Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2022: விருச்சிகம் - சவால்களில் வெற்றி கிடைக்கும்! | கே.பி. வித்யாதரன்

விருச்சிகம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
News
விருச்சிகம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து வெற்றிப்பாதையில் செல்வீர்கள். பேச்சில் இனிமை கூடும். சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள்.

ஏழரைச் சனியின் தாக்கம் முடிந்தும் இன்னும் ஏற்றம் வரவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே உங்களின் கவலைகளைப் போக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகிறது.

இந்த ஆண்டு பிறக்கும்போது புதன் சாதகமான நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறி சாதகமான போக்கு காணப்படும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுமதி அப்ரூவல் ஆகியன உடனே கிடைக்கும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்வதோடு செலவுகளும் அதிகரிக்க ஆரம்பிக்கும் என்றாலும், எதிர்பாராத பணவரவும் வந்து கைகொடுக்கும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

சனி
சனி

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து வெற்றிப்பாதையில் செல்வீர்கள். பேச்சில் இனிமை கூடும். சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள்.

ஆண்டின் தொடக்கம் முதல் 13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். பதற்றத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வீட்டுப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அதேவேளை 14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் அடியெடுத்துவைப்பதால் மன இறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்தப் புது வழி கிடைக்கும். மகப்பேறு வேண்டிக்காத்திருக்கும் அன்பர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். அவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

20.3.2022 வரை ராசிக்குள்ளே கேதுவும் 7ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். தேவையற்ற டென்ஷன் இருக்கும். ஆனால் 21.3.2022 முதல் வருடம் முடியும் வரை ராசியை விட்டு கேது விலகி 12ஆம் வீட்டிலும், ராகு 6ஆம் வீட்டிலும் அமர்வதால் மனதில் நோய் பற்றிய பிரம்மை விலகும். முகம் மலரும். உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்துகொள்வார்.

ராகு - கேது
ராகு - கேது

குடும்பத்தில் மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

இந்த ஆண்டு முழுவதுமே சனிபகவான் தைர்ய ஸ்தானமான 3ஆம் வீட்டில் வலுவாகச் சஞ்சாரம் செய்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டினரால் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள்: புது முதலீடுகளில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பிக் கைப்பொருளை இழக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். தொல்லை தந்த வேலையாட்களை நீக்கிவிட்டு அனுபவமிக்க புதிய வேலையாட்களைப் பணியில் சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஏப்ரல் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இனி உங்கள் பக்க நியாயங்களைப் புரிந்துகொள்வார்கள்.

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகச் சூழல் இனி நிம்மதி தருவதாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஏப்ரல் மாதத்தில் பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். வேலைச்சுமை இருந்துகொண்டேயிருக்கும். ஆனாலும் அதற்கேற்ப உயர்வு உண்டு. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தொல்லை தந்த உயரதிகாரிகள் மனமாற்றம் கொள்வார்கள்.

மொத்தத்தில் இந்த வருடத்தின் இறுதிப் பகுதி சற்றே இடையூறாக இருந்தாலும் மையப்பகுதி மத்திமமாகவும், முற்பகுதி முன்னேற்றுவதாகவும் அமையும்.

பரிகாரம்: உளுந்தூர்பேட்டைக்கு அருகில் பரிக்கல் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.