Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு துலாம் ராசிபலன்

துலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
துலாம்

2022 ஆங்கிலப் புத்தாண்டு துலாம் ராசிபலன்கள்

மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 2-வது ராசியில் 2022 புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் பேச்சு கவனம் பெறும். மனவலிமை அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு 
துலாம் ராசிபலன்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த நவீன மொபைல் போன் கையில் தவழும். சமையலறை நவீனமாகும். புதனின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். புது வீட்டில் குடிபுகுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் ஒவ்வொன்றாகத் தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.

14.4.2022 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைவதால், சின்னச் சின்ன காரியங் களையும் பல முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைக்க வேண்டாம். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம்.

20.3.2022 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். அதிகம் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்து செல்லும்.

21.3.2022 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர்ப் பயணங்கள் உண்டு. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரக்கூடும். பரஸ்பரம் அனுசரித்துச் செல்லவும்.

இந்த வருடம் முழுக்க ராசிக்கு 4-ம் வீட்டில் சனி பகவான் அமர்ந்திருப்பதால், தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும் மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தை விற்றுவிட்டு, புதுச் சொத்து வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாகனம் விபத்துக்குள்ளாகும்; கவனம் தேவை. வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரிகளே! உங்களுக்குப் பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றம் அடைந்தார்களே... நீங்கள் `கடன் வாங்கி வியாபாரம் நடத்தியும் முன்னேற்றம் இல்லையே' என கலங்கினீர்களே... இனி அந்த நிலை மாறும். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள்.

ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ஆகஸ்டு மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். வாடிக்கையாளர்களைக் கவர புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களே! உங்களுக்கு உயர்வு உண்டு. அதிகாரி களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு வளர்ச்சி பெறுவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு செல்வீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு உற்சாகம் தரும். தடைகளையும் கூடா பழக்க வழக்கங்களையும் விலக்கி, வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: பெளர்ணமி நாளில் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் அருளும் துர்கையை வழிபட்டு வாருங்கள். துப்புரவுத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். காரியங்களில் ஜெயம் உண்டாகும்.