Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: துலாம் - சுப நிகழ்ச்சிகள் கூடிவரும்! | கே.பி. வித்யாதரன்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022
News
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022

குருபகவான் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 13.04.2022 வரை 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும்.

அர்த்தாஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம குருவால் கடந்த ஆண்டு படாதபாடு பட்டு அதிலிருந்து மீளும் வகையைத் தேடிக்கொண்டிருந்த துலாம் ராசி அன்பர்களுக்கு இந்தப் புத்தாண்டு பெரிய ஆசுவாசம் தரும் ஆண்டாக அமையும். நவம்பர் மாதம் ஐந்தாம் இடத்துக்கு மாறிய குருபகவான் அங்கேயே தொடர்ந்து சஞ்சாரம் செய்வதோடு பல அற்புத பலன்களையும் இந்த ஆண்டு வழங்கவிருக்கிறார்.

உங்கள் ராசிக்கு 2ஆம் இடமான விருச்சிக ராசியில் இவ்வாண்டு பிறப்பதால் இனி உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மன வலிமையும் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த மின்னணுப் பொருள்கள் வாங்குவீர்கள். புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் அனைத்திலும் முன்னணியில் இருப்பீர்கள். சிலருக்குப் புது வீட்டுக்குக் குடிபோகும் வாய்ப்பு ஏற்படும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: துலாம் - சுப நிகழ்ச்சிகள் கூடிவரும்! | கே.பி. வித்யாதரன்

குருபகவான் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 13.4.2022 வரை 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள்.

14.4.2022 அன்று முதல் வருடம் முடியும் வரை குரு 6ஆம் இடத்துக்குச் சென்று மறைவதால் ஒரு வேலையை முடிக்க இரண்டு மூன்றுமுறை மேற்கொள்ள வேண்டிவரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். யாரோடும் பகை கொள்ளாமல் இருப்பது நல்லது. சிலர் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவார்கள். அவற்றைக் கண்டும் காணாமல் விடுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராகு கேதுவைப் பொறுத்த வரை 20.3.2022 வரை ராசிக்கு 2ஆம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரையம், இனந்தெரியாத கவலைகள் வந்துச் செல்லும். அதிகம் பேச வேண்டாம். சின்னச் சின்ன ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து நீங்கும்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராசியிலேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். திட்டமிட்டுப் போகமுடியாமல் இருந்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு என்றாலும், தூக்கம் குறையும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

குருபகவான்
குருபகவான்

4ஆம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பணவரவு அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் திண்டாடுவீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள்: மாறுபட்ட அணுகுமுறையால் தொழிலில் லாபமீட்டுவீர்கள். ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ஆகஸ்டு மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். வாடிக்கையாளர்களைக் கவர புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். தரகு, புரோக்கரேஜ் சம்பந்தமான தொழில் செய்பவர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

உத்தியோகஸ்தர்கள்: இதுவரை அலுவலகத்தில் இருந்த கெட்டபெயர் மாறும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் நெருக்கமாவார்கள். ஜூன் ஜூலை மாதங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களோடு நல்ல முறையில் பழகுவீர்கள். கேட்ட இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும்.

மொத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றி முழக்கமிட வைப்பதுடன் கூடாபழக்க வழக்கங்களிலிருந்து உங்களை விடுவிப்பதாகவும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்குவதாகவும் அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு துர்க்கை அம்மனை பௌர்ணமி திதியில் சென்று வணங்குங்கள்.