அல்லது மகளின் திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்தி முடிப்பீர்கள்.

குருபகவான், 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு 10-வது வீட்டிலேயே சஞ்சாரம் செய்வதால் அதுவரை பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே யாரோடும் தேவையின்றிப் பேசவேண்டாம். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும்.

ராகு - கேது
ராகு - கேது

குடும்ப விஷயங்களை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். அதிக அறிமுகம் இல்லாதவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். விலை உயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை.

ஆனால் 14.4.2022 முதல் குருபகவான் லாபஸ்தானமான 11ஆம் வீட்டில் அடியெடுத்துவைப்பதால் இவை அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. உறவுகளிடையே இருந்த பகை உணர்வு மாறும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். புதிய நகைகள் வாங்குவீர்கள்.

மகான்களின் ஆசி கிட்டும். எதிர்பார்த்த விலையைவிடக் கூடுதல் விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் கடனில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடி புகுவீர்கள்.

20.3.21 வரை ராசியிலேயே ராகு நிற்பதால் உடல்நலக் கோளாறுகள் வந்துபோகும். முன்கோபமும் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள் மனதை அமைதிப்படுத்த யோகா தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்திலும் கேதுவால் சண்டை சச்சரவுகள் இருக்கும். ஆனால் இவை அனைத்துமே 21.3.2022 மாறும். அதன்பிறகு 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் சஞ்சரிப்பார்கள். இது மிகவும் நல்ல மாற்றம். மனதில் துணிச்சலும் நம்பிக்கையும் நுழைவதால் மன தைரியம் கூடும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

குருபகவான்
குருபகவான்

ராசிக்கு 9ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தடைகள் நீங்கும். பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மகனுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற நிறுவனங்களில் இடம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.

வியாபாரிகள்: வியாபாரம் அமோகமாக இருக்கும். புது முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கொடுக்கல் வாங்கல் நல்லமுறையில் நடைபெறும். வேலையாட்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் ஆண்டின் முற்பகுதியில் சிறு சச்சரவு வந்து நீங்கும். அனைத்தையும் சட்டப்படி செய்வது நல்லது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் எதிர்பார்த்த பெரிய நிறுவனங்களிடமிருந்து வாய்ப்புகள் தேடிவரும். உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

உத்தியோகஸ்தர்கள்: இதுவரை பெரிய அவமானங்கள், பணிச்சுமை எனத் துன்பப்பட்டுவந்த ரிஷப ராசி அன்பர்களுக்கு பெரு மாற்றத்தை இந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டு வரும். வருடத்தின் தொடக்கத்திலேயே உங்களின் கை ஓங்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியன வந்து சேரும். புதிய நிறுவனத்தில் வேலைக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள்மீது அன்பும் பரிவும் காட்டுவார்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் கொஞ்சம் சவாலாக இருக்கும் என்றாலும், அவை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் மாதங்களாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த 2022ஆம் ஆண்டின் பிற்பகுதி சவாலானதாகவும், மையப்பகுதி ஓரளவு வளர்ச்சியையும், முற்பகுதி அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சமயபுரம் அருள்மிகு ஸ்ரீமாரியம்மனை பஞ்சமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.